Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 08 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | ,

(1):5 சொல்லின் முதலில் இடம்பெறும் எழுத்துகள் (அல்லது)வருக்கம்:

(1):5:1 உயிர் வருக்கம்
, , , , , , , , , , , ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வருக்கமாக வரும்.
ஆத்திச்சூடியிலிருந்து காட்டுகள்:

றஞ்செய விரும்பு, றுவது சினம், யல்வது கரவேல், வது விலக்கேல், டையது விளம்பேல், க்கமது கைவிடேல்,ண்ணெழுத் திகழேல், ற்ப திகழ்ச்சி, ய மிட்டுண், ப்புர வொழுகு, துவ தொழியேல், ஒளவியம் பேசேல்.

(1):5:2 உயிர்மெய் வருக்கம்
, , , , , , , , வ ஆகிய எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும்.

ண்டொன்று சொல்லேல், னி நீராடு, ந்தைதாய்ப் பேண், ன்றி மறவேல், ருவத்தே பயிர்செய், ண்பறித் துண்ணேல், ஞ்சகம் பேசேல்.

"எல்லாரிடமும் இணங்கி, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்க" என்று அறிவுரை கூறுமுகமாய், "ப்போல் வளை" என்பதாக ஆத்திச்சூடியில் வருகிறது. எனினும், இக்கால எழுத்து வழக்கில் '' வருக்கமாய் வருவதில்லை; ஆனால், காட்டுகளாகப் பயன்படுவதுண்டு: "ஞண நமன எனும்புள்ளி முன்னர்" (- தொல்காப்பியம் - எழுத்து 
25); "ஞண நமன வயலள ஆய்தம்" (- யாப்பருங்கல விருத்தி).

ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ, ஆகியன மட்டும் சொல்லுக்கு முதலில் வரும். ஞகரத்துக்குக் காட்டாக, "யம்பட உரை" என்று ஆத்திச்சூடியில் வருகிறது. "நயம்பட உரை" என்பதன் முதற்போலியாக அங்கு '' பயன் படுத்தப் பட்டுள்ளது. எனினும் "மலி" (நாய்) எனும் நல்ல தமிழ்ச் சொல், ''வில் தொடங்குவது ஈண்டு நோக்கத் தக்கது. மேலும்,ஞாலம்=உலகம், ஞெகிழி=கொள்ளிக்கட்டை,ஞொள்கல்=இளைத்தல் ஆகிய அரிய சொற்களும் தமிழில் உள.

யகர வரிசையில் ய, யா ஆகிய இரு எழுத்துகள் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் முதற்போலியாகவும் யு, யூ, யோ, யௌ ஆகிய எழுத்துகள் வடமொழிச் சொற்களுக்காகவும் சொல்லின் முதலில் வருவதுண்டு:

எமன்=மன், ஆனை=யானை. இவையன்றி, யாங்கனம் (எவ்வாறு) யாது (எது) என வினா எழுத்தாகவும் யாகாரம் பயன்படுத்தப் படுவதுண்டு. யகர வரிசை வருக்கத்தில் வடமொழிச் சொற்களான யுகம், யூகம், யோகம், யௌவனம் ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளவையாம்.

வகர வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்:

ரிசை, வாஞ்சை, விறகு, வீடு, வெண்ணெய், வேடன்,வைகறை.

(1):5:2:1 ககர வருக்கம்
டிவது மற, காப்பது விரதம், கிழமைப்பட வாழ், கீழ்மை யகற்று,குணமது கைவிடேல், கூடிப் பிரியேல், கெடுப்ப தொழி, கேள்வி முயல், கைவினை கரவேல், கொள்ளை விரும்பேல், கோதாட் டொழி, கெளவை அகற்று.

(1):5:2:2 சகர வருக்கம்
க்கர நெறி நில், சான்றோ ரினத்திரு, சித்திரம் பேசேல், சீர்மை மறவேல், சுளிக்கச் சொல்லேல், சூது விரும்பேல், செய்வன திருந்தச்செய், சேரிடம் அறிந்து சேர், சையெனத் திரியேல்,சொற்சோர்வு படேல், சோம்பித் திரியேல்.

குறிப்பு:
ச்+அ=; ச்+ஐ=சை; ச்+ஔ=சௌ ஆகிய மூன்றும் தமிழ்ச் சொல்லின் முதலில் இடம் பெறா என்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது:

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே (தொல் - எழுத்து 29).


ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: ங்கு, ட்டை, ட்டம், ருகு, ரடு,த்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'ந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது. அஃது, இரு சொற்கள் சந்திக்கும்போது ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பதாகும். அதைப் "புணரியல்" என்றும் கூறுவர்.

(1):5:2:3 தகர வருக்கம்
க்கோ னெனத்திரி, தானமது விரும்பு, திருமாலுக் கடிமைசெய்,தீவினை யகற்று, துன்பத்திற் கிடங்கொடேல், தூக்கி வினைசெய்,தெய்வ மிகழேல், தேசத்தோ டொத்துவாழ், தையல்சொல் கேளேல், தொன்மை மறவேல், தோற்பன தொடரேல்.

(1):5:2:4 நகர வருக்கம்
ன்மை கடைப்பிடி, நாடொப்பன செய், நிலையிற் பிரியேல்,நீர்விளை யாடேல், நுண்மை நுகரேல், நூல்பல கல், நெற்பயிர் விளை, நேர்பட வொழுகு, நைவினை நணுகேல், நொய்ய வுரையேல், நோய்க்கிடங் கொடேல்.

(1):5:2:5 பகர வருக்கம்
ழிப்பன பகரேல், பாம்பொடு பழகேல், பிழைபடச் சொல்லேல்,பீடு பெறநில், புகழ்ந்தாரைப் போற்றிவாழ், பூமி திருத்தியுண்,பெரியாரைத் துணைக்கொள், பேதைமை யகற்று, பையலோ டிணங்கேல், பொருடனைப் போற்றி வாழ், போர்த்தொழில் புரியேல்.

(1):5:2:6 மகர வருக்கம்
னந்தடு மாறேல், மாற்றானுக் கிடங்கொடேல், மிகைபடச் சொல்லேல், மீதூண் விரும்பேல், முனைமுகத்து நில்லேல்,மூர்க்கரோ டிணங்கேல், மெல்லினல்லாள் தோள்சேர், மேன்மக்கள் சொற்கேள், மைவிழியார் மனையகல், மொழிவ தறமொழி,மோகத்தை முனி.

(1):5:2:7 வகர வருக்கம்
ல்லமை பேசேல், வாது முற்கூறேல், வித்தை விரும்பு, வீடு பெறநில், வெட்டெனப் பேசேல், வேண்டி வினைசெயேல்,வைகறைத் துயிலெழு.

(1):5:2:8 பிறமொழிச் சொற்களுக்கு
பிறமொழிச் சொற்களுக்காக டகரம், ரகரம், லகரம் ஆகியன சொல்லின் முதல் எழுத்தாகப் பயன் படுவதுண்டு:

ச்சு, கசியம், ஞ்சம் போன்றவற்றை அப்படியே எழுதுவதில் தவறில்லை. இடச்சு, இரகசியம், இலஞ்சம் என இகரம் சேர்த்து எழுத வேண்டுவதில்லை.


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புழக்கத்தில் இருக்கும் நாம் பயன்படுத்தி வரும் சொற்றொடர்கள் எழுத்துக்களின் உச்சரிப்பின் உயிர்பித்தல் எவ்வாறு நிகழ்கிறது என்று இந்த வகுப்பில் பொறுமையா அமர்ந்து வாசிக்கும்போது தெரிந்து கொள்கிறேன்...

sabeer.abushahruk said...

//ச்+அ=ச; ச்+ஐ=சை; ச்+ஔ=சௌ ஆகிய மூன்றும் தமிழ்ச் சொல்லின் முதலில் இடம் பெறா என்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது://

//ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: சங்கு, சட்டை, சட்டம், சருகு, சரடு,சத்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்//

எனில், காக்கா, தொல்காப்பியம் சொல்வது தவறென்று ஆகின்றதே?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு