Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்... 83

அதிரைநிருபர் | June 07, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !


அதிரையில் நேற்று இரவு (06-06-2012) யாருமே எதிர்ப்பாராத அளவுக்கு பலத்த சத்தம்கூட்டி காற்றுடன் கூடிய மழை பெய்தது, அன்றைய இரவு சற்றே வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்று காலை (07-ஜூன்-2012) முதல் வெயில் தன் கடமையை வழக்கம்போல் காட்டத் தொடங்கியுள்ளது.

நேற்று வீசியதோ சூறைக் காற்று அதன் தாக்கம் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து கிடந்தது, கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் இருந்த ஒரு சில விளம்பர பேனர்கள் தூக்கி வீசப்பட்டன. இது கட்அவுட் மற்றும் வீண் தம்பட்ட விளம்பரங்கள் செய்யும் ஊதாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று சொன்னால் மிகையாகாது.

நேற்றிரவு மின்னல் வெட்டியதும் மின்சாரம் இருட்டுக்குள் ஒழிந்தே விட்டது இதனால் அதிரை மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் (இது என்ன புதுத் தகவலா என்று முகம் திருப்ப வேண்டாம்) என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் கந்தூரி போதையர்களின் 'காட்டு'க்கத்தல் (ஒலிபெருக்கி) சத்தத்திலிருந்து விடுபட்ட மக்களுக்கு, மின்சாரத் தடை ஏற்பட்ட நேற்றைய இரவு கோவில் திருவிழா மற்றும் பிறமத திருமண விழா என்ற பெயரில் சி.எம்.பி. லைன் மற்றும் புதுமனைத் தெரு பகுதியில் விடிய விடிய சினிமா பாட்டுக்களை ஒலிபெருக்கி வாயிலாக சத்தம் எழுப்பி நாங்களும் உங்களைச் சார்ந்த கந்தூரி போதை பார்ட்டிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தார்கள். 


இரவு முழுவதும் அந்தப் பகுதி பொது மக்களை தூங்கவிடாமல் ஒலிப்பெருக்கிச் சத்தம் மூலம் தொந்தரவு செய்பவர்களை தடுப்பதற்கு நாதியில்லை. கேட்கச் செல்பவனை போதை தலைக்கேறி ஆள்வைத்து அடிப்பவர்களின் வீடுகள் ஊரின் 'நடு'பகுதியில் இருப்பதாலோ என்னவோ !

இந்த இலட்சனத்தில் இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய கோமாளிகளின் துண்டு பிரசுரம் ஒன்று அதிரையில் ஊர் பெரியவர்கள் மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடும் புகழ்பெற்ற பள்ளிவாசலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மாவட்ட ஜமாத்துல் உலமா(!!??) சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற துண்டு பிரசுரங்களை அனுமதித்த உலமாக்களும், ஊரில் இருக்கும் மார்க்க அறிஞர்களும், பெரும் தலைகளும் எப்படி முன் வருவார்கள் மேற்சொன்ன கேடுகெட்ட போதைப் பார்ட்டிகளின் அலுச்சாட்டியத்தை தடுக்க? முன்னேறவேண்டிய சமுதாயம் பின்னோக்கி போகிறது என்ற வருத்தம் நன்னோக்கு கொண்ட ஒவ்வொருவரின் மனதில் அழுத்தமாக பதிவதை மறுக்க முடியாத உண்மை.

ஒரு காலத்தில் பிறமதக் கலாச்சாரமான 'சபரிமலை சீசனில்' மட்டுமே ஒலிப்பெருக்கி சத்தங்கள் காதில் விழுந்த காலம் கரையேறிவிட்டது, ஆனால் இன்றோ ஊரில் நான்கு திசைகளிலும் 50க்கு (!!?) மேற்பட்ட பிறமத வணக்கஸ்தலங்கள் உள்ளது இவைகளில் சில கோவில்கள் மாதக்கணக்கில் ஒலிப்பெருக்கியை வைத்து இரவு நேரங்களில் சினிமா பாடல்களும், அதிகாலை நேரங்களில் அவர்களின் பக்திப்(!!!???) பாடல்களையும் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருப்பதால் சகோதரத்துவத்தை மட்டுமே போதிக்கும் இஸ்லாமியர்களிடமிருந்து நன்மதிப்பை இழக்கிறோம் என்பதும் அம்மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவைகளின் தாக்கம் போதையாக தலைக்கேறி அவைகளின் பின்விளைவுகள் அறியாது உள்ளார்கள் அக்கம்பக்கத்தில் கோவில்களை கொண்டுள்ள நம் மக்கள்.

“அறிவை மழுங்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெரியவே நான் வந்துள்ளேன்” என்று சொன்ன நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா இல்லையா என்பதை இசைக்கு கொஞ்சமாகவோ கூடுதலாகவோ அடிமையாகியுள்ள மனசாட்சியுள்ள நற்சிந்தனைகளுக்கு காது கொடுக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை பின் வரும் இறைவசனமும் அதற்கான விளக்கமும், மற்றும் தொடர்ந்து வரும் நபிமொழியை நிதானமாக வாசித்து பருங்கள்..

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6


இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.


என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும், பாட்டையும், மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
சர்வசாதாரணமாக  உலாவரும் இஸ்லாம் வெறுத்த இசை குறிப்பாக சினிமா இசை இன்று ஒவ்வொரு வீடுகளிலும், பள்ளிக்கூடம் செல்லும் வாகனங்களிலும், ஆட்டோக்களிலும், பயனம் செய்யும் பிற வாகனங்களிலும், அலைப்பேசிகளிலும் ஒலிக்கிறதே…. இப்படியிருக்க மலக்குமார்கள் நமக்காக நல்ல பிரார்த்தனைகளை செய்வார்கள் என்று தப்புக்கணக்கு போடுவது தவறு. (இசை தவறு என்று சொன்னால், கோபப்படுவதில் முன்னனியில் இருப்பவர்கள் முஸ்லீம்களே அதிகம். அதற்கு அவர்கள் தவறான விளக்கங்களும், மலுப்பல் பதில்களும் தந்து சமாளிப்பார்கள்).

ஒலிப்பெருக்கி வைத்து விடியவிடிய இசைக்கச்சேரி நடத்துவது, கோவில் பாட்டிகளிலிடமிருந்து கந்தூரி பார்ட்டிகள் கற்றுக்கொண்டார்களா? அல்லது கந்தூரி பார்ட்டிகளிடமிருந்து கோவில் பார்ட்டிகள் கற்றுக்கொண்டார்களா?
இவைகளை தடுப்பது யார்?
-அதிரைநிருபர் குழு.

83 Responses So Far:

அதிரை தாருத் தவ்ஹீத் said...

தர்ஹாக்கள் இறைவனின் அடையாளச் சின்னங்களாம்.

இந்தக் கோமாளிங்க போடும் கூத்துத் தாங்க முடியல ...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தஞ்சை மாவட்ட உலமா சபை கூட்டத்தில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரம் தான் தர்ஹாக்கள் இறைவனின் அடையாளச் சின்னங்கள், இவற்ற தடுக்கவோ எதிர்க்கவோ அதிரையில் உள்ள எந்த ஒரு உலமாவும் முன்வராதது வேதனையளிக்கிறது. மர்ஹூம் அலீ ஆலிம் அவர்கள் போல் தைரியமாக ஷிர்க் பித்அத்களை பொது இடங்களிலும், பொதுமேடைகளிலும், பள்ளிவாசல்களிலும் எதிர்க்கும் ஓரு உலமா இன்று அதிரையில் காண்பது அறிதாக உள்ளது. இது சரியான போகு அல்ல...

இசை போதையிலிருந்து நம்மவர்களை விடுதலை செய்துவிட்டுத்தான் மாற்றுமதத்தவரிடம் நாம் சென்று தட்டிக்கேட்க முடியும்.

அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாப்பானாக....

sabeer.abushahruk said...

நம்பிக்கை சார்ந்து அல்ல, சிலர் வீம்புக்காகவே இத்தகைய களியாட்டங்களில் ஈடுபடுவதாகக் கேள்விப்பட்டேன்.

அல்லாஹ் ஆலம்.

அன்புடன் புகாரி said...

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு அன்புச்சகோ ஜமீல் தன் மறுமொழியில் ஒன்றுமே சொல்லவில்லையே? என்ன நடக்கிறது இங்கே? எனக்கு அறிந்துகொள்ளும் ஆர்வம் தலைக்கேறுகிறது.

நான் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் சகோ ஜமீல் அவர்களுடன் இதுபற்றி உரையாடி இருப்பது ஞாபகம் வருகிறது. இன்று எப்படி மாறி இருக்கிறார் என்றும் அறிய ஆவலாய் உள்ளேன்.

யதார்த்தங்களிலிருந்து எவ்வளவு தூரம் பொய்மையைப் பற்றிக்கொண்டு விலகப் போகிறோம் நாம்?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

இஸ்லாத்தில் இசை, நிகழ் வெளியீடு, இலங்கை - அனார் (பகுதி 1)

“உன்னை அன்றி வேறெதையும் நினைத்தறியேன்......
உன் புகழ் கூறாத சொல் அறியேன்......
அணை போட்டுத் தடுக்காத அருள் வெள்ளமே......
நெஞ்சில் அலைமோதும் நினைவெல்லாம் நீ யல்லவோ...... ”
என்ற காயல் ஷேக் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கீதத்தை என் சிறுவயதில் கேட்டபோதெல்லாம் மிகவும் அந்தரங்கமான நெகிழ்வான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு.
இன்றும் மனம் கனத்திருக்கும் தனிமையில் இப்பாடலைக் கேட்கும்பொழுது அக்குரலின் உணர்வு ஒருவித பரிதவிப்பைத் தருவதுண்டு. அந்தப் பாடலின் இரண்டாம் பகுதியில் அழகான வரி ஒன்று பாடப்படும் :

“தனிமைக்குள் தனிமையாய் இருப்பவனே ...... ”

இவ்வரியை அப்பாடகன் பாடும் தருணம், உருகி வந்துவிழும் கண்ணீர்த் துளிகள் அவனுடைய குரலின் இனிமைக்காகவா ? அந்த வார்த்தையின் ஆழ்ந்த அர்த்தத்திற்காகவா ? பாடலின் மெட்டுக்காகவா என்று எனக்கு இப்போதும் சரியாகத் சொல்லத் தெரியவில்லை.

நான் மிகச் சிறுமியாக இருந்த நாட்களில், இசையை உணர்வதற்கான பல வாய்ப்புகள் வீட்டிலிருந்தன. எனது தந்தை மிக நேர்த்தியான அரபுமொழிப் பாடல்களை / ஹஸீதாக்களைப் பாடக் கேட்டு வளர்ந்தவள். எனது தந்தையின் தந்தையும் ஆலிமாக இருந்தவர். மாலைப்பொழுதுகளில் அவரது சாய்மணைக் கதிரையில் சாய்ந்தபடி பாடிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவரது மடிக்குள் அமர்ந்திருப்பேன். அரபுச் சொற்களுக்கிருக்கும் மாயத்தன்மை வசீகரிக்கக் கூடியதும் தனித்துவமானதும் ஆகும். பளபளப்பான, கம்பீரமான, கூரான வாள்போன்றது அராபியமொழி.

தமிழ்மொழியும், அரபுமொழியும் இரண்டறக் கலந்த சொற்பொழிவுகள், கலைநிகழ்வுகள் என ஊரே களைகட்டியிருக்கும். இசைமயமான காலமொன்றுவரும், அது ‘ரமலான்’ நோன்புக் காலம். ஒரு மாதம் முழுவதும் சிறுவர்களாகிய நாங்கள் இரவில் தூங்குவதே இல்லை. றபானின் ஓசையைக் கேட்பதற்காக காதுகளைத் திறந்து வைத்துக் கண்களை மூடிக்கிடப்போம். நள்ளிரவு மின்சாரமில்லாத அந்நாளில் ஊரில் கைவிளக்கைச் சிறுவன் ஒருவன் கைகளில் பிடித்தபடி முன்னே நடக்க றபான் இசைப்பவர், ‘பாவா’ தனது றபானை மிடுக்குடன் பிடித்துப் பலமாகத் தட்டித் தட்டி ஒலியெழுப்பி ஒவ்வொரு வீதியாக உறங்கும் மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் செல்வார். அவரது வாயிலிருந்து ‘ஹஸீதா’ அதிர்ந்துவிழும். அவ்விரவின் தனிமைக்குள் அந்த முதிய பாடகன் தன் ஆண்மையான தீராத குரலைச் சிதறவிட்டு, வெறும் கால்களை மணலில் புதையும்படி நடந்து செல்வதை பச்சைநிறத் தலைப்பாகை மறையும்வரை நானும் கோடி நட்சத்திரங்களும் பார்த்து நிற்போம். என்றைக்காவது ஒருநாள் அவரை அந்நள்ளிரவில் ‘ஸஹர்Õ நேரம் வீட்டுக்கழைத்து தேனீர் கொடுப்பார்கள். அவர் தேனீர் அருந்தும் வரை அந்த றபானைத் தொட்டு மெல்ல தட்டித் தட்டி அதிசயத்தைப் பார்த்து நிற்பேன்.
(இன்னும் இசைக்கும்....)

அன்புடன் புகாரி said...

இஸ்லாத்தில் இசை, நிகழ் வெளியீடு, இலங்கை - அனார் (பகுதி 2)

இன்று அந்த அற்புதங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. இருந்த இசை மரபுகளையும் முற்றாக இழந்து நிற்கிறோம். ‘இஸ்லாத்தில் இசை’ எனும் இந்த நூலை வாசிக்கையில், என் சிறு வயது உணர்வுகள், மிகுந்த ஆதங்கத்துடன் நினைவின்மேல் எழுந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நெடுங்காலமாக இசை தடைசெய்யப்பட்ட ஒன்று எனும் கருத்தே நிலவியது. இசை கேட்டால் “நரகத்தில் இரு காதுகளிலும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமெனÓ பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடுங்கியவர்களாகவும், வெருண்டோடுபவர்களாகவும் இருந்தோம்.

எதற்குத்தான் அன்று இசை இருக்கவில்லை. பிறந்த குழந்தையை முக்காடிட்ட பெண் மெல்லிய குரலில் பாடிப்பாடி தூங்க வைப்பதிலிருந்தே இஸ்லாத்தில் இசை அல்லது பாடல் கேட்பதற்கான முதல் வாய்ப்பு உருவாகி விடுகின்றது. இசையுடன் தொடங்கி இசையுடன் முடியும் வாழ்வு முறையே எங்களது கிராமத்திலிருந்தது என, எனது தந்தை விவரிக்கக் கேட்டிருக்கிறேன்.

சுமார் 60&70 வருடங்களுக்கு முன்புள்ள திருமண நிகழ்வு : பறை அடிப்பவர் ஒலி எழுப்பி முன்செல்ல, குரவை இடும் முஸ்லிம் பெண்கள் கூட்டமாய் குரவையிடும் ஓசையோடு பின்னே நடந்துவர, நடுவில் மணமகனைச் சூழ்ந்தபடி ஆண்கள் அரபு கீதங்களைப் பாடியவாறு, கிராம வீதிகளில் ஊர்வலம் வருவார்கள்.

மரணித்தவரை சந்தூக்கில் கொண்டு செல்லும்போதும், ‘பைத்Õ ஐப் பாடி நல்லடக்கத்திற்கு எடுத்துச் செல்லும் வழக்கமும் இருந்திருக்கிறது.

மகிழ்ச்சிகரமான நிகழ்வொன்று நடக்கும் வீட்டுக்கு, ‘பக்கீர் பாவாக்களை’ அழைத்துவந்து இரவில் தொடங்கி அதிகாலைவரை இடம்பெறும் இசையும், நடனமுமான கோலாட்டம் போன்றதான இசை வடிவங்களும் இருந்துள்ளன. பெண்கள் தனித் தனி குழுக்களாக இசைத்துப் பாடுகின்ற ‘மௌலூதுÕ எனப்படும் ஒருவித கதைப் பாடல்கள் இன்றும் சில இடங்களில் பெண்களால் பாடப்பட்டு வருகின்றன.

உலகில் இசையோடு சம்பந்தப்படாத மதங்கள் எவையுமில்லை. மதங்களை மனிதர்களிடம் எடுத்துச் சென்றதில் இசைக்கு தனிப் பங்குண்டு. ‘சூஃபிகள்Õ அவர்களுக்கான தனித்த இசை வடிவங்களையும், நிலவிவருகின்ற இசையில் நிறைந்த தாக்கத்தைச் செலுத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உலகின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஐந்து வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த ‘அதானைÕ நபிகளின் காலத்தில் மிக இனிமையாகக் கூறியவர் கறுப்பினத்தவரான பிலால் (ரழி) அவர்களாகும். தன்னிகரற்ற அவரது குரல் வளமும், இசைத் தன்மையும் மிகப் பிரபலமானது. பிலால் (ரழி) அவர்கள் “புல் புல்’’ (பாடும் பறவை) என்று நபிகளால் செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.

தாவூத் (நபி) க்கு வழங்கப்பட்ட வேதத்தை, இசையினூடாக அவர் மொழியும் அழகில் மனிதர்கள் மயங்கினர். பறவைகளோ அவரது குரலின் இனிமை கேட்டு, சற்று நின்று தாமதித்து செவிமடுத்துப் பின் பறந்து சென்றன என்று சொல்லப்படுகின்றது.

“எங்கள் மீது ஒரு பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது’’

இவ்வரிகள் மக்காவிலிருந்து வெளியேறிய நபி அவர்களை, மதீனாவின் மக்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி, மகிழ்ச்சியில் பாடி வரவேற்று இசைக்கப்பட்ட பிரபலமான பாடலாகும்.

இசை என்பதே ஒருவகை ஆன்மீகம்தான்.

எம்முடைய இசையை அறிவதற்கான, ஓரளவு ஆறுதலான விடயங்கள் இந்த நூலில் உள்ளன. ஹராம், ஹலாலுக்கிடையிலான தெளிவான பார்வை சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. ஆகுமான இசை என்பது என்ன ? எத்தகைய இசை ஆகுமானதில்லை? என்ற இரு கேள்விகளுக்கும் இந்நூலில் பதில் இருக்கிறது. நடு நிலைமையான ஒரு சிந்தனையை வலிமையாகப் பதிவு செய்திருக்கிறது. பல ஆதாரங்களை முன்நிறுவி முற்றிலுமாக இசையை இஸ்லாம் மறுக்கவில்லை என்ற கருத்தை தெளிவுபடுத்துகின்றது. ஆனபோதிலும், மேலும் தெளிவு பெறவேண்டிய விடயங்களுக்கான தேவைகள் காணப்படுகின்றன. எனவே இந்த நூலை ஆரம்ப முன்னெடுப்பாகக் கொள்ளமுடியும்.

மேலும் இந்நூலில் கூறப்பட்டது போல :
“நதிக்கரைகளில் மரங்களின் நிழலில்
இசைக்கருவிகளின் நரம்புகள் இசைக்கும்
மெல்லிய கவிதைகளை
ரசிக்கத் தெரியாதவன்
கடின சித்தம் கொண்டவனும்
கழுதைக்கு நிகரானவனுமாவான்!”

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களை வாதம்அழகாக இருக்கிறது ஆனால்

ஏற்புடையதாக இல்லை ..நீங்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும்

ஷேக் முகமது பாடல்கள் ..இந்த நூற்றாண்டு கவி பாடல்களின்

ஆதாரம் ..இவைகளெல்லாம் நகைப்புக்குரியது ..சேக்முகமது

பாடல்களை எத்தனையோ இணை வைப்பு பாடல்கள் உண்டு

உதாரணத்திற்கு ஒரு பாடல்>>>>>>வெற்றி பெற வேண்டுமா

விரைந்தோடி வாருங்கள் முத்துப்பேட்டை வேந்தரிடம் மனமுருகி கேளுங்கள் 'இல்லையென்று சொல்லாத வள்ளல் ..அந்த இனியவரின்

பார்வையிலே தீர்ந்து விடும் அல்லல் ..எல்லோர்க்கும் பொதுவான நீதர்

அவர் எங்கள்செய்குதாவித் ஓலி நாதர் அவர் எங்கள் ...<<<<<.,

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ..இஸ்லாம்

பகுத்தறிவான எளிமையான மார்க்கம் ..வாழ்வின் தேவையை

சுருக்கி கொண்டு இறை வணக்கம் ..மறை ஓதுதல் ..

நற்பணிகள் செய்தல் இவைதாம் ..அடிமையாகும் எந்த பழக்க வழக்கமும்

இஸ்லாத்தில் அனுமதி இல்லை ..இசை ஏன் அனுமதி இல்லை என்பதற்கு

ஒரே ஒரு உதாரணம் ..வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே ஆனால்

இனிய இசையில் எந்த வார்த்தைகளை போட்டாலும் நாம் பாடி விடுவோம்

அம்மா வை ..தெய்வம் ..தினமும் வணங்கு ..என்கிற தோரணையில் எத்தனையோ

பாடல்கள் ..என் இசை கேட்டால் புவி அசைதாடும் .என்ற பாடல் ஏற்புடையதா

.சாமி ..கடவுள் என்ற வார்த்தைகள்

தமிழ் வார்த்தை தான் என்றாலும் நம்மவர் அல்லாஹ் .ரஹ்மான் படைத்த ரப்பு ..

என்றே கூறுவோம் அனால் சர்வ சாதாரணமாக நம் உணர்வுக்கு அப்பாற்பட்ட வார்த்தைகள்

அப்பாற்பட்ட கொள்கைகளை இசை வந்து நம் உள்ளத்தில் வந்து சேர்த்து விடும் ..மனதை

பால் படுத்தி விடும் ..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுன்னத் ஜமாத் பேரியக்க பெயரில் இருக்கும் இந்த அடையாளச் சின்னங்களின் அங்கத்தில் அன்னிய சதி ஊடுருவி இருக்கலாம்.அல்லாஹ் அவர்களையும் மன்னித்து நேர்வழிப்படுத்த துஆச் செய்வோம்.

பெற்றோர்கள், முன்னோர்கள், முஸ்லிம்கள், அரேபியர்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்பதல்ல மார்க்கம், இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை ஏற்பதே தூய இஸ்லாமியம்.

அதிரை சித்திக் said...

இஸ்லாம் மனித வாழ்வை

அழகான வழியில் கொண்டு செல்லும்

எளிமையான மார்க்கம் சட்ட திட்டங்கள்

நபிகளார் முஹம்மத் (ஸல்)அவர்கள் காலத்திலேயே

நடை முறை படுத்த பட்டு ..முடிவற்றது .புதிதாய்

நாமே செயல் படுதல்கூடாது அதிலும் திறமை வாய்ந்த கவி

.தன்கவியால் மிக இலகுவாக மனித மூலைக்குள்

இனிய கவியால் புகுத்திவிட முடியும் ..எனவே

ஐந்து கடமைகள் .ஹராம் ஹலால் எது ..நம் வாழ்வை

எப்படி சீரமைத்து கொள்ளல் .என்ற ரீதியில் சிந்தித்தால்

போதுமானது ..கவிதைக்கு இசை நண்பன் இசைக்கு

இசை வாத்தியங்கள் உயிர் ..கவியை பதிப்போடு

நிறுத்தி கொண்டால் நலம் ..

அதிரை சித்திக் said...

சுன்னத் ஜமாத் பேரியக்க பெயரில் இருக்கும் இந்த அடையாளச் சின்னங்களின் அங்கத்தில் அன்னிய சதி ஊடுருவி இருக்கலாம்.அல்லாஹ் அவர்களையும் மன்னித்து நேர்வழிப்படுத்த துஆச் செய்வோம்.

பெற்றோர்கள், முன்னோர்கள், முஸ்லிம்கள், அரேபியர்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்பதல்ல மார்க்கம், இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை ஏற்பதே தூய இஸ்லாமியம்.

அதிரை சித்திக் said...

ஜாபர் ..சூப்பர் ..

நல்லகருத்து ..

அதிரை சித்திக் said...

இஸ்லாம் உலகின் பல பகுதிகளில்

பரவிய சமயம் அந்தந்த கலாசாரத்தை

ஒட்டிய பழக்கம் வருவதுண்டு அதனை

கலைந்து எரியாத காரணத்தினால் பக்கீர்மார்கள்

போன்ற புற்றீசல்கள் நம்மவர் வாழ்வில்

இஸ்லாத்தினை கொச்சை படுத்தும்

செயல்கள் காணப்படுகின்றன ..சீக்கிய

மதம் பற்றி படித்து ஆராய்ந்தேன் ..இந்த பக்கீர்கள் தான்

காரணம் இஸ்லாமிய ஆட்சி காலத்தில் இது போன்ற

மடமைகள் கண்டுகொள்ளாததால் ..அழைப்பு பணி

சரி வர,,. சரி வர மேற்கொள்ளாததால் ..அழகிய பஞ்சாப்

மாநிலம் நூலிலையில் இஸ்லாத்தை தவறவிட்டு

ஒரு மதமே உருவாக்கி விட்டது ..பக்கீர் பார்க்க பரிதாமாக

இருந்தால் தர்மம் செய்து அனுப்பி விடுங்கள் அவரை அமரவைத்து

அவர் உலரும் வார்த்தைகளை வேதமாக எடுத்துக்கொள்ளாதீர்

இந்த தன்மை நாகூர் பகுதிகளில் இன்றும் உண்டு ..

அதிரை சித்திக் said...

குரு நானக் ..

இசையால்தான் மக்களை கவர்ந்தார் ..

இசைதான் சீக்யர்களை முக்கிய வழிபாடு ..

அன்புடன் புகாரி said...

>>>>>>M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது… சுன்னத் ஜமாத் பேரியக்க பெயரில் இருக்கும் இந்த அடையாளச் சின்னங்களின் அங்கத்தில் அன்னிய சதி ஊடுருவி இருக்கலாம். அல்லாஹ் அவர்களையும் மன்னித்து நேர்வழிப்படுத்த துஆச் செய்வோம். பெற்றோர்கள், முன்னோர்கள், முஸ்லிம்கள், அரேபியர்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்பதல்ல மார்க்கம், இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை ஏற்பதே தூய இஸ்லாமியம்.<<<<<

அன்பிற்கினிய சகோ ஜஹபர் சாதிக் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்!

அந்தக் கட்டுரை நான் எழுதிய கட்டுரை அல்ல. அது அனார் என்ற இலங்கை முஸ்லிம் பெண் ஒருவர் எழுதியது. இந்த மாத உயிர்மையில் வெளிவந்ததை எதேச்சையாய்க் கண்டேன். இந்தத் தலைப்பை ஒட்டி இருந்ததால் அக்கட்டுரையில் எதையுமே வெட்டாமல் அப்படியே இங்கே இட்டேன்.

ஆனால் உங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான எந்த பதிலும் வரவில்லை என்பது மிகுந்த அதிருப்தியை அளிக்கிறது.

இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை ஏற்பதே தூய இஸ்லாமியம் என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால், இசை பற்றி இஸ்லாம் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை ஒன்றுவிடாமல் இங்கே இடுங்கள். இளையவர்களுக்கும் புரியும்படி எடுத்துரையுங்கள். அதைவிட நற்காரியம் வேறு இருக்க முடியுமா? அதுதான் நீங்கள் ஓர் இஸ்லாமியனாய்ச் செய்யவேண்டியது. அதைவிட்டுவிட்டு அன்னிய சதி, ஊடுருவல், மன்னிப்பு என்று யார் எவர் என்ன சொல்கிறார் ஏன் சொல்கிறார் என்று ஏதும் அறியா நிலையில் நீங்களே சாபமிடுவதைப்போல அடுக்கிச்செல்வது சரியா?

இது இணையம், இணையத்தில் எழுதிவிட்டு, எவருமே வாசிக்கக்கூடாது எவருமே கருத்துச் சொல்லக்கூடாது என்று நினைப்பது ஏற்புடையதா என்று நீங்களே கூறுங்கள். விமரிசனங்களை சந்திக்க விரும்பாத ஆக்கம் என்று ஓர் ஆக்கம் நானறிந்து இல்லை.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ அதிரை சித்திக் அவர்களுக்கு,

>>>>>சேக்முகமது பாடல்களில் எத்தனையோ இணை வைப்பு பாடல்கள் உண்டு<<<<<

இணைவைப்புப் பாடலுக்குக் கண்டனம் தெரிவியுங்கள். இணைவைப்புப் பாடல்களைக் கேட்காதீர்கள். ஆனால் இசை ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்? ஹலால் உணவுதான் உண்ணவேண்டும் என்பதற்காக உணவே வேண்டாம் என்றா சொல்வீர்கள்? எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை நீக்கும் அன்னப் பறவைபோல்தான் மனிதன் வாழவேண்டும் இந்தக் காலத்தில்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.

குரான் ஓதுதல் இசை
பாங்கு சொல்லுதல் இசை

இசை வேண்டாம் என்று எப்படிச் சொல்வீர்கள்?
இசைக்குள் இணைவைப்பு போன்ற
தகாதவை வேண்டாம் என்று சொல்லுங்கள்.
அதுவே சரி.

>>>>>அடிமையாகும் எந்த பழக்க வழக்கமும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை<<<<<

மனிதன்தான் மனிதனையும் விலங்குகளையும் அடிமையாக்குகிறான். அடிமைகள் பற்றி குரானிலும் உண்டு. கலையும் இலக்கியமும் யாரையும் யாரையும் அடிமைப்படுத்துவதில்லை. துன்பக்கடலை நீந்தும் போது தோணியாவதும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதும்தான் கீதம்.

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர் புஹாரி அவர்களுக்கு,

இந்த பதிவில் இசை தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு போதுமான ஆதாரம் குர் ஆன் வசனம் மற்றும் நபிமொழியும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது,

குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிமுறைகளில் இசை ஒரு வழிபாடாக இருந்துள்ளது என்பதற்கான ஆதராங்களை நீங்கள் எடுத்துக்காட்டுங்கள். பிறகு இசை கூடுமா? கூடாதா? என்பதை ஒரு தனி பதிவி விவாதிக்கலாம். இதை விடுத்து யதார்த்தம்... நடைமுறை... என்று எவரோ எழுதிய கட்டுக்கதைகளை வைத்து இசைகூடும் என்று விவாதிப்பது நேரவிரயமே.... நிச்சயம் தெளிவுபெறவே முடியாது.... இது தான் கடந்தகால வரலாறு....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் புஹாரி அவர்களுக்கு,

//மனிதன்தான் மனிதனையும் விலங்குகளையும் அடிமையாக்குகிறான். அடிமைகள் பற்றி குரானிலும் உண்டு.//

அடிமைகள் பற்றி குர்ஆனில் உள்ளது என்று சொல்லும் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை தெளிவாக விளக்கவும்.


//உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.

குரான் ஓதுதல் இசை
பாங்கு சொல்லுதல் இசை////

யதார்த்தம் பற்றி பேசும் நீங்கள்... மேலே குறிப்பிட்டுள்ளது அறிவுக்கு பொருத்தமுள்ளதாக எனக்கு தெரியவில்லை... இவைகளில் இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்படுள்ளதா?

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ ஹசன் புஹாரி அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.

இசை நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதை குரான் ,ஹதீஸ் இரண்டும் நமக்கு போதிக்கும் போது,உங்களுக்கு மட்டும் ஏன் இந்த முரண்பாடு?ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமுக்கு இது அழகல்லவே?

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிமுறைகளில் இசை ஒரு வழிபாடாக இருந்துள்ளது என்பதற்கான ஆதராங்களை நீங்கள் எடுத்துக்காட்டுங்கள்<<<<

இஸ்லாமில் இசை ஒரு வழிபாடாக இருந்தது என்று நான் எங்கும் சொல்லவில்லையே. இஸ்லாமில் இசை கூடாது என்று சொல்வது ஏற்புடையதல்ல என்றுமட்டுமே கூறுகிறேன்.

தொழுகையில் ”அல்லாகு அக்பர்” என்று எப்படிக் கூறுவீர்கள்? ஒருமுறை நீங்களே இப்போது சொல்லிப்பாருங்கள். அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா?

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட
தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள்
ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான்
தாலாட்டித் தூங்க வைப்பாள்

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும்
இசை நிறைந்து இருக்கிறது
அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும்
தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும்

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால்
அது இரு நிலையில் தெளிவாக இருக்கும்
இது ஹலால் இது ஹராம்

நல்ல கவிதை ஹலால்
தவறான கவிதை ஹராம்
நல்ல இசை ஹலால்
தவறான இசை ஹராம்

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே
சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது
புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்

எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது
மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது

என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி
மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல்
இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே
அதை அதிரையில் மட்டுமல்ல
சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன்

இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

>>>>அடிமைகள் பற்றி குர்ஆனில் உள்ளது என்று சொல்லும் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை தெளிவாக விளக்கவும்.<<<<

மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான்
சான்று குரானிலேயே உண்டு
மேலும் தெளிவு வேண்டுமெனில் மீண்டும் கேட்கலாம்

கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை
மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன

>>>>>>>>>>>//உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை. அதனோடு நீங்கள் குழைவது இசை. குரான் ஓதுதல் இசை பாங்கு சொல்லுதல் இசை////
யதார்த்தம் பற்றி பேசும் நீங்கள்... மேலே குறிப்பிட்டுள்ளது அறிவுக்கு பொருத்தமுள்ளதாக எனக்கு தெரியவில்லை... இவைகளில் இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்படுள்ளதா?<<<<<<

இசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது. இதைத்தானே சொல்ல வருகிறீர்களா சகோ?

முதலில் இசை கூடும் என்று ஏற்றதற்கு ஒரு நன்றி.

கருவிகள் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?
உங்கள் வாய் இசைக்கான கருவிதான்
காற்றும் மரங்களும் சேர்ந்தால் அது இசைக்கான கருவிதான்
இப்படியே உலகில் உள்ள எல்லாப் பொருளும் இசைதரவல்லவை
உலகில் உள்ள அனைத்துமே இசைக்கருவிகள்தாம்.

தாய் தன் பிள்ளையின் வயிற்றில்
வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள்
அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்
இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று
கணக்கிட்டுப் பாருங்களேன். சுவாரசியமாய் இருக்கும்!

அன்புடன் புகாரி

ZAKIR HUSSAIN said...

"தர்ஹாக்கள் இறைவனின் அடையாளச்சின்னங்கள்"...இப்படி நோட்டீஸ் அடிப்பவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

பிரபஞ்சத்தை படைக்க சக்தி பெற்றவனுக்கு மனிதனுக்கு தான் யார் என்று காட்ட செங்கல் கட்களும் சிமென்ட்டும் தேவையில்லை. இதை நோட்டீஸ் அடித்தவர்கள் இந்த உச்சி வெயிலில் ப்ரூஃப் திருத்தும் நேரத்தில் கூட உணரமுடியாமல் போனதுதான் ஆச்சர்யம்

இப்னு அப்துல் ரஜாக் said...

// இது போன்ற துண்டு பிரசுரங்களை அனுமதித்த உலமாக்களும், ஊரில் இருக்கும் மார்க்க அறிஞர்களும், பெரும் தலைகளும் எப்படி முன் வருவார்கள் மேற்சொன்ன கேடுகெட்ட போதைப் பார்ட்டிகளின் அலுச்சாட்டியத்தை தடுக்க? //

(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.THE QURAN

(அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”THE QURAN

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர். ஹசன் புஹாரி அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

//இசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது. இதைத்தானே சொல்ல வருகிறீர்களா சகோ?

முதலில் இசை கூடும் என்று ஏற்றதற்கு ஒரு நன்றி. //

நீங்கள் கூறும் இசைக்கான விளக்கம் தெளிவற்றதாகவும் அடிப்படை ஆதாரமாகவே உள்ளது, இசைகருவிகளின்றி மனிதன் பேசும் சொற்கள், வாக்கியங்கள், உரையாடல்கள், குழந்தை பேச்சு, வார்த்தைகள், கட்டுரை கவிதை வாசித்தல், குழந்தை கொஞ்சுவது, குர்ஆனை வாசித்தல், நபிகளார் கற்றுத்தந்த திக்ருகளை வாசித்தல் இவைகளால் எழும் ஓசைகள் அனைத்தும் இசை என்றே சொல்ல வருகிறீர்கள் என்று கருதத்தோன்றுகிறது. இது நீங்கள் கூறும் யாதார்த்தத்திற்கே முரண்படுகிறதே....

இசைக்கான தெளிவான விளக்கத்தை தாருங்கள்…. ஏற்றுக்கொண்டேனா? இல்லையா? என்பதை நான் தான் சொல்ல வேண்டும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். :)


//இஸ்லாமில் இசை ஒரு வழிபாடாக இருந்தது என்று நான் எங்கும் சொல்லவில்லையே. இஸ்லாமில் இசை கூடாது என்று சொல்வது ஏற்புடையதல்ல என்றுமட்டுமே கூறுகிறேன்.///

99 சதவீத இஸ்லாமிய இசை வழிபாடாகத்தானே அதனை ஆதரிக்கும் முஸ்லீம்களால் இன்னும் கருதப்படுகிறது என்பது நாம் எல்லோரும் கண்டு வரும் காட்சி. குர்ஆன் ஓதினால் நன்மை, நபிளார் காட்டித்தந்த வழியில் திக்ரு செய்தால் நன்மை என்று இவ்வாராக நன்மைகள் செய்ய தூண்டும் இஸ்லாமிய் மார்க்கத்தில் இருக்கும் நாம், இசையேடு (கருவிகள் கொண்டு இசைக்கும்) உங்கள் வழிப்பாடுகளையும் அன்றாட பொழுதுகளையும் கழியுங்கள் என்று இஸ்லாம் போதிக்கவில்லை என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் தானே.. இசை போன்றவைகள் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தறாதது, மார்க்கத்தில் புதுமைகள் (பித்அத்) என்று இஸ்லாத்தை நன்கு அறிந்த அநேக மார்க்க அறிஞர்கள் எடுத்துறைக்கிறார்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது இசைக்கருவிகள் கொண்டு இசைக்கப்படும் இசைகளை.........................

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்,,, குர் ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இசை கூடும் என்பதை அழுத்தமாக நிரூபித்தால் இஸ்லாம் இசையை ஆதரிக்கிறது என்று சொல்லலாமே தவிர, சுய விளக்கங்கள், பழைய பாதுஷா கட்டுக்கதைகள், மொகலாய மன்னர்களின் வரலாறு என்று விளக்கம் தருவதும், யாரோ எங்கோ எழுதிய பதிவை இங்கு சொடுக்குவதும் ஏற்புடையதல்ல என்பது என் அன்பான கருத்து.

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தனி பதிவிட இது தங்களுக்கும் தளம் என வரவேற்பு வளையத்தில் இணைந்திருக்கும் அன்பு சகோ. அதிரையின் சொந்தம் அசன் புஹாரி அவர்களே, வ- அலைக்கு முஸ்ஸலாம். அது போல உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

இந்த இணையத்தில் பதிவிட்டதை பற்றி கருத்து சொல்லமுடியும் என்பதாலேயே விமர்சனங்களை நாம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

யாரையும் சாபமிடுவதைப் போல் சொல்லியிருந்தால் மன்னிப்பு என்ற வார்த்தை கருத்தில் இருக்காது.

தாய் தன் மகவோடு கொஞ்சுவதையும், ராகமாக தொழுகைக்கு பாங்கொலி விடுப்பதையும் குர்-ஆனை நீட்டி அழகாக ஓதுவதையும் இம்மைக்கு அற்ப சுகம் தரும் இசையோடு ஒப்பிட்டு நியாயப் படுத்துவது கொஞ்சமும் சரியல்ல.பெரும்பாலும் இசைக்கருவிகளோடு இணைந்து ஒலிக்கும் சப்தங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

மறுமையின் மகத்துவத்தை சுவைக்க இம்மையில் இறைவன் கட்டளையை ஏற்றாக வேண்டும்.

மீண்டும் சொல்லப் போனால் அரேபியர்களோ, அதிரையர்களோ அல்லது அனார் இன்ற முஸ்லிம் பெண்ணோ செய்வது எல்லாம் இஸ்லாம் என்று நம்பி விடக் கூடாது. விளங்கிச் செய்வதே தூய இஸ்லாம்.

சகோ.சித்தீக், தாஜுதீன்,அர.அல. இவர்கள் நல்ல விளக்கம் தந்துள்ளார்கள்.

அன்புச் சொந்தம் சித்தீக் காக்கா ஏற்பில் மகிழ்ச்சி!

அதிரை சித்திக் said...

அன்புகவி ஹசன் புகாரி அவர்களுக்கு .

தங்களின் கவிதை வெளியீட்டு விழாவில்

கவி பேரரசு வைரமுத்து அவர்கள் கவிதை

பற்றி கூறும்போது விவசாயிக்கு நெல் முற்றி கதிராகும்போது

அது அவனுக்கு கவிதை பிச்சை காரனுக்கு தட்டில் காசு விழும்

அது கவிதை ஆனா அந்த இனிமையை கூற தெரியாது ..அது

போன்று தான் வியக்கும் ,பிரியப்படும் அணைத்து ஓசையும்

உங்களுக்கு இசையாக தெரிகிறது ..தப்பில்லை .குர் ஆணை

ராகமாக ஓதுதல் அங்கீகரிக்க பட்டது .நல்ல குரலில் அதான் என்னும்

பாங்கோசை வரவேற்க தக்கது ..இறைவன் தந்த அழகிய குரலில்

இனிமையாய் ஓதுதல் வரவேற்க தக்கது தானே ஒழிய கட்டாயம் இல்லை

ஆனால் இசை என்று வந்து விட்டால் இசைகுண்டான நெளிவு சுளிவு (இலக்கணம் )

ஏழு கட்டை எட்டுகட்டை .ஸ்வரங்கள் .தாளம் ,சங்கீத சாஸ்திரங்கள் என்று

எங்கோ நமை இழுத்து சென்று விடும் ..நமக்கு அவ்வளவு சங்கதிகள்

தேவை இல்லை ..கிரா அத்என்று சொல்வார்கள் நளினமான குரலில் குர் ஆன்

ஓதுதல் .கம்பீரமான குரலில் பாங்கோசை ..,இசை என்று வந்து விட்டால்

குழலோசை ..வீணை ..வயலின் .கிதார் ..மிருதங்கம் ..என்று வருங்கால சந்ததிகள்

இசைக்கு இலகனமாக எடுத்துக்கொள்ளும் ..இசை என்ற பதத்தை

நீக்கி கிரா அத் நல்ல இனிமையான குரலில் ஓதலாம் என எடுத்து வைக்கலாம்

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

அறிவை மழுங்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெரியவே நான் வந்துள்ளேன் - நபி

இந்த இரண்டு வரிக்கு முன்னும் பின்னும் உள்ள சம்பவங்களோடு இது விவரிக்கப்பட வேண்டும். reading in between என்பதுபோல் எதையும் காண்பது கூடாது என்று அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.

அறிவை மழுங்கச் செய்யும் இசைக்கருகளை **மட்டும்** உடைத்தெறிவேன் என்று சொன்னதாக இதைக் கொள்ளலாமில்லையா?

அறிவை மழுங்கச் செய்யாத இசைக்கருவிகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் இல்லையா?

இன்னொரு கோணமாக, அறிவை மழுங்கச் செய்யாமல் அதை உயிர்ப்பிப்பதாய் அமையும் எந்த இசைக்கருவியும் ஏகுமானதாய் அமையலாம் இல்லையா?

ஏன் திறந்த மனதோடும் தீர்க்கமான சிந்தையோடும் இஸ்லாமியர்களாகிய நாம் குரானையும் ஹதீசையும் அனுகக்கூடாது? அப்படி அனுகினால்தானே இஸ்லாம் குடத்தில் இட்ட விளக்காக அல்லாமல் வானத்தில் ஏறும் சூரியனாய் உலகத்தாரால் காணப்படும்.

நாம் நம் மதத்திற்கே நல்லதைச் செய்யாமல் வேறு எதற்குச் சொல்லப்போகிறோம்?

நான் அறிந்து, அறிவுடையவனே உண்மையான இஸ்லாமியன் என்று கூறிய மார்க்கம் இஸ்லாம்தான்.
நாம் அதை நிரூபிக்க வேண்டாமா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6

இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.<<<<<

வீணான பேச்சு இசையாக வேண்டுமானால் ஆகலாம் எப்படி இசைக்கருவியாக ஆகும் என்று அன்புடன் விளக்கம் தந்தால் புரிந்துணர்வு வளரும்.

வீண்பேச்சு என்பது நீட்டி முழக்கிய பேச்சு.
சேடைவிடும் பேச்சு.
நக்கலாகச் நகைத்துப் பேசும் பேச்சு.

இதையெல்லாம்விட முக்கியமாக
இஸ்லாமியனை இஸ்லாமின் திசையிலிருந்து
மாற்ற நினைக்கும் நயவஞ்சகப் பேச்சு.

ஆகவே அது ஹராமானது

இங்கே இசைக் கருவிகள் என்பன யாவை?

இங்கே கெட்ட இசைதான் உள்ளது
எந்தக் கருவியும் இல்லை.

அறிவுடையவனே உண்மையான இஸ்லாமியன்
மீண்டும் மீண்டும் இதை மனதில் கொள்ளுங்கள்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும், பாட்டையும், மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)<<<<<<

இது தெளிவாகவே இருக்கிறது சகோ தாஜுதீன்.

விபச்சாரத்தோடு ஒப்பிடக்கூடிய அளவிலான
கெட்ட பாடல்கள், கெட்ட பானமான மது, கெட்ட இசைதரும் இசைக்கருவிகள் போன்றவைதான் ஹராம்

பாடல்கள் எல்லாம் ஹராம் என்றால்
மக்காவை விட்டு மதினாவை நோக்கிவந்த
ரசூலுல்லாவைப் பாடிய பாடல்கள் ஹராம் ஆகிவிடும்.

இதுபோல பல தருணங்களில் நபிமுன்
பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளதாக குறிப்புகள் உண்டு.

கெட்டதை விலக்கி நல்லதை ஏற்கும் அன்னமாய் இருப்பதே
இஸ்லாமியனுக்குப் போதிக்கப்பட்டது.

ஒரே விசயம் ஹலாலாகவும் ஹராமாகவும் ஆகும்.
ஆட்டுக்கறியில் ஒரு துண்டு ஹலால் ஒரு துண்டு ஹராம்!

இசை இசைக்கருவிகளில் அவை பயன்படுத்தும் முறையில்
ஹலால் ஹராம் நிர்ணயமாகும்.

இஸ்லாம் அடிப்படையை அழகாகச் சொல்லிவிட்டது
இனி அறிவுடையோராய் இருந்து நல்ல இஸ்லாமியராய்
இருப்பது நமது கடமையல்லவா?

ஒரு இசை உங்களைக் கெட்ட வழியில் இட்டுச் சென்றால் அது ஹராமான இசை. அது பாடலாக இருந்தால் என்ன? எந்த இசைக்கருவி வழி வந்தால் என்ன? கவிதையாய் இருந்தால் என்ன? கட்டுரையாய் இருந்தால் என்ன? துண்டுப் பிரசுரமாய் இருந்தால் என்ன, சுவரொட்டியாய் இருந்தால் என்ன?

நபிகள் எதை வலியுறுத்தினார்கள்? எதைத் தடுத்தார்கள்? எதை பரவாயில்லை என்றார்கள்? குரான் எதைச் சொல்கிறது, ஹதீஸ் எதைச் சொல்கிறது?

நல்லதை எடு கெட்டதை விடு.

இதுதான் அடிநாதம். இதைப் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை. இதைப் புரிந்துகொள்ளாதவனை இஸ்லாமியன் என்று எப்படித்தான் கூறுவது?

துன்பக்கடலை நீந்தும் போது தோணியாவதுமாகவும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதுமாகவும் இருந்தால், அந்த இசை கூடாதென்று அறிவுடைய மார்க்கம் எப்படிச் சொல்லும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வ அலைக்குமுஸ்ஸலாம்,

சகோதரர் ஹசன் புஹாரி,

இசைக்கான வரைவிலக்கணத்தை தெளிவான விரிவான தாருங்கள்…. எதுவெல்லாம் இசை, எதுவெல்லாம் இசை இல்லை. இறைவன் நாடினால் உங்கள் மறுமொழிக்கு பதில் தருகிறேன்.

நான் இங்கு குறிப்பிட்டிருப்பது, இசைக்கருவிகளுடன் கூடிய இசையை... நல்ல கவிதைகளை பற்றியல்ல... கவிதைகள் நபிகளார் காலத்தில் இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை. கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை தொடரில் அதிரை அஹ்மது அவர்களின் தெளிவான விளக்கமே நம் எல்லோருக்கும் சான்று. நான் இப்படி சொல்லுவதால் இசையை ஆதரித்துள்ளேன் நீங்கள் முடிவெடுத்துவிடாதீர்கள். :)

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பு புகாரீ,

25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தபடியே இன்னும் குழப்பத்தில் இருக்கின்றீகள் என்று நினைக்கிறேன். நீங்களும் நானும் தம்மாமிலிருந்த உங்கள் உறைவிடத்தில் உணவுண்ண அமர்ந்திருந்தபோது ஒரு ஸ்பூனை எடுத்துத் டேபிளில் தட்டிக் காட்டி இதுவும் இசைதான் என்றீர்கள். ஓசைக்கும் இசைக்கும் வேறுபாடு தெரியாத குழப்பத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதாக நான் சொன்ன நினைவு (சரிதானா?)

இன்னும் அதே குழப்பத்தில் இருக்கின்றீர்கள்; சரிதானா?

25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாட்டுக் கச்சேரிக் கேட்டுக் கொண்டிருந்ததுபோல் நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே, அது சரிதானா?

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன்,

>>>>இசைக்கான வரைவிலக்கணத்தை தெளிவான விரிவான தாருங்கள்…. எதுவெல்லாம் இசை, எதுவெல்லாம் இசை இல்லை. நான் இங்கு குறிப்பிட்டிருப்பது, இசைக்கருவிகளுடன் கூடிய இசையை...<<<<

இசை மற்ற கலைகளைப்போலவே வரவிலக்கண எல்லைகளைக் கடந்தது. காலங்கள் தோறும் வளர்ந்து வருவது. ஏன் நம் கருத்தாடலை இப்படி திசை திருப்பம் வண்ணமாய் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இசைக்கருவி என்பதற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்? அதனால் மதத்திற்கு என்ன கேடு என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்.

எந்த வாத்தியக் கருவிகளும் இல்லாமல், வெறும் மனித வாயை வைத்துக்கொண்டு பல ஓசைகளை எழுப்பி இசையாய்த் தருகிறார்களே அதை எப்படி நீங்கள் கொள்வீர்கள்?

எந்த வாத்தியக் கருவியும் இல்லாமல் வெறும் வாயால் இனிய குரலால் ராகத்தோடு “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று பாடினால், அது இசையா? அதை ஏற்றுக்கொள்ளுமா இஸ்லாம்?

அதிகாலையில் எழும் ஓசைகளை பல இசைக்கருவிகளைக் கொண்டு பேக்ரவுண்ட் இசையாக அப்படியே அருவிபோலக் கொட்டச்செய்து உள்ளத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்களே அது இசையா? அதை மறுக்குமா இஸ்லாம்?

இசையைக்கொண்டு இசைத்தராப்பி மூலம் நோய்களைக் குணப்படுத்தும் எல்லை வரை சென்றிருக்கிறார்கள் அது இசையா? அதைத் தடுக்கின்றீர்களா?

எதை இசை என்கிறீர்கள்
எதைத் தடுக்கிறீர்கள்
ஏன் தடுக்கிறீர்கள் என்று மறுப்பவர்தானே கூறவேண்டும்?

நான் பத்திபத்தியாய் எழுதிய மடலில் எதற்குமே பதில் சொல்லாமல் திசைதிருப்பும் நோக்கில் இப்படி ஏன் கேள்வி கேட்கவேண்டும்? அது கருத்தாடல் தர்மமாகுமா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ அர அல,
அஸ்ஸ்லமாமு அலைக்கும்

>>>>இசை நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதை குரான் ,ஹதீஸ் இரண்டும் நமக்கு போதிக்கும் போது,உங்களுக்கு மட்டும் ஏன் இந்த முரண்பாடு?ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமுக்கு இது அழகல்லவே?<<<<

நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக நான் காணவில்லையே. எனக்குக் காட்டித் தாருங்களேன். மூத்த சகோ ஆய்வாளர் 20 அத்தியாயங்களை எழுதிவிட்டார், ஆனபோதிலும் நீங்கள் இன்னும் கவிதைகளையே ஏற்கவில்லை. இசை உங்களிடம் சற்று கவலைக்கிடம்தான்.

விளக்கமாக விலக்கப்பட்டதை ஆதரங்களோடு விவரிப்பது உங்களைப்போன்ற ஒரு முஸ்லிமுக்கு அழகு என்று நினைக்கிறேன். ஏற்கிறீர்களா?

இசையும் இஸ்லாமும் பற்றியும் ஆய்வுகள் உண்டென்று அறிகிறேன். ஒரு நாள் என் கைகளில் கிட்டும். அந்த ஆய்வுப்பணியைச் செய்ய ஓர் அதிரைக்காரரே முன்வரலாம். நான் இன்னொரு உயர்வான பாராட்டோடு நிற்பேன்.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>இசைகருவிகளின்றி மனிதன் பேசும் சொற்கள், வாக்கியங்கள், உரையாடல்கள், குழந்தை பேச்சு, வார்த்தைகள், கட்டுரை கவிதை வாசித்தல், குழந்தை கொஞ்சுவது, குர்ஆனை வாசித்தல், நபிகளார் கற்றுத்தந்த திக்ருகளை வாசித்தல் இவைகளால் எழும் ஓசைகள் அனைத்தும் இசை என்றே சொல்ல வருகிறீர்கள்<<<<

பாங்கு இசையோடு இல்லை என்கிறீர்களா?
என்றால் அது என்ன?

நிச்சயம் அது தட்டையான ஒரு குரலில்
பாவங்கள் இன்றி சொல்லப்படவில்லையல்லவா?

மற்றபடி வாக்கியங்கள், உரையாடல்கள், வார்த்தைகள், கட்டுரை வாசித்தல் என்பதை எல்லாம் எப்போது நான் இசை என்று சொன்னேன்? அவசியம் இதற்கு பதில் தாருங்கள். நீங்கள் நிதானமாக இல்லாமல் டென்சனில் பேசுவதுபோல் தெரிகிறது. நாம் கருத்தாடுகிறோம் அவ்வளவுதான், சண்டை போடவில்லை. சரிதானே?

>>>>99 சதவீத இஸ்லாமிய இசை வழிபாடாகத்தானே அதனை ஆதரிக்கும் முஸ்லீம்களால் இன்னும் கருதப்படுகிறது<<<<<

நான் அது பற்றி ஏதும் இங்கே கூறவில்லையே? நான் கூறுவதெல்லாம் இசை பற்றி மட்டுமே, இசைவழிபாடு பற்றியல்ல.

>>>>குர் ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இசை கூடும் என்பதை அழுத்தமாக நிரூபித்தால் இஸ்லாம் இசையை ஆதரிக்கிறது என்று சொல்லலாமே தவிர<<<<<<

இதென்ன தடாலடியாக இப்படி மாற்றி இட்டுவிட்டீர்கள்? குர்-ஆன் ஹதீஸ் இசையைக் கூடாதென்று கூறுவதை நீஞ்கள் அழுத்தமாக இங்கே நிரூபிக்காத பட்சத்தில் நான் ஏன் இசை வேண்டாம் என்று சொல்லவேண்டும்?

மறுக்கப்பட்டதைத்தான் கூறவேண்டும். மறுக்கப்படாதவையாவும் ஏற்கப்படுபவையே. ஆனால் அனைத்துக்கும் ஓர் அடிப்படை உண்டு. நல்லதை எடு கெட்டதை விடு. அதுதான் மார்க்கம்.

அறிவுடையவனே இஸ்லாமியன். சற்றும் சிந்திக்க மறுப்பவன் இஸ்லாமியனாக வளரவேண்டும் கட்டாயமாக.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ M.H. ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>>தாய் தன் மகவோடு கொஞ்சுவதையும், ராகமாக தொழுகைக்கு பாங்கொலி விடுப்பதையும் குர்-ஆனை நீட்டி அழகாக ஓதுவதையும் இம்மைக்கு அற்ப சுகம் தரும் இசையோடு ஒப்பிட்டு நியாயப் படுத்துவது கொஞ்சமும் சரியல்ல.<<<<<<

என்னால் அப்படியெல்லாம் குர்-ஆன் ஓதுவதைத் தாழ்த்த இயலவே இயலாது. குர்-ஆன் ஓதுவதும் இசைதான் என்பதே நான் முன் வைத்தது. மாற்றிப் பொருள் கொள்ளவேண்டாம்.

இந்த உலக வாழ்க்கையே அற்ப சுகம்தானே சகோ, இதில் இசைக்கும் கவிதைக்கும் மட்டும் ஏன் விலக்கு? யோசியுங்களேன்!

>>>>>பெரும்பாலும் இசைக்கருவிகளோடு இணைந்து ஒலிக்கும் சப்தங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.<<<<<

ஹராமான இசைக்குத்தான் இஸ்லாத்தில் இடமில்லை. அது இசைமட்டுமல்ல எதுவானாலும் ஹராமானதாக அமையப்பெற்றால் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சரியாகப் புரிந்துகொண்டீர்களென்றால் இஸ்லாம் எத்தனை அற்புத மார்க்கம் என்பது விளங்கும். இல்லாவிட்டால் தொட்டதற்கெல்லாம் தட்டிப்பறிக்கும் பூதமாகத்தான் தெரியும்.

என் துவக்க காலத்தில், தொட்டதை எல்லாம் குற்றம், குற்றம் என்று சிலர் கடுமையாக இஸ்லாம் பற்றிக் கூறியவற்றைக்கேட்டு என் மெல்லிய மனது வேதனைப்பட்டிருக்கிறது. என் மனம் மார்க்கத்தைவிட்டு விலகிப்போவதும் அதை நான் வலுக்கட்டாயமாக இழுப்பதுமான போராட்டமாக இருந்தது.

ஆனால் சற்றே அமைதியான அறிவினைப் பெற்றதும், ஞானத்தைப் பெற்றதும் நான் புரிந்துகொண்டேன்.

புரிந்துகொள்ளாதவர்களால் தவறாகப் போதிக்கப்படும் இஸ்லாம் இஸ்லாமே அல்ல.

உண்மையான இஸ்லாம் நம் தெளிந்த அறிவில் இஸ்லாமின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் நம் பார்வையில் இருக்கிறது என்று கண்டுகொண்டேன்.

அதன்பின் வெட்டிப் பேச்சு, வீண் பயங்காட்டல் எல்லாம் என் செவி ஏறாமல் சறுக்கி விழுந்தன, மார்க்கத்தின் நோக்கம் அறியப்பட மார்க்கம் மனதில் சர்ரென்று மேலேறத் தொடங்கிவிட்டது.

அறிவுடையவனே இஸ்லாமியன். அனைவரும் அறிவு பெறுவோம். தெளிந்த திறந்த நல்லறிவு பெறுவோம்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ சித்திக் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>தங்களின் கவிதை வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவிதை பற்றி கூறும்போது விவசாயிக்கு நெல் முற்றி கதிராகும்போது அது அவனுக்கு கவிதை பிச்சை காரனுக்கு தட்டில் காசு விழும் அது கவிதை ஆனா அந்த இனிமையை கூற தெரியாது ..அது போன்று தான் வியக்கும் ,பிரியப்படும் அணைத்து ஓசையும் உங்களுக்கு இசையாக தெரிகிறது ..தப்பில்லை<<<<

அவற்றைப் புரிந்துகொள்ள உயர்வான ஓர் மனோ நிலை வேண்டும். உங்களுக்கு அது எட்டியதில் எனக்கு மகிழ்ச்சி.

>>>>குர் ஆனை ராகமாக ஓதுதல் அங்கீகரிக்க பட்டது. நல்ல குரலில் அதான் என்னும் பாங்கோசை வரவேற்க தக்கது ..இறைவன் தந்த அழகிய குரலில் இனிமையாய் ஓதுதல் வரவேற்க தக்கது தானே ஒழிய கட்டாயம் இல்லை<<<<

உங்களின் இந்தக் கருத்தோடு இங்கே முரண்படுவோர் நிறைய இருக்கிறார்களே? ராகம் என்ற சொல்லைக் கேட்டால் கொதிப்படைகிறார்களே? அவர்களும் ஏற்கும் விதத்தில் உங்களால் எடுத்துரைக்க முடியுமா?

என்னால் இயன்றவரை எளிமையாக, பண்போடு என் கருத்துக்களை முன்வைக்கிறேன். இன்சால்லா சிலருக்குப் போய்ச்சேராவிடினும் பலருக்குப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்புசால் சகோ நாநா ஜமீல் காக்கா அண்ணன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

எம்பூட்டு காலம் ஓடிப்போச்சு உங்களை நேரில் சந்தித்து. நாம் நிறையதான் கருத்தாடி இருக்கிறோம். தமிழ் இஸ்லாம் குடும்பம் என்று தொடாத விசயங்கள் இல்லை எனலாம். உங்கள் மச்சான் நலமாக இருக்கிறாரா? அவரை நான் தஞ்சையில் ஒரு மருந்துக்கடை முதலாளியாகக் கண்ட ஞாபகம்.

>>>25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தபடியே இன்னும் குழப்பத்தில் இருக்கின்றீகள் என்று நினைக்கிறேன்.<<<<

குழப்பம் என்ற சொல் உள் நுழைந்துவிட்டால்
யார் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது
குழப்பமான விசயம்தான் :)

>>>>நீங்களும் நானும் தம்மாமிலிருந்த உங்கள் உறைவிடத்தில் உணவுண்ண அமர்ந்திருந்தபோது ஒரு ஸ்பூனை எடுத்துத் டேபிளில் தட்டிக் காட்டி இதுவும் இசைதான் என்றீர்கள்.<<<<<

உங்கள் கையில் ஒரு ஸ்பூன் இருக்கிறது. அதை வைத்து டேபிளில் ஒரு தட்டு தட்டுகிறீர்கள். அது ஓசை எழுப்புகிறது. அதையே தொடர்ந்து சில முறை ஓர் ஒழுங்கில் தட்டுகிறீர்கள், இசை வந்துவிடுகிறதே!

இருபத்தைந்து வருடங்கள் கழித்தாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா நாநா அல்லது இப்போதும் ’நா-நா’ தானா?

மேஜையில் தாளம்போட்டு பாட்டுப்பாடி
குஸ்காவிற்குக் காத்திருப்பது
எனக்குக் கல்லூரி விடுதிக்கால நினைவலைகள்.

இளையராஜா ”பருவமே புதிய பாடல் பாடு”
என்றோர் அருமையான பாடலை நெஞ்சத்தைக் கிள்ளாதே
என்ற பாலுமகேந்திராவின் படத்திற்கு இட்டிருந்தார்

அதில் நாயகி நடையோட்டம் போவாள்
அப்போதுதான் அந்தப் பாடல் ஒலிபரப்பாகும்
அவளின் நடையோட்ட ஓசைகளை
அப்படியே அருமையான ஒத்திசையாக்கி இருப்பார்
அதற்கு அவர் பயன்படுத்திய கருவியை
இந்தச் சபையோர் அறிய வேண்டும்

அது இளையராஜாவின் ஒரு கையும்
ஒரு தொடையும்தான்
யாதொரு இசைக்கருவியும் இல்லை

>>>>25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாட்டுக் கச்சேரிக் கேட்டுக் கொண்டிருந்ததுபோல் நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே, அது சரிதானா?<<<<<

சே நீங்கள் பாட்டுக் கச்சேரியெல்லாம் கேட்டீர்கள் என்று நான் சொன்னேனா?

’சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்’

ஒவ்வொரு வருடமும்
திரையிசைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து
ஒரே ஒரு கேசட் நான் உருவாக்குவேன்
ஞாபகம் இருக்கிறதா?

ஜானகி கமலோடு நிலாக்காய்வதைத் தாங்கமுடியாமல்
படு செக்சியாய்க் குரல் எழுப்புவார்
அதை விமரிசித்திருக்கிறீர்கள், ஞாபகம் வருகிறதா?

பாருங்கள்....
அந்தப் பாடலின் இசை நன்றாகத்தான் இருக்கும்
ஆனால் இசைக்கருவிகளே இல்லாமல்
ஜானகியின் குரல்தரும் சேட்டைதான் தாங்கமுடியாது

குரலா? கருவியா? எது சரி?

என்னைப் பொருத்தவரை நான் தெளிவாக இருக்கிறேன்.
குரலும் அல்ல கருவியும் அல்ல

அந்த இரண்டையும் சரியாகப் பயன்படுத்தினால்
அது ஆகுமானது

தவறாகப் பயன்படுத்தினால் அது ஆகாதது

அவ்வளவுதான்!

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்புச் சகோக்களே,

நெருப்பைக் கொண்டு விளக்கும் ஏற்றலாம்
வீட்டையும் கொளுத்தலாம் என்பதை
நான் இன்னும் விளக்கமாக எப்படிச் சொல்வது?

வீடு எறிந்துவிடும் என்று
வீட்டில் நெருப்பை மறுப்பது எத்தனை அச்சம்?

பயன்படுத்துவோம் எதையும் முறையாக
அதுவே இஸ்லாம்

இஸ்லாமியன் அறிவுடையவன்!

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

நம்மவர்கள் இசை என்ற சொல்லுக்கு இசை வாத்தியங்களும் .

ஓசையினை வடிவமைக்கும் கலையின் அணைத்து வடிவையும்

ஒன்றாக சேர்த்து ஒன்றாக பார்க்க படுவதை தான் ஏற்க மறுக்கிராகள்

குரலின் தெளிவால் ஓத படும் போது தெளிவான வார்ர்தைகள் மனதை

ஈர்க்கும் .....மனதை லயிக்க வைக்கும் தந்திரங்கள் உள்ளடக்கிய

சங்கீத சாச்திரங்கலையே நம்மவர்கள் எதிர்கிறார்கள்.உதாரணமாக

ராகம் என்பது பொதுவானது அந்த ராகத்தையே சோகமாக இசைக்க

முராரி ராகம் சந்தோஷ படுத்த ஒரு ராகம் பிரித்தால படும் அளவுக்கு

இசை வடிவமைக்க படுகிறது ..மனசினை லயிக்க வைக்கும் இசை

சிந்திக்கும் மூளையை கட்டி போடுகிறது ..சில ராகமான பாட்டு

எனக்கு பிடிக்கும் ஓரிறை கொள்கைக்கு முரணான வார்த்தைகள்

இருக்கும் அதனை மாற்றி அதே ராகத்தில் முன்முனுபேன்

ஆக ராக வாடி வமைப்பு மனதினை கிளர்ச்சி அடைய செய்யும்

மனதை கட்டிபோடும் ..

முன்பெல்லாம் ஆள் இந்தியா ரேடியோவில் காலை மாலை

இரு நேரங்களிலும் ஏதோஒரு பகாவதர் ராகம் மட்டும் இசைப்பார்

ஆதி தாளம்..மற்றும் ராகத்தின் பெயர் கூறி இசை படிவத்தை

ஒலிபரப்புவார்கள் சாதரணமாக கேட்டால் ஒன்றுமே புரியாது

அதே ஒலி பரப்பினை அமைதியான இடத்தி கண்மூடி

கேட்டு பாருங்கள் மனசினை ஏதோ செய்யும் ..அது போன்ற

இசை வடிவு அதை ஏற்கும் மனசு .மற்ற எதையும் ஏற்க

மறுக்கும் .நாம் தொழுதுகொண்டு இருந்தாலும் அந்த இசை

இசைக்குமானால் நம் மன குரங்கு அங்கே சென்று விடும்

நாம் எதனை ரகாத் தொழுதோம் என்றே தெரியாது .

அதிரை சித்திக் said...

இசை கருவிகளும் அதன் கலைஞனும்

ஒரு பாட்டு கச்சேரியில் ஒவ்வொரு வாத்திய கலைஞனையும் தனித்தனியே

கவனித்து பாருங்கள் ஒரு பைத்திய காரனை போல் அந்த வாத்திய கருவியை

இயக்கி கொண்டு இருப்பான் பாட்டுக்கு எந்த வாத்தியம் அவசியமோ பாடகன்

அவரை மட்டுமே அடிகடி பார்பான் ..புல்லாங்குழல் ஊதுபவனுக்கு ஒரு புல்லாங்குழல்

போதும் ஒன்றும் தேவை இல்லை .அதே போன்று ஒவொரு இசை வித்தகற்களுக்கும் ..

ஒவ்வொரு வித்வானும் தன்னிலை மறந்தே காணபடுவார்கள் .நடை உடையில் நேர்த்தி

இருக்காது பஸ்ஸில் பயணிக்கும் போது பக்கத்தில் பேசிக்கொண்டிருப்பவரை மறந்து

ஏதோ ஒரு ராகத்தை முனுமுனுப்பார் ..வாத்திய கலைஞன் வீட்டில் ஜீரோ

கச்சேரியில் துணை கலைஞன் ..மொத்தத்தில் வாழ்வே சூன்யம்

கச்சேரி இல்லாத நாட்கள் அவனுக்கு நரகம் ..இசை உலகில் வாழ்கையை

நடத்திட நினைக்கும் எத்தனையோ பேர் வாழ்வை தொலைத்து இருக்கிறார்கள்

இசை எத்தனையோ பேரை யாசகனாக்கி உள்ளது ..தனது திறமை சேர வேண்டிய

இடத்தில சேராமல் பைத்தியமாய் அலையும் அபாயம் ..நெருப்பை நெருப்பாக

பார்க்கும் பக்குவம் எத்தனைபேருக்கு உள்ளது ..எனவே இசைக்கு இசைவு

கொடுத்து மறுமை பயத்தை எடுத்து விட வேண்டாம் என்பதே என் கருத்து...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வ அலைக்குமுஸ்ஸலாம், சகோதரர் ஹசன் புஹாரி அவர்களுக்கு,

தங்களின் நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி..

//இசை மற்ற கலைகளைப்போலவே வரவிலக்கண எல்லைகளைக் கடந்தது. காலங்கள் தோறும் வளர்ந்து வருவது. ஏன் நம் கருத்தாடலை இப்படி திசை திருப்பம் வண்ணமாய் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.//

இசை இஸ்லாமிய பார்வையில் கூடும் கூடாது அல்லது கூடும் என்று வாதிடும் இடத்தில் இசைக்கான வரைவிலக்கணத்தை பற்றி கேட்பது எப்படி கருத்தாடலை திசை திருப்புவதாக அமையும் என்பது எனக்கு தெரியவில்லை.

//பாங்கு இசையோடு இல்லை என்கிறீர்களா?
என்றால் அது என்ன?///

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் கேட்கிறேன் இசைக்கான வரைவிலக்கணத்தை விளக்கமாக தாருங்கள் என்று.

//// Thajudeen said >>>>இசைகருவிகளின்றி மனிதன் பேசும் சொற்கள், வாக்கியங்கள், உரையாடல்கள், குழந்தை பேச்சு, வார்த்தைகள், கட்டுரை கவிதை வாசித்தல், குழந்தை கொஞ்சுவது, குர்ஆனை வாசித்தல், நபிகளார் கற்றுத்தந்த திக்ருகளை வாசித்தல் இவைகளால் எழும் ஓசைகள் அனைத்தும் இசை என்றே சொல்ல வருகிறீர்கள்<<<<

Asan Buhari said....

பாங்கு இசையோடு இல்லை என்கிறீர்களா?
என்றால் அது என்ன?

நிச்சயம் அது தட்டையான ஒரு குரலில்
பாவங்கள் இன்றி சொல்லப்படவில்லையல்லவா?

மற்றபடி வாக்கியங்கள், உரையாடல்கள், வார்த்தைகள், கட்டுரை வாசித்தல் என்பதை எல்லாம் எப்போது நான் இசை என்று சொன்னேன்? அவசியம் இதற்கு பதில் தாருங்கள். நீங்கள் நிதானமாக இல்லாமல் டென்சனில் பேசுவதுபோல் தெரிகிறது. நாம் கருத்தாடுகிறோம் அவ்வளவுதான், சண்டை போடவில்லை. சரிதானே?//

கோபம் ஒன்றுமில்லை :)

என்னுடைய கருத்தில் மிகத்தெளிவாக சொல்லியுள்ளேன்.. தடித்த எழுத்தில் உள்ள வார்த்தையை கவனிக்கவும்.

இசைகருவிகளின்றி மனிதன் பேசும் சொற்கள், வாக்கியங்கள், உரையாடல்கள், குழந்தை பேச்சு, வார்த்தைகள், கட்டுரை கவிதை வாசித்தல், குழந்தை கொஞ்சுவது, குர்ஆனை வாசித்தல், நபிகளார் கற்றுத்தந்த திக்ருகளை வாசித்தல் இவைகளால் எழும் ஓசைகள் அனைத்தும் இசை என்றே சொல்ல வருகிறீர்கள் என்று சந்தேக வாக்கியத்தில் தான் சொல்லியுள்ளேனே தவிர இவைகளால் எழும் ஓசைகள் அனைத்தும் இசை என்றே சொல்லியிருக்கிறீர்கள் என்று எழுதவில்லை என்பதை கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


இது போன்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகத்தான் இசைகான வரவிலக்கணத்தை விபரமாக தாருங்கள் என்று கேட்கிறேனே தவிர திசை திருப்ப அல்ல...

டென்சன் என்ற வார்த்தை அவசியமற்றது என்று கருதுகிறேன். இது நல்ல கருத்தாடலுக்கான வார்த்தை அல்ல ன்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. :)


ஓசைக்கும் இசைக்கும் வித்யாசம் எதுவென்று விளங்காதவரை இங்கு மேலும் விவாதிப்பது அர்த்தமற்றது.

எந்த ஒரு இசைகருவிகளுள்ள இசையில்லாமல் ஓர் இஸ்லாமியன் சந்தோசகமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்பதில் தெளிவாக உள்ளோம் கோடிக்கணக்கான என்னைப்போன்றவர்கள், இதுவே இஸ்லாமிய வரலாறு , குர்ஆன் ஹதீசை கற்றறிந்த ஒட்டுமொத்த மார்க்க அறிஞர்களின் கருத்து.

இதுவரை கருத்துக்கள் பதிந்தமைக்கு மிக்க நன்றி..

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஆனபோதிலும் நீங்கள் இன்னும் கவிதைகளையே ஏற்கவில்லை. இசை உங்களிடம் சற்று கவலைக்கிடம்தான்.//

யான் ஹசன் காக்கா,வல்லானயில !

மதிப்புக்குரிய அஹமது சாச்சாவின் ஆய்வுகள் மூலம், அல்லாஹ் தந்த தெளிவினால்,நல்ல கவிதைகளை இஸ்லாம் ஆதரிக்கிறது,கெட்ட கவிதைகளை மறுக்கிறது என தெளிந்து,அருமை சாச்சா அவர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி,அவர்களும் அதை ஏற்று (சாச்சா விரும்பினால்,அதை வேணா வெளியிடவா?)இப்போதான் நிம்மதியா இருக்கேன்.இப்படி திடு திப்புன்னு வந்து - கேள்வி கேட்டா திட்டு முட்டு தெகரடியா வருது.

ஆனா ஹாக்கா,இசை கவலைக்கிடம் தான்.நீங்கள் இதுவரை நீண்டு விளக்கிய ஒவ்வொன்றும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது,இதே போதும் இசை ஒரு இம்சை.முசீபத்து.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>தங்களின் நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி.<<<<

ஆனால், எதற்குமே உங்களால்
பதில் சொல்ல முடியவில்லை என்றதும்,
புத்திசாலித்தனமாக *உண்மையை ஏற்க மனமின்றி*
எழுந்துகொண்டீர்களே !!!

>>>ஓசைக்கும் இசைக்கும் வித்யாசம் எதுவென்று விளங்காதவரை இங்கு மேலும் விவாதிப்பது அர்த்தமற்றது.<<<<

ஓசைக்கும் இசைக்கும் வித்தியாசம்
எனக்கு விளங்கவில்லை என்றால்
நீங்கள் கூறுங்கள் நான் கேட்கிறேன்.
உங்களுக்கு விளங்கவில்லை என்றால்
நான் கூறுகிறேன் நீங்கள் கேளுங்கள்.

ஆனால் உங்களிடம் கருத்தாடுவதற்கு
வலுவான கருத்து இல்லை என்றவுடன்
இப்படி பின் வாங்கி.... பின் வாங்கி.....
எதற்கும் பதில் கூறாமல் நகர்வது சரியா என்று
நீங்கள்தான் கூறவேண்டும்!

>>>>எந்த ஒரு இசைகருவிகளுள்ள இசையில்லாமல் ஓர் இஸ்லாமியன் சந்தோசகமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும்<<<<<

எல்லா இசைக்கருவிகளின் இசையையும் கேட்டுக்கொண்டு ஓர் இஸ்லாமியன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியாதா?

ஏன்?

பதில் சொல்வீர்களோ அல்லது அப்படியே புறப்பட்டுவிடுவீர்களோ, உங்கள் விருப்பம்.

அன்புடன் புகாரி

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நமதூரில் ஆலிம்கள் எவ்வளவோ பயான்களில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கந்தூரி கூடாது என்று ஆலிம்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் நாங்கள் ஒரு காதில் வாங்கி விட்டு மற்றொரு காதில் விட்டு விடுகிறோம். கந்தூரி எடுத்தால் தான் எங்களால் ஆட்டம்,பாட்டம்,கும்மாளம் எல்லாம் வெளிப்படுத்த முடியும் என்று சிந்திக்கின்றனர்.

இதைக்கேட்பதற்கு ஆட்கள் இல்லாமல் எல்லாம் இல்லை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை எடுப்பவர்கள் கேட்பதில்லை.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ அர அல அப்துல் லத்தீப் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள்.
இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள்.

என் பெயரை மீண்டும் ஒருமுறை இச்சபையில் கூறுகிறேன்.
என் பெயர் புகாரி, என் தந்தையின் பெயர் அசன்பாவா

புகாரி என்பதை புஹாரி என்றுதான்
நானும் எழுதிக்கொண்டிருந்தேன்
ஆனால் இடையில் வரும் க என்ற எழுத்து,
ஹ என்ற ஓசையையே பெறும் என்பதால்
புகாரி என்று எழுதுகிறேன்

ஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் அல்ல
சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக
உருவாக்கப்பட்ட எழுத்துமுறை
நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல
ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமே
கிரந்தம் பயன்படுத்துவேன்

புகாரி என்பது சரியாகவே உச்சரிக்கப்படும் வகையில்
அமைந்திருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன்

ஹசன்பாவா என்பதுதான் என் தந்தையின் பெயர்
எனக்கு விபரம் தெரியும் முன்பே
அவர் உயிரை விட்டுவிட்டார்
ஊரில் மிகுந்த செல்வாக்குடையவர்
அவர் பெயர் அசன்பாவா என்றுதான்
பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிவாசல் போன்ற
கல்வெட்டுகளிலும் இருக்கின்றது
அவரின் தமிழ்ப்பற்று எனக்குத் தெரியாது
அவரை அப்படி எழுதவைத்தவர் யார் என்றும் தெரியாது
ஆனால் அவர் அசன்பாவா என்று
தன் பெயரை எழுதி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது
ஆகவே அப்படியே பயன்படுத்துகிறேன்.

இனி என் பெயரைச் சொல்லி அழைப்பதும்
என் தந்தைப் பெயரைச் சொல்லி அழைப்பதும்
உங்கள் விருப்பம் எனக்கு ஆட்சேபனை இல்லை

நான் கனடா வந்ததும் என் பெயர் இப்படித்தான் மாறிவிட்டது

முதல் பெயர்: அசன்
இடைப்பெயர்: பாவா
குடும்பப்பெயர்: புகாரி

இது இந்தியாவில் எடுத்த என் பாஸ்போர்ட்டில் உள்ள
என் பெயரின் காரணமாக அமையப்பெற்றது

என்னை அலுவலகத்தில் ”அசான்” என்று அழைக்கிறார்கள்
சில அலுவலகங்களில் புகாரி என்றும் அழைத்ததுண்டு
இரண்டும் எனக்கு பழகிவிட்டது.

தமிழ் வட்டத்தில் இளையவர்கள் மரியாதை காரணாம
ஆசான் என்றும் அழைப்பார்கள் :)

ஆனால் நான் என் அனைத்து மடல்களிலும்
கீழே உள்ளதுபோலத்தான் கையொப்பம் இட்டு நிறைவு செய்வேன்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ அர அல அப்துல் லத்தீப் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>மதிப்புக்குரிய அஹமது சாச்சாவின் ஆய்வுகள் மூலம், அல்லாஹ் தந்த தெளிவினால், நல்ல கவிதைகளை இஸ்லாம் ஆதரிக்கிறது,கெட்ட கவிதைகளை மறுக்கிறது என தெளிந்து,<<<<<

மிக்க மகிழ்ச்சி அர அல. இதுவேதான் இசைக்கும் பொருந்தும்.
நல்ல இசையை இஸ்லாம் ஆதரிக்கிறது.
கெட்ட இசையை இஸ்லாம் மறுக்கிறது.

கவிதை, இசை போன்ற இவற்றுக்கு மட்டுமல்ல,
உலகில் உள்ள அத்தனைக்கும்
இஸ்லாம் என்ற இனிய மார்க்கம் தரும் விதி இதுதான்.

நல்லதை எடு கெட்டதை விடு.

ஹலால் உனக்கு நல்லதைச் சொல்லித் தருவது
ஹராம் உனக்குத் தீயதைக் காட்டித் தருவது

இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம்.
அறிவியல் பூர்வமான வாழ்க்கைக்கு வழிதரும் அன்பு மார்க்கம்.
ஆனால் சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்
அதை ஒரு சர்வாதிகாரத்தனமாக சட்டங்கள் என்பதுபோலக் காட்டுகிறார்கள்
இதனால் இளையவர்களைச் சிதறடித்து ஓடச் செய்கிறார்கள்
மார்க்கத்தை ஒரு சுமையாகக் கருதச் செய்கிறார்கள்
மார்க்கத்தை அழிக்கப் பார்க்கிறார்கள்
அவர்கள் மார்க்கத்திற்கு தீங்கு செய்கிறார்கள்
அவர்கள் பாவம் செய்கிறார்கள்

நல்லதை எடு கெட்டதை விடு.
அவ்வளவுதான் மார்க்கம்

இஸ்லாமியன் என்பவன் அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும்.
இது இஸ்லாமியனின் அடிப்படைத் தகுதி.

அந்தத் தகுதியை வளர்த்துக்கொள்ளாதவர்கள்
அவர்களும் தவறிழைத்து மற்றவர்களையும் தவறிழைக்கச் செய்து
மார்க்கத்தின் மேன்மையை உலக அரங்கில் சிதைக்கிறார்கள்

இஸ்லாத்தில் நான் இந்த குழு
அவன் அந்தக் குழு என்று பிரிப்பது சரியா?
நாங்கள் உயர்வானவர்கள்
அவர்கள் தாழ்வானவர்கள் என்று கூறுவது சரியா?

சகோதரத்துவமும் சமத்துவமும் அறிவுடைமையும்
போதிக்கும் மார்க்கத்தில் இப்படியான நிலை சரியா?

நல்லதை எடு கெட்டதைவிடு (ஹலால் - ஹராம்)
என்பதைக் கொண்டு இச்செயல்களைக் கண்டால்
நாம் என்ன செய்கிறோம் என்பது புரியுமல்லவா?

>>>>அருமை சாச்சா அவர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, அவர்களும் அதை ஏற்று (சாச்சா விரும்பினால்,அதை வேணா வெளியிடவா?)<<<<

வெளியிட வேண்டாம் அர அல.
உங்களிடமிருந்து வரும் செய்தியை
நம்பாமல் எப்படி இருக்க முடியும்?

உங்களை நான் மதிக்கிறேன் என்றால் அதன் பொருள்
நான் உங்களை நம்புகிறேன் என்பதே

>>>>ஆனா ஹாக்கா,இசை கவலைக்கிடம் தான்.நீங்கள் இதுவரை நீண்டு விளக்கிய ஒவ்வொன்றும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது, இதே போதும் இசை ஒரு இம்சை.முசீபத்து.<<<<

ஹாஹாஹா..... மூத்த சகோ ஆய்வாளர் அஹ்மது அவர்களின் ஆய்வுகள் பதினைந்தைக் கடந்து சென்றபின்பும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே ஏகப்பட்ட கேள்விக் கணைகளைத் தொடுத்துக்கொண்டுதானே இருந்தீர்கள். இன்றுதானே உங்களின் மனமாற்றதை நான் உறுதியாக அறிய நேர்ந்தது.

நானோ ஏதும் ஆய்வுகள் எழுதவில்லை. சகோ அஹ்மத் அவர்களைப் போல ஆய்வுக்கட்டுரை எழுதும் அளவுக்கு நான் ஒருநாள் வளரும்போது, எனக்கும் அதற்கான ஓய்வு நேரம் கிடைக்கும்போது அப்படியான ஆய்வுகளை எழுதுவேன்.

இப்போது, கேள்விகள் பதில்கள் கலந்துரையாடல்கள் மூலம் இயன்றதைச் செய்கிறேன். அவ்வளவுதான்.

நாம் சொல்லும் எதுவும் எல்லோருக்கும் போய்ச்சேரும். ஆனால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் தெளிவுதேடி நிற்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வழிகாட்டும். நான் அப்படியான ஆக்கப்பூர்வமான கருத்தாடல்களைத் தேடித் திரிந்திருக்கிறேன்.

அறிவுடையவனே இஸ்லாமியன்!

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ சித்திக்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் இரண்டு மறுமொழிகளையும் வாசித்தேன். அவை தெளிவாக எதைச் சொல்கின்றன என்று எனக்கு விளங்கவில்லை. நறுக்கென்று புல்லட் பாய்ண்ட்களாக சிரமம் பார்க்காமல் மீண்டும் அதை எழுதுவீர்களா?

”மனதை மயக்குவது இசைக் கருவிகளின் இசை.
அதனால் இசைக்கருவிகள் கூடாது”

இதுதான் உங்கள் மடல்களின் சாராம்சமா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>எந்த ஒரு இசைகருவிகளுள்ள இசையில்லாமல் ஓர் இஸ்லாமியன் சந்தோசகமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்பதில் தெளிவாக உள்ளோம் கோடிக்கணக்கான என்னைப்போன்றவர்கள், இதுவே இஸ்லாமிய வரலாறு , குர்ஆன் ஹதீசை கற்றறிந்த ஒட்டுமொத்த மார்க்க அறிஞர்களின் கருத்து.<<<<<

இசைக்கருவிகளின் இசை இல்லாமல் உங்களால் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்று சொல்லுங்கள். அதை மறுக்க நான் மட்டுமல்ல எவரும் முன்வரமாட்டார்கள்.

ஆனால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணிக்காதீர்கள். அது தவறான செயல். அதை ஏற்க எல்லோரும் விரும்பமாட்டார்கள்.

எதையும் கண்டு தெளிந்தபின் ஒரு முடிவுக்கு வாருங்கள். முன்முடிவும் அவசரமும் அறிவை அடித்துக் குப்பையில் போட்டுவிடும்.

உங்களிடம் உங்கள் அறிவைத் திறந்த நிலையில் வைக்கும் மனோதிடம் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

அப்படியெல்லாம் அறிவைத் திறந்த நிலையில் வைத்து தெளிந்த நல்லறிவு பெறுவது எனக்குத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் நான் எப்படி மறுக்கமுடியும்?

விலகுங்கள் விருப்பம்போல!

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வ அலைக்குமுஸ்ஸலாம்,,,

சகோதரர் அன்புடன் புகாரி அவர்களுக்கு,

இந்த பதிவை அவதானித்துவரும் வாசக நேசங்களுக்கும் உங்களுக்கு தெரியும், நான் கேட்கும் கேள்வி... நீங்கள் உங்கள் மனதில் பட்டவைகளை இசை இசை இசை என்று சொல்லுகிறீர்களே, அந்த இசைக்கான வரவிலக்கணத்தை விரிவாக தாருங்கள் என்றுதானே கேட்கிறேன். இசைக்கான வரைவிலக்கணம் தெரிந்தால் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நிச்சயம் விடை தருவேன். இன்ஷா அல்லாஹ்... திசைதிருப்பல் என்று சுற்றி சுற்றி ஒரே வட்டத்திற்குள் வந்து, நீங்களே பதில் சொல்லவில்லை, முன்முடியுடன் அனுகுகிறீர்கள் என்று சொல்லுவது எனக்கு இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது....

//ஆனால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணிக்காதீர்கள். அது தவறான செயல். அதை ஏற்க எல்லோரும் விரும்பமாட்டார்கள்.//

இந்த ஒரு இசைக்கலைஞரிடனோ, இசைகருவியுடனோ எனக்கு நிச்சயம் சொந்தவிருப்பு வெறுப்பே கிடையாது, என்னுடை மார்க்கத்தில் இசைகருவிகளுடன் கூடிய இசை தடுக்கப்பட்டுள்ளது, வெறுக்கப்பட்டுள்ளது, ஆதாரிக்கவில்லை.. இதுவே அநேக உலக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கருத்து... இதை எப்படி தீணிக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள் என்பது புரியவில்லை.

வலையுலகில் அனுபவம் பெற்றவர், எழுத்துதுறையில் வல்லுனர், கவிஞர், திறந்த மனத்துடன் அறிவை தேடவேண்டும் என்று இந்த இளையவனுக்கு ஆலோசனை சொல்லும் நீங்கள் நான் கேட்கு அந்த ஒரே கேள்வி மட்டும் தெளிவான பதில் தாருங்களேன்..

இங்கு யார் கருத்து சிறந்தது என்று நானோ நீங்கள் தீர்ப்பு சொல்லுவது சரியல்ல என்பது என் அன்பான கருத்து, படிப்பவர்கள் விவாதிக்கும் செய்திகளை புரிந்துக்கொண்டாலே போதும், இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...

இத்துடன் இந்த பதிவில் மறுமொழிகள் பதிவதை நிறுத்திக்கொள்ளலாம்...

இசை வெறுக்கப்படவேண்டுமா? என்ற தலைப்பில் விரைவில் அதிரைநிருபர் வலைத்தளத்தில் ஒரு தனி பதிவு ஒன்று எழுதுகிறேன், இசைக்காண வரைவிலக்கணம் தெரிந்தால் எனக்கு அந்த பதிவு சிறப்பாக எழுத பேருதவியாக இருக்கும். மேலும் நீங்கள் என்னிடமும், சகமறுமொழியாளர்களிடமும் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் அதில் பதில் இருக்கும், எல்லோரும் தெளிவுபெருவோம்...

அறிவில் மிகைத்தவன் நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவனே...

அஸ்ஸலாமு அலைக்கும்....

Shameed said...

அப்பாட அதிரை நிருபரில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும் ஓய்ந்து விட்டது மாஷா அல்லாஹ்

அதிரை சித்திக் said...

அன்புக்கவி புகாரி ..அவர்களுக்கு ''.

ஆம் ..தாங்கள் புரிந்து கொண்டது சரிதான் .

மனித தேடல் என்பது முடிவுறாதது ...

கவிஞன் தனது கவியை மனதில் பூட்டிவைக்க

விரும்ப மாட்டான் அது இசை கோர்வையாய்

மக்கள் மனதில் பதிந்தால் நன்றாக இருக்குமே என

எண்ணுவான் ..மோளம் தாளம் இல்லாத இசை வடிவம்

மக்களின் ரசனைக்கு சரிவராது என்று இசை விர்ப்பன்னர்கள்

கூறுவர் ..பிறகென்ன மோல தாளத்தோடு இசையும் ஆயிற்று

அது ரசிகர் மத்தியில் போய் சேர்ந்ததா என்பதை அறிய வேண்டுமே

பாட்டை கேட்டால் ஆட்டம் ..நடனம் ..பாட்டு ஹிட் ..பிரபலமான

பாட்டு என்று பொருள் .. ..நல்ல பாட்டுப்பா ..என்ன இசை அடிச்சிருக்கான் பாரு ..

பாட்டை கேட்டா சும்மா இருக்க முடிய வில்லை என்பான் ரசிகன்

மோல தாளத்துடன் இசை கூடும் என்றால் ரசிகனின் வெளிப்பாடு

நடனமும் கூடுமா ..சைத்தான் ..மிக இலகுவாக நம்மில் ஊடுருகுவான்

உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான் என்பது போல மேல தாளத்துடன்

கூடிய பாட்டை கேட்பவன் ஆட்டம் போடுவான் ..ஆட்டம் போட

எனர்ஜி வேண்டும் பிறகென்ன கிளப் தான் ..வரைமுறைக்குள்

இருந்தால் நலம் . காற்றாரினை கட்டுப்படுத்துவது கடினம்

அதனை கட்டுப்படுத்தி அணையாக கட்டி பாது காப்பது போல

நம் இஸ்லாம் எல்லா வற்றிற்கும் வரைமுறை வைத்துள்ளது

அணையில் சிறு பலது பட்டால் பேரழிவு ..இஸ்லாத்தின்

இறை பயம் என்ற ஒன்றினால் தான் ..கட்டுப்பாடு என்பதை

ஏற்று எத்தனையோ சாதனையாளர்கள் மார்கத்துக்கு

அப்பாற்பட்ட விஷயம் என்று ஒதுங்கி இருக்கிறார்கள்

அவர்களுக்குண்டான வெகுமதி மறுமையில் நிச்சயம் உண்டு

தமிழ் நமக்கு மொழி மட்டும் தான் ..கலாசாரம் அல்ல

இயல் இசை நாடகம் என்பபது முத்தமிழ் ...

வேண்டாம் அது ..கவிதையே சர்ச்சை யாக இருக்கிறது

கவிதைக்கு இசை ,இசைக்கு தாளம் ..தாளத்திற்கு நடனம் ..,

ஏற்கிறீர்களா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.சித்தீக் அவர்களின் கருத்து பட்டை தீட்டிய வைரம். அல்ஹம்துலில்லாஹ் சைத்தான் எப்படியெல்லாம் முடிச்சி போடுகிறான். சங்கிலித்தொடர்போல் தவறுகளை கோர்த்திருக்கிறான். இளைதாக முள் மரம் கொல்க! அல்லாஹ் எல்லாரையும் சைத்தானிடமிருந்தும், துற்காரியத்திலிருந்தும் காப்பானாக! ஆமீன்.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ தாஜுதீன் அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் நிறைக.

>>>>இசை வெறுக்கப்படவேண்டுமா? என்ற தலைப்பில் விரைவில் அதிரைநிருபர் வலைத்தளத்தில் ஒரு தனி பதிவு ஒன்று எழுதுகிறேன், இசைக்காண வரைவிலக்கணம் தெரிந்தால் எனக்கு அந்த பதிவு சிறப்பாக எழுத பேருதவியாக இருக்கும்.<<<<

கட்டாயம் எழுதுங்கள். அப்படி ஒன்றை எழுதத் தொடங்கும்போதுதான் அதுபற்றி அதிகம் சிந்திக்கத் தோன்றும்.

நீங்கள் இசைக்கான வரைவிலக்கணம் உங்களுக்குத் தெரியாத நிலையில் என்னிடம் உதவி கேட்கிறீர்கள் என்பதை அறியாதவனாய் இருந்துவிட்டேன். மன்னியுங்கள்.

இசை பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் காணக்கிடைக்கும். ஆனால் இணையத்தில் சரியானதைத் தேடி எடுப்பது ஒரு கலை. ஏனெனில் வந்தவன் போனவனெல்லாம் அவனவன் விருப்பத்திற்கு எதையாவது எழுதிவைத்திருப்பான். அவற்றை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது.

இணைய அகராதிகள் தரும் வரைவிலக்கணங்களைப் பார்ப்போம். இவை சற்றே நம்பத் தகுந்தவை:

1. Merriam-webster

-The science or art of ordering tones or sounds in succession, in combination, and in temporal relationships to produce a composition having unity and continuity.

-Vocal, instrumental, or mechanical sounds having rhythm, melody, or harmony

2. http://dictionary.reference.com/browse/music?s=t

-An art of sound in time that expresses ideas and emotions in significant forms through the elements of rhythm, melody, harmony, and color.

-The tones or sounds employed, occurring in single line (melody) or multiple lines (harmony), and sounded or to be sounded by one or more voices or instruments, or both.

3. http://www.thefreedictionary.com/music

-The art of arranging sounds in time so as to produce a continuous, unified, and evocative composition, as through melody, harmony, rhythm, and timbre.

-Vocal or instrumental sounds possessing a degree of melody, harmony, or rhythm.

இப்படியே நீங்கள் தேடத் தேட இணையத்தில் நிறைய கிடைக்கும். அப்படியே ஒரு நூலகம் சென்றீர்களென்றால் இசை பற்றி நல்ல நூல்களும் கிடைக்கும். சுவாரசியமாகவே இருக்கும்.

>>>>இசைக்கான வரைவிலக்கணம் தெரிந்தால் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நிச்சயம் விடை தருவேன். வலையுலகில் அனுபவம் பெற்றவர், எழுத்துதுறையில் வல்லுனர், கவிஞர், திறந்த மனத்துடன் அறிவை தேடவேண்டும் என்று இந்த இளையவனுக்கு ஆலோசனை சொல்லும் நீங்கள் நான் கேட்கு அந்த ஒரே கேள்வி மட்டும் தெளிவான பதில் தாருங்களேன். மேலும் நீங்கள் என்னிடமும், சகமறுமொழியாளர்களிடமும் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் அதில் பதில் இருக்கும், எல்லோரும் தெளிவுபெருவோம்...<<<<

இசை பற்றிய வரைவிலக்கணங்களைக் கொடுத்துவிட்டேன் அன்புச்சகோ தாஜுதீன். இனி உங்கள் பதில்கள் வந்து குவியப்போவதற்காகக் காத்திருப்பேன். நீங்கள் சொல்வது மிகவும் சரி. எல்லோரும் தெளிவுபெற வேண்டும். எதையும் மூடி மறைத்தல் ஆகாது. விட்டு விலகி ஓடுதலும் ஆகாது. ஏனெனில் நாம் அறிவுடையவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம்!

>>>>என்னுடை மார்க்கத்தில் இசைகருவிகளுடன் கூடிய இசை தடுக்கப்பட்டுள்ளது, வெறுக்கப்பட்டுள்ளது, ஆதாரிக்கவில்லை..<<<<

அப்படி நீங்கள் தவறாக நினைத்திருக்கிறீர்கள். அது உண்மையில்லை. புரிந்துகொள்வதில் உள்ள குழப்பம். தெளிவுபெறுவோம் உங்கள் கருத்துக்களோடு வாருங்கள்!

'அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'

இந்த வசனத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? பூமி தட்டையானது என்றா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>அறிவில் மிகைத்தவன் நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவனே.<<<

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் அன்புச்சகோ தாஜுதீன். இறைவனைப் பற்றி அவன் குணம் யாது என்பது பற்றி குரானில் சொல்லப்பட்டதை அக்கறையோடு கவனித்தால் இஸ்லாம் பற்றிய தெளிவு நமக்குத் தெளிவாகவே பிறக்கும்.

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்

குர்-ஆனின் தொடக்கமே இந்த வரிகள்தாம்!

இறைவன் யார்?

அன்புடையவனே இறைவன்
இறைவனிடம் மட்டுமா அன்பிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அன்பிருக்கிறது
ஆனால் இறைவனிமிருக்கும் அன்பு எப்படியானது?
நிகரற்றது - அப்படியான நிகரற்ற அன்பினை
மனிதனால் தரவே முடியாது

அருளுடையோனே இறைவன்.
இறைவனிடம் மட்டுமா அருளிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அருளிருக்கிறது
ஆனால் இறைவனிடமிருக்கும் அருள் எப்படியானது?
அளவில்லாதது - அப்படியான அளவிலா அருளை
மனிதனால் தரவே முடியாது

அறிவு என்பதைக் கண்டால்
நீங்கள் அறியாததையும் அறிந்தவன் இறைவன்
அளவற்ற நிகரற்ற அறிவுடையோன் இறைவன்
அதனால்தான் அவன் மனிதர்களிடம் சொல்கிறான்
என்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும்
உங்களை நான் படைக்கவில்லை என்று

இறைவனை அறிவதென்பதென்ன சும்மாவா?
அதற்கு எத்தனை அறிவு வேண்டும்?
என்னை அறிவதற்காகவே உங்களைப் படைத்தேன்
என்று இறைவன் கூறும்போது
எத்தனை அறிவை அவன் மனிதனுக்குத் தந்திருப்பான்
மனிதன் அதைப் பயன்படுத்த வேண்டாமா?

அறிவுடையோனே இஸ்லாமியன்.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்புச்சகோ சமீம் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்பும் அமைதியும் நிலவட்டும்!

>>>>>அப்பாட அதிரை நிருபரில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும் ஓய்ந்து விட்டது மாஷா அல்லாஹ்<<<<

நலமாக இருக்கிறீர்களா? சுனாமியின்போது ஊரில் இருந்தீர்களா அல்லது வலைகுடாவில் இருந்தீர்களா? என்ன பணி செய்கிறீர்கள்? உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுங்களேன். பழகுவோம்!

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>>>>>>>>>>>>>>>>
புகாரி - ”மனதை மயக்குவது இசைக் கருவிகளின் இசை. அதனால் இசைக்கருவிகள் கூடாது” இதுதான் உங்கள் மடல்களின் சாராம்சமா?

சித்திக் - ஆம் ..தாங்கள் புரிந்து கொண்டது சரிதான்
<<<<<<<<<<<<<<<<<<<<<<

அன்பினிய சகோ சித்திக்,

ஒருவனின் மனதை மிக மிக அதிகமாக மயக்குவது எது என்று உங்களால் கூறமுடியுமா?

அதாவது கவிதையைவிட, இசையைவிட அதிகமாக மயக்குவது எது?

அப்படி எது மயக்குகிறதோ அதை அப்படியே இஸ்லாமில் தடை செய்துவிடலாமா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>>>>>சகோ.சித்தீக் அவர்களின் கருத்து பட்டை தீட்டிய வைரம். அல்ஹம்துலில்லாஹ் சைத்தான் எப்படியெல்லாம் முடிச்சி போடுகிறான். சங்கிலித்தொடர்போல் தவறுகளை கோர்த்திருக்கிறான். இளைதாக முள் மரம் கொல்க! அல்லாஹ் எல்லாரையும் சைத்தானிடமிருந்தும், துற்காரியத்திலிருந்தும் காப்பானாக! ஆமீன்.<<<<<<<<<

அன்பிற்கினிய சகோ crown அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் அருளப்படட்டும்!

ஆழ்ந்து யோசித்து அற்புதமான கருத்துக்களை மிக அருமையாக சில வரிகளிலேயே நச்சென்று செம்மையாக உயர்வாக உங்களால் மட்டும் எப்படித்தான் முன்வைக்க முடிகிறதோ? நான் உங்களின் ஆழமான எழுத்துக்களின் ரசிகனாகவே ஆகிவிட்டேன்.

வாழ்க வள்ளுவக் குறள்கள்!

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

சகோ.புகாரி அவர்களுக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நலமா கவிஞரே!

நல்லதை எடு; கெட்டதை விடு என்று சொல்லி முடித்தல் சுலபமே. இதைச் சொல்லிவிட்டு “இப்படிச் செய்தால் எப்படி வரும் கருத்து வேறுபாடுகள்’ என்று கேட்டு வைப்பதும் சுலபமே. ஆனால், நல்லது எது; கெட்டது எது என்று தீர்மானிப்பதில்தான் இருக்கிறது சூட்சுமம்.

நான் நல்லதென்று கண்டு சொல்வதை எவரோ கெட்டதென்று சொல்ல முயல்வதும்; கெட்டதென்று தள்ளி வைப்பதை நல்லதென்று கொண்டாடுவதும்தான் வேறுபாடுகளுக்கான துவக்கம்.

இசையில் போதை இருக்கிறது புகாரி ஸார்.
எனக்கு ஏற்பட்டது.
ஏற்படுகிறது.
போதை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்லவா? சிந்தையை மயக்கும் புத்தியை மழுங்கச் செய்யும் இசைக் கருவிகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டதுதான். இதில் விவாதிக்க ஒன்றுமில்லை. மனித இயல்பாம் ரசனையைப் பொருத்து வேறு வேறு இசைக்கருவிகள் வேறு வேறு மனிதனை மயக்குகிறது என்பதே உண்மை.

சுயநினைவை இழப்பதை, அது ஒரு நொடியேயாயினும், இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இசைக்கருவிகள் கேட்பவரின் சுயம் கொய்கின்றன என்பதை மறுக்க முடியாது. (குறைந்தபட்சம் என்னைப் போன்றோரின் புத்தியை மயக்குகின்றன). “அப்ப, உறங்கும்போதும் அறுவை சிகிச்சைக்கான க்ளோரோஃபாமின்போதும் சுயம் இழப்பது ஹராமா?” என்று கேட்டு தங்களின் வாத சாதுர்யத்தைக் காட்டமாட்டீர்கள் என நம்புகிறேன்)


தாஜுதீன்:
எனினும், ஒரு சப்தம் தடை செய்யப்பட்ட அறைக்குள் முடங்கிக்கிடந்தால் மட்டுமே இசையை கேட்காமல் வாழ்தல் சாத்தியம்.என்பதே யதார்த்தம்.
வீட்டை விட்டு வெளியே வந்த முதல் நிமிடம் முதல் நம் காதுகளில் பாடல்கள், இசைப் பாடல்கள், இசைக்கருவிகளின் சப்தங்கள் என வந்து பாய்வதை தடுக்க முடியுமா?

எனவே, இரண்டு நிலைப்பாடுகளுக்குமிடையே ஒரு நூலிழை அளவு மட்டுமே தீர்வு இருக்கிறது. அதை, ஜமீல் காக்கா போன்றோரே ஆதாரங்களுடன் விளக்கமுடியும்.

சகோ: புகாரி/தாஜுதீன்

ஆன்மீகத்தை விவாதிக்கும்போது தத்தமது வாத சாதுர்யங்களைக் காட்டிலும் மார்க்க ஆதாரங்களையே வைக்க வேண்டும். மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் சாமான்யன் புரிந்து கொள்ளும் விதத்தில் பதில் கிடைத்துவிடுவதில்லை. நம்பிக்கையே ஆன்மிகத்தின் அடிநாதம்.

எனவே, தொடர்ந்து விவாதிக்க விரும்பினால் தயை செய்து மார்க்க ஆதாரங்களை வைத்து விவாதிக்கவும்.

அதிரை சித்திக் said...

மதி மயக்கம் ..அவரவர் ஈடுபாடு கொள்ளும்

விசயங்கள் எனகூறலாம் ,,அது போன்ற

மதி மயக்கம் பற்றி மார்கத்தில் என்ன கூற பட்டுள்ளது

என்பதை மார்க்க அறிஞர்கள் தான் விளக்க

வேண்டும் .மதி மயக்கம் இசையால் வரும் என்பதை

நாம் நன்கு உணர முடியும் ..அது ஆறு மாத குழந்தை

முதற் கொண்டே துவங்குகிறது அது மோல தாள மில்லா இசை

மற்ற படி தாங்கள் எதிர் பார்க்கும் பதில் என்னிடம் உள்ளதா

என்று எனக்கு தெரிய வில்லை ,,அளவுக்கு அதிகமாக

புகழ்வது ..மதி மயக்கத்தை தரும் ...ம்..வேற என்னா..

தெரியல கவிஞரே ..தாங்களே விடை தாருங்கள் ..

நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் உங்களிடம்

உள்ளது என்று எனக்கு தெரியும் அது சரியான

பதிலா மார்க்க அறிஞர்கள் பார்வைக்கு வைப்போம்

அன்புடன் புகாரி said...

அன்புக்கவிஞர் சகோ சபீர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>சிந்தையை மயக்கும் புத்தியை மழுங்கச் செய்யும் இசைக் கருவிகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டதுதான். மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் சாமான்யன் புரிந்து கொள்ளும் விதத்தில் பதில் கிடைத்துவிடுவதில்லை. நம்பிக்கையே ஆன்மிகத்தின் அடிநாதம். எனவே, தொடர்ந்து விவாதிக்க விரும்பினால் தயை செய்து மார்க்க ஆதாரங்களை வைத்து விவாதிக்கவும்.<<<<<<

”தடுக்கப்பட்டிருந்தால்” என்ற ஒரு சொல்லை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது நாகரிகமான செயல். பலரும் ஐயமே அற்றவர்களைப்போல தடாலடியாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை அடுத்தவர்களின்மீது ராணுவத்தனமாகப் புகுத்தப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவர்கள் இஸ்லாத்தில் மேன்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் பிழை அவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆனால் விபரம் தெரிந்தவர்களுக்கு அவர்களின் பிழை அழகாகத்தெரியும் அவர்களும் மிக அழகாக ஓர் நகைப்பை அள்ளித் தெளிப்பார்கள்.

குரல் வழி இசையும், கருவி வழி இசையும் தடுக்கப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் குர்-ஆனில் இல்லை. அப்படி இங்கே யாரும் எதையும் தரவில்லை. உறுதியற்ற ஹதீசுகள், அவற்றை புரிந்துகொள்ளும் நிலையில் தடுமாற்றம் போன்றவற்றையே இங்கே காணக்கூடியதாக இருந்தது.

குர்-ஆனில் தெளிவாக எவை தடுக்கப்படவில்லையோ அவற்றை நாம் செய்யலாம் அல்லது அனுபவிக்கலாம்.

இசை பற்றிய ஹதீஸ்களில்தான் சில குழப்பங்கள் இருக்கின்றன. அவை ஆழமாகவும் அவற்றின் உறுதித்தன்மையை அறியும் முகமாகவும் அணுகப்படல் வேண்டும். அப்போதுதான் உண்மை தெளிவாகும்.

துவக்கமாக நான் ஒரு ஹதீசை இங்கே இடுகிறேன்:

`A'ishah (may Allah be pleased with her) narrated: “Allah's Messenger (peace and blessings be upon him, came to my house while two girls were singing beside me the songs of Bu`ath (a story about the pre-Islamic war between the two tribes of the Ansar, the Khazraj and the Awus). The Prophet (peace and blessings be upon him) laid down and turned his face to the other side. Then Abu Bakr came and spoke to me harshly saying, ‘Musical instruments of Satan near the Prophet (peace and blessings be upon him)?' Thereupon, Allah's Messenger (peace and blessings be upon him) turned his face towards him and said, ‘Leave them.' When Abu Bakr became inattentive, I signaled to those girls to go out and they left.” (Reported by Al-Bukhari)

ஆயிசா (ரலி) கூறினார்: என்னருகில் இரு பெண்கள் இஸ்லாமிற்கு முந்தைய கால பழங்குடியினரின் யுத்தம் பற்றிப் பாடிக்கொண்டிருக்கும்போது இறைதூதர் என் வீடு வந்தார், முகத்தை மறுபுறமாகத் திரும்பிய நிலையில் கீழே அமர்ந்தார். அப்போது அபுபக்கர் வந்து ரசூலுக்கு அருகில் சாத்தான்களின் இசைக்கருவிகளா என்று என்னைக் கடிந்துகொண்டார். அப்போது நபிகள் நாயகம், அபுபக்கரின்(ரலி) முகமாகத் திரும்பி, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்றார். இதனால், அபு பக்கர் (ரலி) சுரத்தின்றி போனதும், நான் செய்கையால் அந்தப் பெண்களை வெளியேறச் சொன்னேன், அவர்களும் வெளியேறினார்கள்.

இசைக்கருவிகளை இசைத்தனர் பெண்கள்
அவற்றைக் கேட்டு மகிழ்ந்திருந்தார் நாயகத்தின் மனைவி
அங்குவந்த நபிகள் நாயகம் அதைத் தடுக்கவில்லை
தடுக்க வந்தவரையும் நபி தடுக்காதே என்றார்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ சித்திக்,

>>>>மதி மயக்கம். அவரவர் ஈடுபாடு கொள்ளும் விசயங்கள் எனகூறலாம்<<<<<

நா
உணவில் மயக்கம் உண்டு.
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

செவி
சொற்பொழிவுகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

கண்
காட்சிகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

மூக்கு
வாசனையில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

தோல்
தொடு உணர்வில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

ஐம்புலன்களும் மயங்கும் தன்மை வாய்ந்தவை
மயங்காதவை புலன்களே அல்ல

புலன்கள் முழுவதுமாய் அடங்குவது
அடக்கமாகும் நாளில்தான்

இந்த ஐம்புலன்களும் ஒருசேர மயங்கும்
ஒற்றை விசயம் ஒன்றுண்டு

அதை வள்ளுவன் இப்படிச் சொல்லுவான்

குறள் 1101:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விழிகளால் கண்டு
செவிகளால் கேட்டு
நாவால் சுவைத்து
மூக்கினால் முகர்ந்து
மேனியால் தீண்டி
என
ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும் இன்பம்
பெண்ணிடம் மட்டுமே உள்ளது

இந்த ஒண்ணேமுக்கால் அடி குறளை
வைரமுத்து தன் திரையிசைப்பாடல் ஒன்றில்
இரண்டே சொற்களில் சொனார்:

”ஐம்புலன்களின் அழகியே”

மயக்கம் கொள்ளுதல் இஸ்லாமில் தடுக்கப்பட்டது என்பது
ஆழ்ந்த நோக்குதலுக்குரியது அன்புச் சகோதரா!

அன்புடன் புகாரி

crown said...

Asan Buhari சொன்னது…

>>>>>>>>சகோ.சித்தீக் அவர்களின் கருத்து பட்டை தீட்டிய வைரம். அல்ஹம்துலில்லாஹ் சைத்தான் எப்படியெல்லாம் முடிச்சி போடுகிறான். சங்கிலித்தொடர்போல் தவறுகளை கோர்த்திருக்கிறான். இளைதாக முள் மரம் கொல்க! அல்லாஹ் எல்லாரையும் சைத்தானிடமிருந்தும், துற்காரியத்திலிருந்தும் காப்பானாக! ஆமீன்.<<<<<<<<<

அன்பிற்கினிய சகோ crown அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் அருளப்படட்டும்!

ஆழ்ந்து யோசித்து அற்புதமான கருத்துக்களை மிக அருமையாக சில வரிகளிலேயே நச்சென்று செம்மையாக உயர்வாக உங்களால் மட்டும் எப்படித்தான் முன்வைக்க முடிகிறதோ? நான் உங்களின் ஆழமான எழுத்துக்களின் ரசிகனாகவே ஆகிவிட்டேன்.

வாழ்க வள்ளுவக் குறள்கள்!

அன்புடன் புகாரி
------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். மனதார பாரட்ட நல்ல மனம் வேண்டும். நன்றி!ஆனாலும் என்னைபற்றிய பாரட்டல் ' சற்று மிகையாக படுகிறது எனக்கு காரணம் அதற்கு தகுதியானவனா நான் என்றால் கேள்வியே மிஞ்சும். பெரும் கவிஞனான , தமிழ் புலவன் என்னை பற்றி பாராட்டியது மகிழ்சிதான் என்றாலும் எல்லா புகழும் அல்லாஹுக்கு மட்டுமே! அன்பின் காரணமாய் சிலர் என்னை இப்படித்தான் பாராட்டி விடுகிறார்கள். அல்லாஹ் எல்லாருக்கும் நல்லருள் அருளட்டும். ஆமீன்.புகழனைத்தும் அல்லாஹுக்கே!

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள்.
இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள்//.

அன்புள்ள ஹசன் புஹாரி காக்கா,உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

நம் பெயர் அரபி உச்சரிப்பைக் கொண்டது.எனவே,அதை ஹசன் என்ற அழகான பெயரை தமிழுக்காக அசன் என கொள்வது சரியல்ல.

//ஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் அல்ல
சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக
உருவாக்கப்பட்ட எழுத்துமுறை
நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல
ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமே
கிரந்தம் பயன்படுத்துவேன்//

தமிழில் வழக்கு நிலையில் வந்துவிட்ட ,ஹ ஜ ஷ ஸ போன்ற வாடா மொழி சொற்களின் கலப்பால்,தமிழுக்கு குறிப்பாக நமக்கு நன்மையே.உதாரணமாக,அல்லாஹ்,ஹஜ்,அஷ் ஹது, ரசூலுல்லாஹ் இன்னும் இது போன்ற வார்த்தைகளை உச்சரிப்பு தவறாமல் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.அல்ஹம்துலில்லாஹ்.வெற்று தமிழை வைத்து எப்படி உச்சரிக்க முடியும்?பொருள் மாறும்.

//ஹசன்பாவா என்பதுதான் என் தந்தையின் பெயர்
எனக்கு விபரம் தெரியும் முன்பே
அவர் உயிரை விட்டுவிட்டார்//
எல்லாம் வல்ல அல்லாஹ்,தங்கள் தந்தையின் எல்லா பாவங்களையும் மன்னித்து - ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக,ஆமீன்

//நான் கனடா வந்ததும் என் பெயர் இப்படித்தான் மாறிவிட்டது//

நீங்கள் சொன்ன அதே தான் இங்கு அமெரிக்காவிலும் கடைபிடிக்கபடுகிறது.

//தமிழ் வட்டத்தில் இளையவர்கள் மரியாதை காரணாம
ஆசான் என்றும் அழைப்பார்கள் :)//
பல அறிவு சார் செய்தி தரும் நீங்கள் எனக்கும் ஆசானே.(ஆனால் இசைக்கு அல்ல,அவ்)

இப்னு அப்துல் ரஜாக் said...

ஹசன் புஹாரி காக்கா,

1)எனக்கும் தாய் மொழி தமிழே ஆனாலும்,தமிழை விட - நான் முதல் இடம்,சிறப்புத் தகுதி கொடுப்பது அரபி மொழிக்கே.காரணம் அது அல்லாஹ்வின் இறுதி வேதம் -அரபி மொழியில் இருப்பது,இரண்டாவது நம் மாபெரும் தலைவர் அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மொழி.எனவே என் தாய் மொழியை விட,என்(நம்) தலைவரின் தாய் மொழியை நேசிக்கிறேன்.
2)தமிழ் என் தாய் மொழி என்பதாலும்,அதில் நல்ல ஓசை நயம் (இசை நயம் அல்ல)இருப்பதாலும் அதையும் ஏற்கிறேன்.
3)ஆங்கிலம்,இது உலக மொழி மட்டுமல்ல.சிறு வயது முதல் என்னைக் கவர்ந்த மொழி,அதையும் நேசிக்கிறேன்.
4)ஹிந்தி,இந்தியாவின் தேசிய மொழி.என் தந்தையின் விருப்பம் பேரில் அதைக் கற்று - அதை பெரிதும் விரும்புகிறேன்.எல்லா மாநிலங்களிலும் ஹிந்தியை கொண்டுவந்தால் (கட்டாயப்படுத்தி அல்ல,விரும்பி)அதை இரு கரம் கொண்டு இன்ஷா அல்லாஹ் வரவேற்பேன்.
5)ஏகன் நமக்கு தந்த எல்லா மொழிகளையும் நேசிக்கிறேன்,எல்லா மொழிகளிலும் குரான் மொழி பெயர்ப்பு வந்துவிட்டது.

தமிழுக்கே தனி சிறப்பு,மற்ற மொழிகளுக்கு கிடையாது என்று ஒரு சாராரும்,தமிழ் ஒரு நீச பாஷை என மறு சாராரும் முட்டி மோதிக் கொள்ளும் அவலநிலை நம்மிடையே வரக்கூடாது,மொழி வெறி கூடாது,இது என் தனியான கருத்து.

எனவே,ஹசன் புஹாரி காக்கா அவர்களே,அரபி உச்சரிப்பு போலவே உங்கள் பெயரை அழையுங்கள் என அன்பாய் வேண்டுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள ஹசன் புஹாரி காக்கா,இசை பற்றி குரானும்,ஹதீசும் தெளிவாகவே நமக்கு சொல்லும் போது,நீங்கள் அதற்கு தவறான விளக்கம் கொடுப்பது மிக கண்டனத்துக்குரியது.

"ஓசைக்கும்,இசைக்கும்"உள்ள உங்கள் தவறான புரிதலே,உங்கள் தடுமாற்றத்துக்கு காரணம்.

அன்புடன் புகாரி said...

அன்பினிய சகோ அர அல,

>>>>>எனக்கும் தாய் மொழி தமிழே ஆனாலும்,தமிழை விட - நான் முதல் இடம்,சிறப்புத் தகுதி கொடுப்பது அரபி மொழிக்கே.காரணம் அது அல்லாஹ்வின் இறுதி வேதம் -அரபி மொழியில் இருப்பது,இரண்டாவது நம் மாபெரும் தலைவர் அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மொழி.எனவே என் தாய் மொழியை விட,என்(நம்) தலைவரின் தாய் மொழியை நேசிக்கிறேன்.<<<<<

ஓர் ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் ஒருவர் உங்கள் வயது என்ன என்று கேட்டார். 63 என்று சொன்னார். சில வருடங்கள் கழிந்தன. மீண்டும் இன்னொருவர் அவரிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டார். 63 என்று சொன்னார்.

ஏன் தெரியுமா?

கிரந்த எழுத்துக்கள் பற்றி தெளிவாக என் வலைப்பூவில் நிறைய எழுதி இருக்கிறேன். அவற்றை வாசித்து நிதானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அன்புடன் புகாரி
அசன் புகாரி
அசன் வாப்பாவுக்குப் பிறந்த அன்பு புகாரி :-)

அன்புடன் புகாரி said...

அர அல: இசை பற்றி குரானும்,ஹதீசும் தெளிவாகவே நமக்கு சொல்லும் போது, நீங்கள் அதற்கு தவறான விளக்கம் கொடுப்பது மிக கண்டனத்துக்குரியது.

அன்பிற்கினிய சகோ அர அல,
அஸ்ஸலாமு அலைக்கும்!

குர்-ஆனில் இசை கூடாதென்று எங்கே சொல்லி இருக்கிறது? குர்-ஆனில் இசை தடுக்கப்பட்ட ஒன்று என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.

முதலில் குர்-ஆன் பற்றிய தெளிவு பெறுவோம். குர்-ஆன் எதைத் தடை செய்யவில்லையோ அதை மனிதர்கள் தடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அதுதான் மிகுந்த கண்டனத்திற்குரியது. கண்டனத்திற்குரியது மட்டுமல்ல தண்டனைக்குரியது.

ஹராம் என்று குர்-ஆனில் அறிவிக்கப்படாதவற்றை ஹராம் என்று சொல்வது பெரிய ஹராம். அது குர்-ஆனிலேயே சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தடுக்கப்படாத எதையும் நாம் ஹராமாகத் தடுக்கவேண்டாம்.

நபிகள் நாயகம் இசைக்கருவிகளைக்கொண்டு இசைக்கப்பட்ட பாடலைத் தடுக்கவில்லை, தடுத்தவரையும் தடுக்க விடவில்லை என்ற ஹதீசையும் முன்பே இங்கு நான் இட்டுவிட்டேன். வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

குர்-ஆன் முழுமையானது என்று நம்புகிறீர்களா இல்லையா? குர்-ஆனில் எவையெல்லாம் கூடாதோ அவையெல்லாம் சொல்லப்பட்டுவிட்டன. எதையெல்லாம் கடைபிடிக்கவேண்டுமோ அவையும் சொல்லப்பட்டுவிட்டன. இறைவனுக்கு இசையைத் தடை செய்ய வேண்டியிருந்தால் அதை அழுத்தமாக குர்-ஆனில் சொல்லி இருக்கமாட்டானா? ஏதுமறியாதவன் இறைவன் என்றா நினைக்கிறீர்கள்? குர்-ஆன் முழுமையான நூல். அதை நீங்களே நம்பாவிட்டால் எப்படி?

ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் குர்-ஆன்தானே எல்லாமும்? அவனுக்கு வேறு ஏதேனும் தேவையென்றால் அதை இறைவனே தன் நூலில் கொடுத்திருக்கமாட்டானா?

ஹதீஸ்களைப் பற்றிய முழுவிபரங்களும் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால், நீங்கள் அவற்றைப்பற்றி அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோதரர் ஹசன் புஹாரி அவர்களே,நீங்கள் குரானுக்கும்,குரானின், செய்திகளை விவரிக்கும் ஹதீஸ்களைப் பற்றி தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளீர்கள்.

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இந்த நாதம் இருவகைப்படும் 1) ஆகத நாதம், 2) அனாகத நாதம்.

ஆகத நாதம்

மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப் படுவதற்கு *ஆகத நாதம்* என்று பொருள் இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதை குறிக்கும்.

அனாகத நாதம்

மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர் அதாவது கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றை கருதலாம்.



இசையால் நமக்கு நன்மை-தீமை என்ன ?

நன்மை :

1. இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறது.

2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறது.

3. புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. நேரம் போவது தெரியாது – டைம் பாஷ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

தொடர்ச்சி...........

தீமை :

1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது

2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர் களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது

3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.


4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.


5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.


6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இஸ்லாம் என்ன சொல்கிறது இசையை பற்றி :

1.இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறதா..?

இதைப்பற்றி அறிய திருமறையை புரட்டிப்பார்த்தால் கீழ்கண்ட இறைவசனமே நம் முன் வருகிறது! இசையால் உள்ளம் அமைதி பெறும் என்று கூறுவோரின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாக உள்ளது!


நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

இதனால் முதல் வாதம் பொய்யாகிறது.


2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறதா..?


இசையை வைத்து மருத்துவம் செய்யலாம் ( மன ரீதியான, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ) என்பது உண்மையான ஒன்றுதான் . இது இன்னும் பரவலாக வரவில்லை என்பது வேறு விஷயம் .

ஆனால் இதை வைத்துகொண்டு இசை கேட்கலாம் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாது. ஏன் என்றால் இசை கேட்பது வேறு இசையால் மருத்துவம் செய்வது வேறு ,உதரணமாக சொல்லவேண்டும் என்றால்

மதுவில் இருக்கும் alcohal என்னும் பொருள் நம் உடல்நலத்தை கெடுக்கிறது தெரிந்த விஷயம்

ஆனால் அதே மது நாம் குடிக்கும் இருமல் மருந்தில் சிறிதளவு கலக்க பட்டுள்ளது. இதை மருத்துவத்திற்காக நாம் ஏற்றுகொள்கிறோம். இதை வைத்து கொண்டு மது அருந்துவது கூடும் என்போமா ? என்று சிந்தித்தால் நமக்கு விளங்கிவிடும்.

3,4. புத்துணர்ச்சி கிடைக்கிறதா..? நேரம் போவது தெரியாதா..?

இது நிரூபிக்க பட்ட உண்மை அல்ல…, இவர்கள் கூறும் புத்துணர்ச்சிக்கு பின்னாள் மனசோர்வு தான் மிஞ்சும் .. நேரம் வீணடிப்பதை நல்ல விஷயம் என்று சொல்ல முடியாது. வாழ்கையில் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அந்த நேரத்தை செலவிடலாம்.

இது போக இசையை ஒரு வரம்புக்கு உட்பட்டு அளவோடு , ஒளி அழவை நிதானமாக கேட்பதனால் ஒன்றுமில்லையே என்று வாதிடுபவர்கள் உண்டு மேலும் மற்றொரு கேள்வி இறை நினைப்பை ஏற்படுத்தும் நல்ல கருத்துள்ள இஸ்லாமிய பாடலை ஏன் கேட்ககூடாது என்பது….

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு விஷத்தை தடுக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப நிலையை தகர்க்கும் ,அப்போது தான் ஒரு தீமை முழுவதுமாக தடுக்க படுகிறது என்று பொருள். வளர்ந்து வரும் தீமைக்கு தடை போட்டால் அவை உண்மையான தடையாக இருக்காது..

இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்:தமிழாக்கம்


பல்வேறு ஆதாரப்புர்வ ஹதீதுகளில் இசைக்கு தடைகள் உள்ளன:

இப்னு அப்துல் ரஜாக் said...

தொடர்ச்சி.........

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :



(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள்.ஆதன் உண்மையான

பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக்கருவிகளை இசைத்தும் பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும் பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.

(இப்னு மாஜா – கிதாபுல் ஃபிதன்)



நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில

கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் பட்டு,மது,இசைக்

கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில

கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகைள இடையன்

(காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.

அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான்.(எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590



ஆனால் சில ஹதீதுகளில் ”தஃப் (கொட்டு)” இசைப்பதற்கு அனுமதிகப் பட்டுள்ளது போன்று குறிப்புகள் உள்ளன. (அதாவது ஒரு புறம் மூடப்பட்டும் மறுபுறம் திறந்த நிலையிலும் இருக்கும்) தாம்புரைன்.



ஆயிஷா(ரலி) அறிவித்தார்.



என் அருகே இரண்டு சிறுமியர் “ தஃப்”எனும் *கொட்டு அடித்துக்

கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக்

கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும்

விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி அபூ

பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்”என்று

கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.

*(புகாரி 987)



ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்)

அவர்களிடம்) கூறினார்.

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள்

வீட்டுக்கு) வந்தார்கள்.எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று

நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில

(முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு

பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்)பாடிக்

கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி எங்களிடையே

ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள்.உடனே நபி(ஸல்) அவர்கள் ‘(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு

முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’என்று

கூறினார்கள். (புகாரி 5147)



இதன்மூலம் மேற்கண்ட ஆதாரத்தின்படி தஃப் இசைக்கருவியைத் தவிர மற்ற பொதுவான இசை கருவிகளுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது போன்ற முடிவு கிடைக்கிறது!



இசை பொதுவாக ஒரு மனிதனை மயக்கி அல்லாஹ்வின் பாதையிலிருந்து விலக்குகிறது. மேலும் இசையானது ஆண் அல்லது பெண்ணுடைய மூளையில் (சிந்திக்கும் ஆற்றல்) இடம் பிடித்து தன்னை படைத்த படைப்பாளனையும் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற நினைவையும் மரக்கடிக்க விடுகிறது.



இசையுடன் கூடிய பாடல்களை ரசிக்கும் மக்கள் அதன் மூலம்

உருவாகும் அர்த்தமற்ற, தவறான, மார்க்கத்திற்கு முரணான கருததுக்களையும்

வரவேற்கின்றனர் எனவே இது போன்ற ஆங்கில, இந்தி பாடல் வரிகளையும், கஜல்களையும் ரசிக்கக்கூடியவர் அதில் உள்ள தவறுகளை உணர வேண்டும்.

எனவே தான் இசை ஒரு மனிதனது மூளையை வசப்படுத்தி அவனை நேரான பாதையிலிருந்து தடம்புரளச் செய்கிறது என்பதாக கூறுகிறோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

மேற்கண்ட அருமையான விளக்கத்தை தந்தவர் சகோ முஹம்மத் நியாஸ் அவர்கள்,இலங்கையை சேர்ந்தவர் அவருக்கு அல்லாஹ் மென்மேலும் மார்க்க அறிவை கொடுப்பானாக

இப்னு அப்துல் ரஜாக் said...

மேலும் இது சம்பந்தமாக சகோ பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் ஆராய்ந்துள்ளார்கள்.(எல்லாம் வல்ல அல்லாஹ்,பீஜே அவர்களுக்கு நீண்ட ஆயுளும்,நல்ல சுகமும் கொடுப்பானாக,)இசை,இஸ்லாத்திற்கு எதிரானதே என்று.

மேலும் விபரங்களறிய http://www.onlinepj.com/aayvukal/isai_ayvu/ என்ற லிங்கை பார்வையிடவும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்!


வீணே நீங்களும் குழம்பி,மற்றவர்களையும் குழப்ப வேண்டாம் சகோ.சைத்தான் எப்படா,எப்படா என சமயம் பார்த்துக் கொண்டுள்ளான்,நம்மை கவுக்க

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தப் பதிவு, சுன்னத் ஜமாத் பேதியக்கம் பற்றிய கருவைப் பேசுபொருளாகக் கொண்டது என நம்புகிறேன்.

அன்பின் புகாரீ
உங்களுக்கு இசை விருப்பம் என்றால் வைத்துக்கொள்ளுங்கள். அதை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக (ஹலாலாக) ஆக்குவதற்கு உங்களுக்கு மட்டுமின்றி எவருக்கும் உரிமை கிடையாது.

இசைக்கருவிகளுக்கும் அவற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுவதற்கும் தெளிவான தடையுண்டு. அதை, அதற்கான இழையில் பேசலாம். பவரும் நேரமும் மிகக் குறைவு என்பதால் மீண்டும் பின்னர் வருவேன்.

இஸ்லாமியன் எனும் சொல்லாட்சி பிழையாகும். முஸ்லிம் என்றே எழுதுக!

hassaan said...

(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள்.ஆதன் உண்மையான

//பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக்கருவிகளை இசைத்தும் பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும் பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.
(இப்னு மாஜா – கிதாபுல் ஃபிதன்)//

Excellent Kaka...Above Prophet(PBUH) words ends the whole argument.

அதிரை சித்திக் said...

பாடுவோர் ..பாடினால் ..ஆடத்தோன்றும்

பாட்டுடன் தேன்கவி ..சேர வேண்டும் ..

பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும் ..

பாட்டை பற்றி பாட்டாலே பதில் ..

இசையின் பரிணாமம் நடனம்

நடனம் சைத்தானா..ஓதி படித்த சுல்தானா ..

அதிரை சித்திக் said...

முடிவுறாத ..நீண்ட போருக்கு பின் கிடைத்த

வெற்றியை கொண்டாடும் பொது இசைக்கப்பட்ட

இசையை அங்கீகரித்த இறை தூதர் ...தபஸ் முழக்கம்

யாரும் குறை கூறவில்லை ..ஆனால் தற்போதைய

கால கட்டத்தில் .அன்றாட அலுவல்களுகிடையே

ஐவேளை தொழவே நேரமில்லை இஸ்லாத்தின் நம்பிக்கையின்

முதமையான மறுமை பயம் நம்மை கவ்வ வேண்டும் என்பதற்கு

ஏற்ற சூழ்நிலை குறைவாக இருக்கும் இந்த சூழலில் இசை

தேவை யா இஸ்லாத்திற்கு எங்கு பார்த்தாலும் சோதனை இழி

சொற்கள் நாம் பலவகையிலும் தோல்வியை தழுவும் இந்நேரத்தில்

வெற்றி வாகை சூடி மகிந்த இசை இக்கால முஸ்லீம்களுக்கு

கண்ணீருடன் கூடிய து ஆ தேவையா ..கேளிக்கை யின்

அடையாளமான இசை தேவையா ..இறை தூதர் செயல் வடிவு

சுன்னத் ..சிலவற்றை தடுக்காமல் அங்கீகரித்தது ..பாவமில்லை

ஆனால் தற்காலிக இசை வடிவு ..எப்படி உள்ளது என சிந்தித்து

பாருங்கள் ..அந்த காலத்தில் பதிவு செய்து பாடவக்கும்

டேப் ரிக்கர்டர்கள் கிடையாது ..பாட கூடிய தருணம்

தொழுகைக்கு இடையூறான நேரமாக இருக்க வாய்ப்பில்லை

இறைதூதர் கண்கான்மிப்பு அவ்வபோது தவறுகள் களையப்பட்டன

இன்று ஒருவர் தவறு என்றால் மூன்று பேர் சரி என்கிறார்கள்

தயவு செய்து தற்போதைய சூழ்நிலையில் இசை கேட்கும்

சூழல் உள்ளதா இஸ்லாமிய இசை என்று எத்தனை பேர்

கேட்கிறார்கள் ,,ஆக்கமும் ,,அழிவும் நம் கையில் தான் உள்ளது

எகிப்து நாட்டில் நாகரீகம் அதிகம் அங்கு தான் அரேபியா நாட்டிற்கு

சினிமா எடுக்க படுகிறது அதுவும் இஸ்லாத்தில் தடுக்க படுகிறதா

இல்லையா பதிவாளர் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்

அன்புடன் புகாரி said...

அன்பின் சகோ ஜமீல் நாணா,
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜமீல்: இந்தப் பதிவு, சுன்னத் ஜமாத் பேதியக்கம் பற்றிய கருவைப் பேசுபொருளாகக் கொண்டது என நம்புகிறேன்.

”மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.” என்பதுபோல இந்தப் பதிவு இசை பற்றி நிறைய பேசுகிறது. அது தொடர்பான மறுமொழியை எதிர்பார்க்காமல் பதிவாசிரியர் இருந்தால் அது ஆச்சரியமில்லையா?

ஜமீல்: உங்களுக்கு இசை விருப்பம் என்றால் வைத்துக்கொள்ளுங்கள். அதை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக (ஹலாலாக) ஆக்குவதற்கு உங்களுக்கு மட்டுமின்றி எவருக்கும் உரிமை கிடையாது.

இதையே நான் உங்கள்முன் கூறலாமில்லையா? உங்களுக்கு இசை வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். அதை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாக (ஹராமாக) ஆக்குவதற்கு உங்களுக்கு மட்டுமின்றி எவருக்கும் உரிமை கிடையாது.

ஜமீல்: இசைக்கருவிகளுக்கும் அவற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுவதற்கும் தெளிவான தடையுண்டு. அதை, அதற்கான இழையில் பேசலாம்.

இதற்காக மிக ஆவலோடு நான் இங்கே காத்திருக்கிறேன். அதை சகோ தாஜுதீன் அவர்களிடமும் கூறினேன். இசை பற்றி இந்த இழையே நிறைய பேசுகிறது என்றாலும் நீங்கள் தனியிழை தொடங்குவதும் மகிழ்ச்சியே!

ஜமீல்: இஸ்லாமியன் எனும் சொல்லாட்சி பிழையாகும். முஸ்லிம் என்றே எழுதுக!

நாணா இதை நீங்கள் எனக்கு விளக்கங்களோடு கூறுங்கள். அறிந்துகொள்கிறேன். கூகுளில் இஸ்லாமியன் என்று தட்டினால், 148000 ஹிட்ஸ் வருகின்றன.

கடுமையான பணிச்சுமையில் இருக்கிறேன் என்றாலும், இங்கே எழுதுகிறேன். அதிகாலையில் எழுந்து அலுவலகம் போக நேரமாகிறது என்ற நிலையிலும் இதை எழுதுகிறேன். அர அல வுக்கு விரிவான பதில் பின்னர் எழுதுவேன்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ அர அல,
அன்புன் அமைதியும் நிலவுக.

>>>>இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்:தமிழாக்கம்<<<<

உங்களின் இரண்டு நீண்ட மடல்களையும் வாசித்தேன். இரண்டிலும் குர்-ஆன் இசைபற்றி எந்தத் தடையை விதித்திருக்கிறது என்று ஒரு வரியும் கூறவில்லை. எந்த ஆதாரமும் தரவில்லை. தன் சொந்த கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் கட்டுரையாளர். அப்படியான என் கருத்துக்களை என் ஆரம்ப மடல் முதற்கொண்டு நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசிக்கலாம். இசைபற்றிய என் கருத்துக்களே மேன்மையானதாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

>>>>>ஆன்மீகத்தை விவாதிக்கும்போது தத்தமது வாத சாதுர்யங்களைக் காட்டிலும் மார்க்க ஆதாரங்களையே வைக்க வேண்டும்.<<<<<

இப்படியாய் கவிஞர் சகோ சபீர் மட்டுமல்ல,
சகோ தாஜுதீன் கூறினார்,
சகோ சித்திக் கூறினார்.
சகோ ஜமீல் நாணா கூறினார்,
சகோ ஜகபர் சாதிக் கூறினார்

இவர்கள் மட்டுமா கூறினார்கள்
அன்புச் சகோ அர அல வாகிய நீங்கள் கூறினீர்களா இல்லையா?

ஏன் இப்படி? என்னிடம் குர்-ஆன் ஹதீஸ் வரிகளைக் கேட்கிறீர்கள். நானும் அக்கறையாய்க் கொண்டுவந்து கொடுக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் சொற்களுக்கே சம்பந்தம் இல்லாதவற்றைக் கொண்டுவந்து இடுகிறீர்கள். அவற்றுக்கும் நான் பதில் தருவேன். ஆனால் அதற்குமுன் குர்-ஆன் இசையைத் தடை செய்திருக்கும் வசனத்தை எனக்கு நீங்கள் காட்டித் தரவேண்டும்.

என்மீது உங்களுக்கெல்லாம் சண்டையா? என்னைச் சகோதரனாய் நீங்கள் யாரும் காணவில்லையா? ஏன்? நாம் இங்கே செய்வது நம் மதத் தொண்டு இல்லையா? ”என்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை” என்று சொல்லும் இறைவனை அவன் கட்டளைகளை அறிந்து கொள்ளும் முயற்சி தவறானது என்று இறைவனுக்கு எதிராக நிற்கிறீர்களா நீங்களெல்லாம்?

சகோ சமீம் சகோ க்ரவுன் எல்லாம் நொந்துகொண்டார்கள். ஏன்? கோபம் யார் மீது? என் மீதா அல்லது இறைவனின் மீதா? அல்லது மதத்தின் மீதா? அல்லது சிந்தனை என்பதே கூடாது என்ற எண்ணத்தினாலா? யாரோ எதிரியைக் காண்பதுபோல் என்னைக் காண்பதாக உணர்கிறேன். அப்படியான மடமையை யாரும் செய்யாதீர்கள். அது மிகத் தவறானது. இறைவன் மன்னிக்கமாட்டான்.

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது ஓடுகிறேன். மீண்டும் சந்திப்போம் நம் இனிய மார்க்கத்தின் உண்மைகளோடு!

அறிவுடையோனே இஸ்லாமியன், இதை நான் சொல்லவில்லை இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது!

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

நபி நாயகம் முகம்மது (ஸல் )அவர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன ஆனால் இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை .நபிகளாரின் வாழ்க்கை மனித சமுதாயத்தில் புரையோடி கிடந்த எண்ணற்ற பேதமைகளை கலைவதாகவே அமைந்திருந்தது மனித சமுதாயத்தில் இருந்த ஏற்ற தாழ்வு களைதல் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏழை எளியவர்க்கு உதவுதல் ஐ வேலை தொழுதல் என்று பல விசயங்களை வலியுறுத்தி உள்ளார்கள் ,பல விசயங்களை தடுத்துள்ளார்கள் .நீங்கள் கூறுவது போல "சிறுமிகள் இசைததை"கடிந்து கொள்ள வில்லை ,தடுக்க வில்லை .வெற்றி பெற்ற நேரங்களில் பாட பட்ட நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் தடை செய்ய வில்லை .அனால் இசைதலை அவர்கள் வாழ்வில் கடை பிடித்தார்களா ..? இது போன்று செய்யுமாறு வலியுறுத்தினார்களா இல்லையே ..இசை இப்பொழு உச்சாணி கொம்பில் உள்ளது இசை ரசிகர்களை வெளிப்பாடு எந்த அளவில் உள்ளது. அமைதி நிலவ வேண்டும் ..அதிர்ந்து பேசுவதை கூட விரும்பாத நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் சத்தமாக குர் ஆண் ஓதுவதை கூட தடுத்துள்ளார்கள் ஏன்என்றால் பிறர் தொழுகைக்கு இடையஊராக இருக்கும் என்பதால் .

.இஸ்லாம் வாழ்வை ருசிக்க சொல்கிறது ஆனால் வரம்பு மீரா கூடாது .நேர விரயத்தை விரும்பாத இஸ்லாம் .உல்லாசம் வரம்புடன் இருக்க வேண்டும் .தினமும் .மரணம் .மறுமை வாழ்கை சுவர்க்கம் "நரகம்"ஆகியவற்றினை நினைத்தல்..அழிவில்லா உலகம் மரணத்திற்கு பிறகான உலகம் ..என்பதையே அதிகம் நினைவு கூர்ந்துள்ளது

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ சித்திக் அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் அருளப்படட்டும் நாமெல்லோருக்கும்!

>>>>>இஸ்லாம் வாழ்வை ருசிக்கச் சொல்கிறது ஆனால் வரம்பு மீறக் கூடாது<<<<<

மிக மிக அழகாக நச்சென்று சொல்லி இருக்கிறீர்கள். என் பாராட்டுக்கள்!

இசையைப் பற்றி இஸ்லாமியர் வேறுபட்ட நிலைகளில் நின்று என்னவெல்லாம் சொல்லுகிறார்கள் தெரியுமா?

1. பழமைவாதிகளோ ஒரே போடாக ”இசையா சேச்ச்ச்சே.... சுத்தமா ஆவாது.... ஆவாது.... அதுதான் இஸ்லாம்” என்று ஒரே போடாய் இசையின் தலையில் பெருஞ்சுத்தியலைப் போட்டுவிடுகிறார்கள். இசை இல்லேல்ன்னா செத்தா போயிடுவியன்னு கேள்வி வேறு.

2. மனுசனோட குரலைக் கொண்டு எதுனாச்சும் பாடுவியலா பாடிக்கோங்க, அதை மட்டும்தான் ஏத்துப்போம். அதுவும் குர்-ஆன் பாங்கு அப்படின்னு இறைவனோட வசனங்களாத்தான் இருக்கணும். அதான் இஸ்லாம். அதைவிட்டுட்டு எதுனாச்சும் இசைக்கருவிகளைக் கையில் எடுத்தியலோ அல்லது பாட்டுகீட்டு பாடுனியலோ ரெண்டு கையையும் ஒடிச்சுப்புடுவோம் நாக்கை இழுத்துவெச்சு அறுத்துப்புடுவோம்.

3. குரலைக் கொண்டு எதுவேணும்னாலும் பாடிக்கோங்க. சதோசமா இருங்க. ஆனால் வாத்தியக் கருவிகளைமட்டும் தொட்டுப்புடாதீங்க. அதுதான் இஸ்லாம் என்போரும் இருக்கிறார்கள்.

3. நல்லா பாடுங்க, கூடவே அந்தக் கால அரபு நாட்டுல இருந்த ஒண்ணுரெண்டு இசைக்கருவிகளை வேண்டும்னா பயன்படுத்திக்கொள்ளுங்க. அதான் இஸ்லாம் என்பாரும் இருக்கிறார்கள். ஆனால் காவாலித்தனமான பாட்டெல்லாம் பாடிக்கிட்டுத் திரியாதிய.

4. இசை இஸ்லாமில் தடுக்கப்படவில்லை. தடுக்கப்படாததை தடுக்கப்பட்டது என்று சொல்வது இறைவனையே மதிக்காததன்மை. அது நமக்கு வேண்டாம் அதுதான் இஸ்லாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

5. இசைகூடாதுன்னா அப்படியே விட்டுடுங்களேன் என்று நமக்கு உபதேசம் செஞ்சிட்டு, சினிமா, நாடகம், பாட்டுன்னு அப்படியே ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் கண்ட இஸ்லாம் அதுதான்.

6. இசையானால் என்ன, கவிதையானால் என்ன அல்லது வேறு கலைகளானால் என்ன, உன்னை முழுவதும் இழந்துவிடாத கட்டுப்பாட்டோடு மகிழ்ச்சியாய் வாழ். உண்ணு, பருகு, ஆனால் வரம்பு மீறினால் இறைவன் உன்னை மன்னிக்கமாட்டான். அவ்வளவுதான் இஸ்லாம் என்பாரும் இருக்கிறார்கள். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு!

இன்னும்கூட சில வகைகளைக் கூறலாம். ஆனால் இதுவே போதும். இந்த வகைகள் ஒவ்வொன்றிலும் இங்குள்ளோரும் கூட ஒரு சிலராவது இருப்பர். ஆனால் உலகமொத்தம் என்று எடுத்துக்கொண்டால், நிச்சயம் அத்தனையிலும் ஏராளமானோர் உண்டு.

ஏன் இந்த குழம்பிய நிலை? இவற்றிலிருந்து தெளிவுபெற நாம் என்ன செய்யவேண்டும்? யோசித்தீர்களா?

இதுதான் குர்-ஆன்
இதுதான் ஹதீஸ்
இதுதான் இஸ்லாம்

இவற்றில் மனிதர்களுக்கு இடையே நிலவும் கருத்துவேறுபாடுகளின் இடைவெளிகளைக் குறைத்துக்கொண்டே வரவேண்டும். அதற்கு திறந்த மனமும் தெளிந்த அறிவும் வளர்க்கப்படவேண்டும். வளர்த்தால் என்ன? ஏன் வளர்க்ககூடாது என்று ஓர் அலுச்சாட்டியம் சிலருக்கு?

சிலரின் முரட்டுத்தனமான அணுகுமுறைகளாலும், அறிவைத் தேடாத இயல்புகளாலும், இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களாக இருக்கவிடாமல், ஒப்புக்குச் சப்பாணிகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் காலங்காலமாக. இந்த நூற்றாண்டிலாவது நாம் சிந்திப்போமே ஒருங்கிணைந்து. மதம் வளர்ப்போமே மனிதம் போற்றி. மார்க்கம் என்றால் வாழ்க்கை என்று காட்டுவோமே!

அறிவுடையோனே இஸ்லாமியன்!

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள சகோ ஹசன் புஹாரி அவர்களே,நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் கதைதான் உங்களுடையது.இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டதே என ஹதீஸ்கள் மூலம் அறியும்போது,இன்னும் நீங்கள் முரண்டு பிடிப்பது சரியல்ல.லகும் தீனுக்கும் வலியதீன்.that's it

அன்புடன் புகாரி said...

அதிரை நிருபர் சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்!

எனக்கு வந்த ஒரு கேள்விக்கு பதிலை இங்கேயும் இடுகிறேன், தொடர்புடையது என்பதால்.

>>>> 'அறிவுடையோனே இஸ்லாமியன்!' என்ற உங்கள் நோக்கு உயர்வாக தெரியவில்லை . இஸ்லாம் ஓர் வாழும் வழிகாட்டி. அறிவு தேடிக்கொள்வது. இஸ்லாத்தில் பிறந்தவனும் உண்டு அதை நாடி வந்தவர்களும் உண்டு. இஸ்லாத்தில் இருப்பவர்கள் அனைவரும் அறிவுடையோன், அறிவு இல்லாதவன் இஸ்லாமியன் இல்லை என்பது சரியில்லை. வார்த்தைகள் கவனத்துடன் தங்களைப் போன்ற அறிவுடையோரால் கையாளப்படவேண்டும் <<<<<

நான் இங்கே முரண்படவில்லை, உடன்படுகிறோம்.

”இஸ்லாம் ஒரு வாழும் வழிகாட்டி. அறிவு தேடிக்கொள்வது” - இதன் பொருள் என்ன?

அறிவைத் தேடிக்கொள்ளவேண்டும்
அறிவைத் தேடிக்கொள்ளாதவன் இஸ்லாமியனாய் இருக்கமுடியாது.

ஆனால் நிஜத்தில் நாம் காணும் பலர் அறிவைத் தேடிக்கொள்ள விழைவதே இல்லை. அப்படியே அடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எதைச் சொன்னாலும் சிந்திப்பதில்லை. அப்படியே அலுச்சாட்டியமாய் என் மடமையை ஒழிக்கமாட்டேன் என்று வம்படியாய் இருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடாது அறிவுடையவனே இஸ்லாமியன் என்று அவர்களுக்குச் சொல்லி அவர்களையும் அறிவு பெற அழைக்கிறேன். என் எண்ணம் தெளிவானது. நான் சொல்வதும் உயர்வானது.

அடுத்து, அறிவு என்பதற்கான அளவுகோல் எது?
அப்படி ஓர் அளவுகோலை எவராலும் சொல்லமுடியாது.

ஆகவே உண்மையான அறிவு என்பது அறிய முயல்வது மட்டுமே. தன் வாழ்நாளெல்லாம் அறியமுயல்வது. அப்படி அறிய முயலாதவன் இஸ்லாமியன் இல்லை. அதைத்தான் அறிவுடையோனே இஸ்லாமியன் என்று சொன்னேன்.

இப்படிச் சொல்வதால் இஸ்லாமியன் அல்லாதவன் அறிவில்லாதவன் என்றும் பொருள் கொண்டுவிடமாட்டீர்கள் என்று நம்புகின்றேன். தங்கள் வாழ்வில் ஒவ்வொரு பொழுதும் அறியமுயலும் ஒவ்வொருவரும் அறிவுடையோர்தானே? அறியமுயலா அனைவரும் அறிவில்லாதவர்கள்தானே?

அன்புடன் புகாரி said...

அன்புச்சகோ அர அல,
அன்பும் அமைதியும் அருளப்படட்டும்.

>>>>நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் கதைதான் உங்களுடையது.<<<<

அப்படியாய் ஒரு மூன்று முயல்களைப் பிடித்து வைத்திருக்கிறேன். பிரியாணி செய்து சாப்பிடுவோமா? உங்களுக்கு மூன்றுகால் பிரியாணி பிடிக்குமா? முயல் பிரியாணி பிடிக்குமா? நான் முயல்கறி சாப்பிட்டதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று தலைப்பில் போட்டால் மட்டும் போதாது. அதன்படியே நம் மொழியும் நடத்தையும் இருத்தல் வேண்டும்.

அன்பும் அமைதியும் அருளப்படட்டும்.

>>>>>இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டதே என ஹதீஸ்கள் மூலம் அறியும்போது, இன்னும் நீங்கள் முரண்டு பிடிப்பது சரியல்ல.லகும் தீனுக்கும் வலியதீன்.that's it<<<<<

அன்புச் சகோ அர அல,

உங்கள் மடல்கள் எப்போதுமே வியப்பினை அளிக்கவல்லது. அப்படியே இதுவும். ஆனாலும் என்னால் மிக அமைதியாக பதிக் கூறமுடியும். பன்னிரு வருடங்ககளாக குழுமங்களில் நிறைய பேசிய அனுபவமாய் இருக்கலாம்

துவக்கத்தில் குர்-ஆன் இசையைத் தடைசெய்திருக்கிறது என்றீர்கள். இப்போது அதை விட்டுவிட்டீர்கள். ஏன்?

அந்த மூன்றுகால் முயல் இப்போது இரண்டு கால் ஆகிவிட்டதா அல்லது நான்கு கால் ஆகிவிட்டதா?

இப்போது ”ஹதீஸ்கள் மூலம்” என்று ஹதீசை மட்டும் கொண்டுவந்து நிறுத்துகிறீர்கள். அதனாலென்ன, அதையும் விளங்கவைக்கலாம்.

நான் ஒரு ஹதீஸ் இட்டேனே? அதை வாசித்துப் பார்த்தீர்களா? அதற்கு நீங்கள் எந்த மறுமொழியும் தரவில்லையே? ஏன்?

பின் நீங்கள் கூறும் அதீசுகளை ஒவ்வொன்றாக இங்கே இடுங்கள். அவற்றைப்பற்றி எனக்கு நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.

முதலில் ஹதீஸ் என்றால் என்ன என்ற தெளிவு உங்களுக்கு இருக்கிறதா? அதைப்பற்றி உங்களால் ஏதும் சொல்ல முடியுமா?

அலுவலகம் ஓடுகிறேன். நிறைய பேசுவோம்,

அன்புடன் புகாரி

அதிரைநிருபர் said...

அன்பானவர்களே....

பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இசை கருவிகளுடன் இசைக்கப்படும் இசையை இஸ்லாம் தடை செய்துள்ளது, ஆதரிக்கவில்லை என்று அறியப்பட்டுள்ள நிலையிலும் இன்னும் சிலர் எது இசை? எது இசையில்லை? என்பதுகூட அறியாமல் குர்ஆன் ஹதீஸ்களுக்கு தவறான சுயவிளக்கங்களுடன் தெளிவற்ற தகவல் பரிமாற்றம் செய்வதால் எந்த ஒர் தீர்வையும் எட்டமுடியாது.

நம் மூத்த சகோதரர் ஜமீல் கேட்டுக்கொண்ட பிறகும் பதிவுக்கு தொடர்பில்லாத மறுமொழிகள் பதியப்பட்டுவருகிறது.

பதிவுக்கு தொடர்பில்லாத சுய விளங்களுடன் பின்னூட்டங்கள் தொடருவதால், இத்துடன் பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகிறது.

இறைவன் நாடினால்... ஒரு தனி பதிவில் இது தொடர்பாக உங்கள் எல்லோருடைய கருத்துக்களை பதியலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு