Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

A sincere dhuA of a student ! - ஒரு மாணவியின் துஆ...! 50

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2013 | , , , , , , , , , ,


Part 1.

Ya Allah ya Rahmanae
It is obvious that my heart beats for you.
And yet human heart says that I’m ready to die for you.
But deep down inside I am a coward to face death.
I am a female... There’s no denying that I am a mentally or emotionally weakened creature.
It’s easy to deceive me. It’s very easy to deceive me by just showing love.
Most deceived women blinded by their desires claiming love.. end up following their lusts... doesn’t matter if it crosses the right path.
And  the poor creature end up in hell...
Cant that be the reason for most women ending in hell ???
Shaitan finds women easy to deceive. I don’t want to be among them.

Part 2.

One should always remember that the first and foremost love must be towards Allah alone.
Then comes your prophets... your parents... then your husband... children...                           
Look at me ya Allah... you know that the reason I breathe...
I open my eyes, I see things, I understand things I realise that I am a creature created by you... every inch of my soul belongs to you ya Allah.
The reason I desire paradise is not because I want those luxurious life being happy... It’s just I want to be among those you like... I just want to be close to you.

Part 3.

Please ya Allah....continue to love me
whenever I cry thinking about you my tears burn .
My tears are very hot.
My heart melts .
Words cannot describe how my soul melts in your remembrance.
Please ya Allah make my heart soft during happy times and hard during sad times... the patience of Ayyub (as).
And my favour will be is... to highlight my parents on that day... to hold them in light... that they succeeded in being the best parents. May they enter in heaven... ameen!!!

Surah Al-Anaam, Verse 162:


قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي      وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Say. Surely my prayer and my sacrifice and my life and my death are (all) for Allah, the Lord of the worlds; (English - Shakir)

via iQuran...my favourite verse of qur'an

ஒரு மாணவியின் துஆ...!

யா அல்லாஹ்; யா ரஹ்மானே!
என்
இதயத் துடிப்புகள்
இறைவா உனக்காக

எந்நிலையிலும்
நிற்கச் சம்மதமாய்
என் இதயம் இருப்பினும்
ஆழ் மனதில்
மரணத்தை எதிர்கொள்ள
மருகும் கோழை நான்!

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்
பலகீனமான படைப்பே
பெண்ணினம் -
மறுப்பதற்கில்லை!

என்னினத்தை
ஏய்ப்பது எளிது
எள்ளளவு அன்பு காட்டி!

எம்மில் அநேகம்
ஏமாந்து போவது
கண்களைக் கட்டும்
அற்ப ஆசைகளால்

அவை
அன்பென்று துவங்கி
அற்ப
இச்சைகளில் முடிபவை;

நேர்வழி நடக்கும்போது
குறுக்கிடும்
அன்போ ஆசையோ
தவறல்ல

அவ்வாறில்லாவிடில்
பாவப்பட்ட ஜென்மங்கள்
நரகத்தையே சென்றடைகின்றனர்

இவ்வாறே
நரகம்
பெண்களால் நிரம்புகிறது!

ஷைத்தானுக்கு
பெண்களை
ஏய்த்து வழிகெடுப்பதே இலகுவானது
இருப்பினும்
அத்தகையோரில் ஒருத்தியாக
நான் இருக்க விரும்பவில்லை!

நினைவிருக்கட்டும் பெண்களே,
முதன்மையான அன்பின்
ஆதியும் அந்தமும்
அல்லாஹ் ஒருவனுக்கே
அவனுக்குப் பிறகே
நபி(ஸல்)களும்
பெற்றோரும்
கணவரும்
குழந்தைகளும்…

என்னைப் பார் இறைவா
என்
சுவாசத்தின் காரணம் நீ அறிவாய்

என் விழி திறந்து
காண்கிறேன்
புரிந்து
தெளிவு பெறுகிறேன்
நான்
உன்னால் படைக்கப்பட்டவள் என்று

என் உயிரின்
ஒவ்வொரு அங்குலமும்
உனக்குச் சொந்தமானது யா அல்லாஹ்

நான்
சொர்க்கம் விரும்புவதன் நோக்கம்
அங்கு வாய்க்கும்
மகிழ்ச்சியான வாழ்க்கையது அல்ல

நீ
விரும்புபவர்களில் ஒருத்தியாகவும்
உனக்கு
நெருக்கமானவளாகவும்
இருக்க வேண்டும் என்று மட்டுமே

எனக்கருள் செய்வாய் யா அல்லாஹ்
தொடர்ந்து என்னை நேசி
வெறுத்துவிடாதே யா அல்லாஹ்

உன்னை தியானம் செய்யும்
தருணங்களில்
என் இதயம் உருகுவதால்
கண்ணீரில் வெப்பம்;
எனது ஆத்மா உருகுவதை
வார்த்தைகள் விளக்காது

தயவு காட்டு யா அல்லாஹ்
மகிழும்போது லேசாகவும்
சோகங்களைத் தாங்க கடினமாகவும்
ஐயுப் நபி(ஸல்)க்குத் தந்த
பொறுமையோடும்
இதயம் கொடு இறைவா !

என் நாட்டம்
இறுதி நாளில்
என் பெற்றோரை உயர்த்துவது
பிரகாசத்தில் நிலைநிறுத்துவது
சிறந்த பெற்றோரென
வெற்றிகண்டதால்
அவர்கள்
சொர்க்கத்தில் நுழையட்டும் அல்லாஹ்
…ஆமீன்!

(சூரா அல் ஆனாம்: வசனம் 162)

(எனக்கு மிகவும் பிடித்த குர் ஆன் வசனங்களில் ஒன்று: நிச்சயமாக என் வணக்கங்களும் தியாகங்களும் என் வாழ்க்கையும் என் மரணமும் எல்லாமும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனே அகில உலகிற்கும் இறைவன். )

-Shahnaz Sabeer Ahmed, MBBS 2nd Year
தமிழில்: சபீர் அஹ்மது அபுஷாருக்

50 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமையும், உருக்கமும்

யா அல்லாஹ் மாணவியின், எங்கள் கவி மகளின் நல் துஆவை ஏற்பாயாக!

Unknown said...

ஒரு அருமையான துஆ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மார்க்கம் பேணும் மருத்துவ மாணவியின் மனது உருகும் பிரார்த்தனை !

உள்ளார்த்தமான, படைத்தவனிடம் தன்னை அற்பனித்துவிட்டு அவனிடமே பாதுகாப்பும் அருளும் தேடும் அருமையான பிரார்த்தனை !

பெண் மகள் தனது பெற்றோருக்கா வேண்டும் அற்புதமான பிரார்த்தனை !

பெண்மையின் இயலாமையை நன்கறிந்து கொண்டு அதற்கு அல்லாஹ் ஒருவனால் மட்டுமே அந்த பெண்மைக்கு மகிமை தரவேண்டி உருகிக் கேட்கப்படும் பிரார்த்தனை !

மாஷா அல்லாஹ் !

உங்கள் அதோடு எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் அனைத்தையும் வல்லமை நிறைந்த அல்லாஹ் இந்தப் புனித ரமளானின் அருளைக் கொண்டு ஏற்றுக் கொள்வானாக !

இன்ஷா அல்லாஹ் !

பெற்றவர்களை பெருமை கொள்ளச் செய்யும், அவர்களை கண்ணியப்படுத்தும் நன்மக்களாக இறுதி மூச்சு வரை இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக !

உங்களுடைய மருத்துவப் படிப்பைக் கொண்டு சமுதாயத்துக்கும் மார்க்கத்துக்கும் நற்பயன்கள் சேர்க்க அல்லாஹ் சக்தியை கொடுப்பானாக !

Shameed said...

டாக்டருக்குத்தான் தெரியும்... இயலாதவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று... அந்த அடிப்படையில் உருகி கேட்கும் இந்த துஆ... அனைவரையும் சிந்திக்க வைக்கிறது...

Unknown said...

பெண் இனம் கேட்கவேண்டிய துஆ

பெண் இனம் எச்சரிக்கப்பட்டிருக்கின்ற துஆ

ஒரு நபியின் சோதனைக்கு ஆட்பட்டால்கூட இறைவனிடமே இறுதி தஞ்சம்
வேறு புகலிடம் இல்லை என்பதை வலியுறுத்தும் துஆ.

சோகத்தில் கடினத்தையும், மகிழ்ச்சியில் இலகுவையும் கடைபிடித்த
அய்யூப் நபியின் பொறுமையை கேட்டுப்பெறும் துஆ.

மொத்தத்தில் இறைவனை சந்தோசப்படுத்தும் பெண்ணினத்தின்
உச்ச கட்ட இறைஞ்சுதலின் வெளிப்பாடு இந்த துஆ.

யா அல்லாஹ் எம் சமுதாய அனைத்து பெண்ணினத்தையும் எங்களையும் உன் கொடியநரகிலிருந்து காப்பாற்றி

,எந்த உள்ளமும் யோசிக்காத,
எந்த கண்ணும் பார்த்திராத
அந்த சுவனத்து இன்பங்களுக்கு எங்களையும் எங்கள் குலப்பென்களையும்
வாரிசாக்கு !

ஆமீன்
அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமிழாக்கம் !
உருக்கத்தின்..!
மறுபக்கம் !

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும், கவிவேந்தே!

உங்கள் வளர்ப்பும் உழைப்பும் நிறைவாகத்
தங்க புதல்வியைத் தந்து.

மாஷா அல்லாஹ்!

உருக்கம் என்பதில்
நெருக்கம் என்பது
தந்தைக்கும் மகளுக்கும்
சொந்தமென்று சொல்லும்!

ஆங்கிலக் கவிக்குயில்
ஆங்கொன்று உருவாகி
பாங்குடன் மிளிரும்
நாங்களும் காத்திருப்போம்!

பெண்ணின் வலிகளைப்
பெண்ணின் வரிகளில்
எண்ண ஓட்டங்களை
எண்ணினேன் பாட்டிலே!

இன்னமும் சிறப்புடன்
இன்ஷா அல்லாஹ்
மின்னும் இறையருள்
மேன்மை மருத்துவர்க்கு(ஆமீன்)

அதிரை.மெய்சா said...

[கனிந்து உள்ளம் உருகிட நாம்
பணிந்து துஆ கேட்கும் மாதம்]

அன்பு நண்பா... உனது அன்பு மகளார் உள்ளமுறுகிக்கேட்ட துஆ கவி வடிவில் வந்து என் கண்களைக்கலங்கச்செய்து விட்டன.

இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நாம் கேட்கப்படும் துஆ வை அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.

வாழ்த்துக்கள்.என்றென்றும்....

Nooruddin said...

ஆமீன்.

இத்தகு சீரிய எண்ணங்களையும் இறைஞ்சும் மனப் பக்குவத்தையும் வல்ல அல்லாஹ் நம் பெண்களுக்கு அருள வேண்டும்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பும் வாழ்த்துகளும் சபீர்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். வாப்பாவுக்கு ஏற்ற மகள் உருவாகிவருவது - சமுதாயத்தின் தேவைக்கு ஒரு மருத்துவர் உருவாகி வருவது - இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் உயரிய வேண்டுதல்கள்- மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழும் பெண்பிள்ளைகள்- மார்க்கத்தில் ஈடுபாடு- இவை யாவுமே எண்ணி எண்ணி மகிழ வைப்பவை.

அன்பான மருமகளே! உங்களின் துஆவை இறைவன் ஏற்பானாக! ஆமீன்.

நல் வாழ்த்துக்கள். சமுதாயம் உங்களையும் உங்களின் வெற்றியையும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

டாக்டருக்குத்தான் தெரியும்... இயலாதவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று... அந்த அடிப்படையில் உருகி கேட்கும் இந்த துஆ... அனைவரையும் சிந்திக்க வைக்கிறது...

MAY ALLAH SHOW HIS MERCY ON ALL OF US.

emailsafath said...

ஆமீன்..

து-ஆ வுடன் எழுதத் தொடங்கியிருக்கிறது கவி காக்காவின் வாரிசு!! தொடர்ந்து எழுதட்டும் என்பதும் எங்களது துஆக்களில் ஒன்று!!

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

இந்த சின்ன வயதில் இந்த அளவு மார்க்கம் தெரிந்திருப்பதையே வெற்றியாக கருதுகிறேன். வாழ்த்துக்கள் Dr Shahnaz

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

யாரோ ஒரு முகம் தெரியாதவள் ஓடுகாலியானால்
உள்ளமே துடித்துப்போய் சுக்குநூறாக சிதைந்து விடுகிறது.
அறிமுகமானவரின் அன்பு மகள் இறைப்பொருத்தத்தை நாடும் பொழுது நிச்சயம் உள்ளம் அதை இனிதே வரவேற்று அகம்புறமென மகிழ்ந்து ஆனந்தக்கடலில் முக்குளித்து முகமன் கூறுகிறது.

யா அல்லாஹ்! உலகில் உலகால் நாங்கள் நல்லவர்களோ, தீயவர்களோ எங்களை எதையேனும் காரணம் வைத்து உதாசீனப்படுத்தி எங்கேனும் தூக்கி வீசி எறிந்து விடதே நாயனே.

Anonymous said...

Masha Allah.

Rabbana hablana min azvajina vadurriyathina qurratha aunin vaj 'alna lil muththaqeena imamah.

Iqbal M.Salih

Unknown said...

Assalamu Alaikkum

Dear sister Shahnaz Sabeer Ahmed,

May Allah accept all of your duas, which are pure and genuine for your self and for your parents.

And the children who are receiving well wishes and duas from parents are accepted by Almighty Allah.

Brother Mr. Sabeer Abushahrukh's interpretations are reflecting exactly the same taqwa, feeling of the pain, and love towards Allah.

May Allah accept our duas and forgive our sins during the holy month of Ramadan. Lets make more and more duas as mercy of Allah is limitless.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

Abdul Razik said...

// Shaitan finds women easy to deceive // //ஷைத்தானுக்கு
பெண்களைஏய்த்து வழிகெடுப்பதே இலகுவானது //

சரியான எச்சரிக்கை, நாயகம் ஸல் அவர்களின் எச்சரிக்கையும் கூட, நாமும் கண்கூடாகப்பார்க்கிறோம், அல்லாஹ் நம் பெண் இணத்தை இத்தகைய பாவத்திலிருந்து காப்பாற்றவேண்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்! கவிசக்கரவர்த்தியின் வாரிசு! வாரிவழங்கிய ரமலான் பரிசு!இதை அப்படியே பிரின்ட் எடுத்து என் பிள்ளைகளிடம் பத்திரமாய் வைக்கச்சொன்னேன்.

crown said...


யா அல்லாஹ்; யா ரஹ்மானே!
என்
இதயத் துடிப்புகள்
இறைவா உனக்காக-
------------------------------------------------
உண்மையான ஈமானின் வெளிப்பாடு!
இந்த கல்விமான் எழுதிய கவிதாக்கம்
இஸ்லாத்தின் உயரிய கோட்பாடு!அல்ஹம்துலில்லாஹ்!

crown said...

எந்நிலையிலும்
நிற்கச் சம்மதமாய்
என் இதயம் இருப்பினும்
ஆழ் மனதில்
மரணத்தை எதிர்கொள்ள
மருகும் கோழை நான்!
------------------------------------------
இயல்பான பயம்!
சுயமாய் எல்லோராலும் ஒத்துக்கொள்ளாத நாடகம்
ஆனால் கவிதாயினி தைரியமாய் ஒத்துக்கொள்கிறார்
தாம் மரணபயமுள்ள கோழையென!உண்மை வீர மகள்!

crown said...

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்
பலகீனமான படைப்பே
பெண்ணினம் -
மறுப்பதற்கில்லை!
---------------------------------
எதார்தம்,எச்சரிக்கை மணி! இதை அந்த இனத்தை சேர்ந்தவரே சொல்லியிருப்பது மற்றவரும் நலம் பெறவேண்டும் என் எண்ணும் ஈமான்.!

crown said...


என்னினத்தை
ஏய்ப்பது எளிது
எள்ளளவு அன்பு காட்டி!

எம்மில் அநேகம்
ஏமாந்து போவது
கண்களைக் கட்டும்
அற்ப ஆசைகளால்

அவை
அன்பென்று துவங்கி
அற்ப
இச்சைகளில் முடிபவை;
-------------------------------------------

அன்பென்று காட்டும் பாம்பொன்று கண்டு அதன் பின்னே ஓடும் வாழ்கை! கண்கட்டிய இருட்டு வாழ்கையும்,குருட்டு நம்பிக்கையும். அவை முடியும் இடம் அற்றப் இச்சையும் ஆயுள் இம்சையும்.மிகத்தெளிவாக சொல்லியுள்ளார் சகோதரி!தந்தைக்கும் தாயுக்கும் பெருமை சேர்ப்பதுடன் , மார்கத்தின் மானம் காப்பதும், இஸ்லாம் வழி நடப்பதுமே நீடித்த இன்பம் , நலம் தரும் வாழ்கை!

crown said...

ஷைத்தானுக்கு
பெண்களை
ஏய்த்து வழிகெடுப்பதே இலகுவானது
இருப்பினும்
அத்தகையோரில் ஒருத்தியாக
நான் இருக்க விரும்பவில்லை!
-------------------------------------------

நல்ல எண்ணம், திடமான ஈமான்,உறுதியான வேண்டுகோள்! உண்மையான ஆசை!எல்லாருக்கும் இது இருக்க அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

crown said...

அன்பென்று காட்டும் பாம்பொன்று கண்டு அதன் பின்னே ஓடும் வாழ்கை! கண்கட்டிய இருட்டு வாழ்கையும்,குருட்டு நம்பிக்கையும். அவை முடியும் இடம் அற்றப் இச்சையும்
-----------------------------
அற்ப இச்சையென படிக்கவும்(பிழைக்கு மன்னிக்கவும்) அற்ப இச்சை சொற்ப வாழ்கை!

crown said...

நினைவிருக்கட்டும் பெண்களே,
முதன்மையான அன்பின்
ஆதியும் அந்தமும்
அல்லாஹ் ஒருவனுக்கே
அவனுக்குப் பிறகே
நபி(ஸல்)களும்
பெற்றோரும்
கணவரும்
குழந்தைகளும்…
--------------------------------------
வாழ்கை புரிதலின் அடையாளம் இது!இதுதான் அறிவின் முதிர்ச்சி! நல்ல அமலின்( நடத்தையின்) பயிற்சி!

crown said...

நான்
சொர்க்கம் விரும்புவதன் நோக்கம்
அங்கு வாய்க்கும்
மகிழ்ச்சியான வாழ்க்கையது அல்ல

நீ
விரும்புபவர்களில் ஒருத்தியாகவும்
உனக்கு
நெருக்கமானவளாகவும்
இருக்க வேண்டும் என்று மட்டுமே
--------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்!அல்ஹம்துல்லாஹ்!அல்ஹம்துலில்லாஹ்!தெளிந்த சிந்தனை!உயரிய உன்னத நோக்கம்! இளையோருக்கும், மூத்தோருக்கும் சொல்லும் பாடம் ! எனக்கும் ஆசிரியையாய் மாறிப்போன சகோதரி உம் எண்ணமும் ,எங்கள் எண்ணமும் ஈடேற அல்லாஹ் அருள் புரிவானக ஆமின்
குறிப்பு:கவியரசே இன்று நீங்கள் பெருமை பட்டுக்கொள்ளலாம்!ஆனந்த கண்ணீர் விடலாம்! அல்லாஹுக்கு நன்றி செலுத்தலாம்.உங்கள் இன்பத்துடன் நாங்களும் பங்கு கொள்கிறோம் துஆ செய்கிறோம்!

crown said...

என் நாட்டம்
இறுதி நாளில்
என் பெற்றோரை உயர்த்துவது
பிரகாசத்தில் நிலைநிறுத்துவது
சிறந்த பெற்றோரென
வெற்றிகண்டதால்
அவர்கள்
சொர்க்கத்தில் நுழையட்டும் அல்லாஹ்
…ஆமீன்!
--------------------------------------------
ஆமீன்!எல்லாருக்கும் இதுபோல் குழைந்தைகள் அமைய அல்லாஹ் அருள் புரியட்டும் அதன் ஆசை நிறைவேற அல்லாஹ் துணை நிற்கட்டும்!--------------------------------------------
ஆமீன்!

ZAEISA said...

ஆமீன்....ஆமீன்...யாரப்பல் ஆலமீன்.

Unknown said...

Assalamu Alaikkum

I would like to correct, that there is a mistake in the word 'weekend' creature which should be 'weakened' creature.

May Allah accept our deeds out of genuine intentions.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

புல்லாங்குழல் said...

இறைக்காதலால் கசிந்துருகும் அன்பு மகளாருக்கு உன் குர்பை நஸீபாக்குவாய் யா அல்லாஹ். அவர்களின் பொருட்டால் எங்களுக்கும். ஆமீன்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...


நால்வர் மதிக்க நட நீ .... என்று சொல்வார்களே அதற்கு எங்கும் உதாரணம் தேவையில்லை இந்தக் கவிதையின் வரிகள் போதும்.

மெளலானா ரூமி, உமர் கய்யாம், ஹகீம் சனாய், அல்லாமா இக்பால், காலிப், போன்ற கவிஞர்களாக இல்லாவிடிலும் அவர்களுக்கு நிகராக சபீர் காக்காவின் வாரிசு வளர வாழ்த்தும் துஆவும்.

KALAM SHAICK ABDUL KADER said...

நற்றவப் புதல்வியும் நலமுடன் புகழைப்
பெற்றிட இறையவன் பொருந்திய அருளாம்
இற்றைச் சூழலில் இதுபோல் பிள்ளைப்
பெற்றவர் சிலரே; பேறு பெற்று
உற்றவர் அனைவரும் உவகையை அடையக்
கற்றவர் சபையினில் கவிஞரின் புதல்வியே!

KALAM SHAICK ABDUL KADER said...

Oh you Doctor!
Our poet's daughter!
Dear niece Shahnaz!
Its so amazing
To know your attitude
Which shows gratitude
For the Creation
Thru your supplication!

You are the Moon
Who reflect your father
And you will light us soon
By spreading wisdom further!

We all make supplication
But none will be equal
To your heart-felt supplication
Ours are nothing but manual!

Even we pray to Almighty
To increase your knowledge
With power of creativity
From this young age!

Anonymous said...

கண்கள் கலங்கிவிட்டேன் என் கவி மகளின் கவிதை துஆ பார்த்து. பெண்கள் திருந்த வேண்டும் இப்பெருமகளின் துஆ கேட்டு.

இப்பெண்மகளை நன்மகளாக்கிய என் நண்பனுக்கும் இறைவனுக்கும் நன்றி.

அஸ்லம்.

Anonymous said...

யாஅல்லாஹ் ! அந்த இளம் பிஞ்சு உன்னிடம் மன்றாடிக் கேட்ட துஆ வை அதுபோன்ற கோடி கோடி பிஞ்சுகளின் சார்பாக கேட்ட துஆவாக ஏற்று உன் அருட்பெருங் கருணை மழையை அளவின்றி அள்ளிப்பொழிய நானும் உன்னிடம் இரு கையேந்தி இறைஞ்சுகிறேன். கேட்காதவருக்கும் அருளும் நீ கேட்பவருக்கு ''இல்லை'' என்று சொன்னதில்லையே!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\

The reason I desire paradise is not because I want those luxurious life being happy... It’s just I want to be among those you like... I just want to be close to you.\\


it's really highly utmost good faith on Allaah only , the faith that is possible for only those who can bear anything for Him and desire anything for Him only. More or Less, This is the strong faith of real God Lovers. But, how has this strong faith been cultivated in her small and so young age?

Please, Dear niece Dr. Shahnaz, could you please reply to my question?

வணிகமற்ற அன்பு என்பதை அல்லாஹ்விடமும் நாம் காட்ட வேண்டும் என்பதன் உச்ச கட்டமான ஓர் அறிவிப்பு இது தான்! ஆம். நான் நன்மை செய்கிறேன்; நீ சுவனம் தா என்பது கூட ஓர் ஆசை உள்ளடக்கியிருப்பதால் ஆங்கே தூய்மையான அன்பை அல்லாஹ்வின் மீது காட்டியவர்களாகவே இருக்க முடியாது; மாறாக, ”சுவனம் என்பதும் என் விருப்பம்; ஏனெனில் அஃது உனக்கு விருப்பம்; அதனாற்றான் எனக்கும் விருப்பம்” என்ற அளவுக்கு ஆசைகளின் கிடங்குகளாய் மின்னும் பெண்ணினத்தின் ஓர் அங்கமான இச்சிறு வயது மாணவியால் எங்ஙனம் இப்படி எல்லாம் உருக்கமாக - அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக எண்ணி துஆ செய்ய முடிந்தது?

என்னை உறங்க விடாமல்; பணி செய்ய விடாமல் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் படித்துப் படித்துப் பார்க்க வைத்து என்னைத் துடிக்க வைத்தும் கண்ணீரை வடிக்க வைத்தும் (இன்னும் எத்தனைப் பின்னூட்டங்களை எழுத வைக்குமோ; யான் அறியேன்) உள்ளதே இச்சிறிய உள்ளத்தினின்றும் அருவிகளாய்க் கொட்டிய வரிகள்; தூய ஈமானின் நெறிகள்!

கவிவேந்தே! மீண்டும் வருவாயா என்னைக் காண அபுதபிக்கு, இப்படிப்பட்டப் பெண்ணைப் புதல்வியாய்ப் பெற்றமைக்கு உன்னை ஆரத்தழுவி அணைத்து என் அன்பைச் சொல்ல வேண்டுமே!

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு மருமகளே- உன்றன்
தந்தைதான் என் கவிதைக் கருவின்
சிந்தையாகி விடுவார்!

அவர் “அழகுக் குறிப்பு” எழுதினால்
நான் “சமையற் குறிப்பு” எழுத அஃதே கரு!
அவர் “நோன்பு கஞ்சி காய்ச்ச வேண்டாம்” என்றால்
நான் “நோன்பு கஞ்சி என்னும் அமிர்தம்” வடிக்க அஃதே கரு”

இன்றோ

நீயும் அவர் வழியில் எனக்கு நீண்ட நாள் அவாவின நிறைவு செய்யும் வண்ணம் ஓர் அற்புதமான கவிதைக்குக் கருவைத் தந்து விட்டாய்; ஆம்.

கஞ்சிக் கவிதையை விட- இறையைக்
கெஞ்சிக் கவிதையை எழுதுங்க மாமா
என்றல்லவா எனக்குக் கருவைக் காட்டி விட்டாய்!

ஜஸாக்குமுல்லாஹ் கைரன வ ஆஃபியா!

sabeer.abushahruk said...

//You are the Moon
Who reflect your father
And you will light us soon
By spreading wisdom further!//

கவித்தீபம்/கவியன்பன்,

கவிதைக்குப் பொய் அழகென்பர். ஆனால், தங்களின் கவிதையில் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உலகளாவிய உண்மை (universal truth)மிளிர்கிறது.

நிலா, சூரியனின் ஒளியைத்தான் பிரதிபலிக்கிறது என்பது "அறிவியல்". இதை கவிதையில் இழைத்திருப்பது தங்களின் "இயல்பறிவு'.

ஏற்புரை வரை காத்திருக்க விடாமல் உற்சாகமூட்டியது தங்களின் ஆங்கிலக் கவிதை.

மிச்சம் ஏற்புரையில்.

Riyaz Ahamed said...

சலாம்
துவாக்கு ஒரு முன் உதாரணமாக, சிறப்பாக உள்ளது மருமகளின் துவா.

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தப் பதிவு ஓர் எதிர்பார்த்திராத குறுகிய காலத்திற்குள் உருவாக்கிய ஒன்று. என் மகள் அடிக்கடி இதுபோன்ற துஆக்களும் சிந்தனைகளும் தனக்குத் தோன்றும்போதெல்லாம் அவற்றை எனக்குக் குறுஞ்செய்தியாகவோ மின்னஞ்சலாகவோ அனுப்புவது வழக்கம்.

அப்படிப்பட்ட ஒரு அஞ்சல்தான் இதுவும். ஆனால், இதை வாசிக்கும்போது என்னுள் ஏனோ இனம்புரியாத ஓர் உணர்வு ஊடுருவி ஆட்டிப்படைத்தது. இறையச்சம் மேலோங்கியது. முற்றிலும் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதும் தன் இயலாமையகளைச் சொல்வதும் அவற்றிலிருந்து மீட்கக்கோருவதும் ஒரு பிரத்யேகக் கோணத்தில் கேட்கப்பட்டிருந்தது என்னை மிகவும் பாதித்தது.

ஒரு கவித்துவம் தொனிப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த துஆ ஒவ்வொரு மாணவப்பருவத்து மகளிரும் கேட்க வேண்டும் என்று மனம் நாடியது. அதே சமயம் என் மகளின் ப்ரைவஸியைப் பாதித்து விடுமோ என்கிற அச்சம் மேலோங்கியதால் வழக்கம்போல் என் ஜாகிருக்கும் அபு இபுறாகீமுக்கும் முதலில் அனுப்பி அவர்கள் சிபாரிசின்பேரிலேயே இதைப் பதிந்தேன்.

எதிர்பார்த்ததைவிட நீங்கள் இந்த துஆவுக்குக் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டது. என் மகளும் இதை வாசித்துவிட்டு மகிழ்ச்சியில் வாயடைத்துப்போய் விட்டாள். மேலும்,

//What an honour my father....i just wrote my feelings and i never knew they will turn out to be posted on adirai nirubar....but i wont agree that i have entered writers world yet.
I am really happy dad but kind of embarrased //

என்று சொன்னாள்.

sabeer.abushahruk said...

என் மகளின் சார்பாக இங்கு வாழ்த்திய/துஆவில் கலந்து கொண்ட

எம் ஹெச் ஜே
காதர்
அபு இபுறாகீம்
ஹமீது
கவித்தீபம் கவியன்பன் அவர்கள்
அடிரை மெய்சா
சகோதரர் "தோழர்கள்"ஆசிரியர் நூருத்தீன்
இபுறாகிம் அன்சாரி காக்கா அவர்கள்
அதிரை என் ஷஃபாத்
தாஜுதீன்
ஜாகிர்
எம் எஸ் எம்
இக்பால்
Ahamed Ameen
Abdul Razik
Crown Dhasthageer
ZAIEZA காக்கா அவர்கள்
அஸ்லம்
ஃபாரூக் மாமா
சகோ ஜாஃபர் ஹசன்
O Noorul Ameen
ரியாஸ்

ஆகிய நல்லுள்ளங்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

தங்களனைவரின் துஆவுக்காகவும் தன் நன்றியையும் தெரிவுக்கச்சொன்னாள் இப்பதிவின் பதிவர் ஷஹ்னாஸ் சபீர் அஹமது.

(கிரவுன் மற்றும் கவித்தீபம்/கவியன்பன் இருவரும் இப்பதிவை விழாக்கோலமாக்கி தூக்கி கொண்டாடியது என் கண்களை கலங்க வைத்தது. தங்களிருவருக்கும் என் பிரத்யேக நன்றியும் கடப்பாடும்)

வஸ்ஸலாம்

KALAM SHAICK ABDUL KADER said...

\\(கிரவுன் மற்றும் கவித்தீபம்/கவியன்பன் இருவரும் இப்பதிவை விழாக்கோலமாக்கி தூக்கி கொண்டாடியது என் கண்களை கலங்க வைத்தது. தங்களிருவருக்கும் என் பிரத்யேக நன்றியும் கடப்பாடும்)//

ஜஸாக்குமுல்லாஹ் கைரன்

இன்னும் இன்னும்
பபின்னூட்டங்கள் அனுப்பவே
எண்ணியிருந்த போதில்
பின்னூட்டக் கதவின் தாழ்
தன்னடக்கத்தால் சாத்தப்பட்டதால்...

மனத்தாலே வாழ்த்திக் கொண்டிருக்கிறேன், மருமகள், மருத்துவர் அவர்களை.

sabeer.abushahruk said...

சாயல்கள்!

என் அன்பு மகளே!

நீ
முகத்தில் அம்மாவின் சாயல்
அகத்தில் அப்பா

உடல் வடிவில் அம்மா
உள வியலில் அப்பா
உன்
விழிகள் அம்மாவின் சாயல்
பார்வையோ அப்பாவின் கோணம்
 
பெண்மையிலும் மென்மையிலும் அம்மா
உண்மையிலும் தன்மையிலும் அப்பா
 
நடையுடை பாவனையில் அம்மா
நடைமுறை தோரணையில் அப்பா

அன்பிலும் பண்பிலும் அம்மா
வசிப்பிலும் வாசிப்பிலும் அப்பா

உன்னில்தான் எத்துணை சாயல்கள்!
இறைமறை நீ ஓத
வசனங்களை உன் வாயுரைக்க
உன்
இனிய குரலில்
இசையின் சாயல்

தொழுகைக் கம்பளத்தில்
தளர்க் குப்பாயமணிந்து
உனைப்
படைத்தவன் முன்பாக
பணிவாகக் கைகட்டியது
நன்றியின் சாயல்

அடுத்தவர் வலியுணர்ந்து
ஆறுதல் சொல்வதில் - நீ
அன்பின் சாயல்;
படித்ததைப் பிறர்க்கு
பக்குவமாய்ச் சொல்வதில்-நீ
பண்பின் சாயல்

மாற்றான் பார்வையைப்
மட்டுப்படுத்தவும்
கயவர் நோக்கத்தைக்
கட்டுப்படுத்தவும்
ஹிஜாபுக்குள் குளிர் நிலவாய்
நீ
அழகின் சாயல்

மெத்தென்ற நடையிலும்
கத்தாத குரலிலும்
கண்ணியத்தின் சாயல்

வாழ்வியலில் நீ
வான்மறை சொல்லும்
மாதுவின் சாயல்

வாதிப்பதில் நீ
வாக்குகள் மாறாத
நீதியின் சாயல்

ஈடேற்றம் வேண்டி
இறைஞ்சிடும் மகளே
இரவிலும் பகலிலும்
இயல்பாய் வாய்க்கட்டும்
இஸ்லாத்தின்
ஒழுங்கியல் சாயல்

உலக மகளிர்க்கு நீ
உதாரணமாயிரு
உண்மை மார்க்கத்தின்
எல்லா சாயல்களும்
இருக்கட்டும் உன்னில்

ஓரிறைக் கொள்கையில்
தியாகங்கள் செய்த
நபித் தோழியர் சாயலில்
தொடரட்டும் பயணம்
 
மகளிர்க்கு மார்க்கத்தை
மறவாமல் எத்தி வை
இஸ்லாத்தின் சாயலில்
இலங்கட்டும் இவ்வையகம்!

- சபீர்

Thanks to www.satyamargam.com

முதல் பகுதி: (மகளுக்கொரு மனு – I)
http://www.satyamargam.com/articles/arts/lyrics/1790-1790.html 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சாயல் - போனஸ் !

பெண் குழந்தைகளை நேசிக்கச் சொல்லும் அற்புதமான கவிதை
பெண் பிள்ளைகளை அதிகம் வேண்டி அல்லாஹ்விடம் இறைஞ்ச வைக்கும் தூண்டல் !

Unknown said...

Ma'asha Allah ...Sabeer Kaakka you are a such good dad.Almighty will complete your Good Wishes.

Best Regards
Harmys

KALAM SHAICK ABDUL KADER said...

"சாயல்” சாவியால்
வாயில் திறக்கப்பட்டது!

உங்களின் உதிரத்தில்
உதிக்கும் பேறுபெற்ற
உங்களின் மகளுக்கு
உவந்த பரிசாகும்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாயல் & மகளுக்கொரு மனு, மாஷா அல்லாஹ் மகளுக்கும், வாப்பாவுக்கும் வேண்டிய இணக்கமான சூழல். உறவும் அதைச் சார்ந்த கவியும் மிக மிக சூப்பரு. வாழ்க நேசம்!

mohamedali jinnah said...

ஆங்கிலத்திலும் ,தமிழிலும் துவாவை அருமையாக தந்துள்ளார்கள் .
வாழ்த்துகள்

நம்பிக்கை செயலின் தொடக்கம்
நம்பிக்கை செயலின் ஊக்கம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பினோர் கெடுவதில்லை என்பது சான்றோர் சொல்
நம்பிக்கையற்ற செயல் தோல்வியே
நம்பிக்கை நற்காரியத்தின் செயல்பாட்டின் மீது இருக்கட்டும்
நம்பிக்கையற்ற மார்க்கத்தின் செயல்பாடு வீண்
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கையாகும்

“நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான்.” “இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்.” நபிமொழி இவ்வாறிருக்க நாம் ஏன் இறைவனிடம் கேட்பதில் தயக்கம் காட்ட வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு