Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வீட்டுப் பாடம் (home work) 31

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2013 | , , ,

அரிச்சுவடி வகுப்புப் பாடம்;
ஆத்திச்சூடி வீட்டுப் பாடம்

இலகுவான
இரண்டாம் வாய்ப்பாடை
வகுப்பில் படி;
எசகுபிசகான
ஏழாம் வாய்ப்பாடோ
வீட்டுப் பாடம்

வசதியாக
வாய்ப்பாடம் வகுப்பில்;
மெனக்கெடும்
மனப்பாடம் வீட்டில்

இரண்டோடு மூன்றைக் கூட்ட
வகுப்பில் போதனை:
வீட்டுப் பாடத்திலோ
ஏழையும் ஒன்பதையும்
கூட்டச் சொல்லி சோதனை

வகுப்பறையோ
நேரிடையாகக்
கழித்தல் கற்க;
வீட்டுப் பாடத்தில்
கடன் வாங்கிக் கழி

சொச்சமில்லாப் பெருக்கல்கள்
வகுப்புப் பாடம்
ஸ்தானம் மாற்றிப் பெருக்கும்போது
மறவாமல்
சொச்சத்தையும் கூட்டச் சொல்
வீட்டுப் பாடத்தில்

வகுப்பறை வகுத்தல்களில்
ஈவு மட்டுமே விடை;
வீட்டுப் பாடத்தில்
மீதியும் மிஞ்சும்

மூன்று கோணங்களோடு
மூன்று பக்கங்களே முக்கோணம் என்பது
வகுப்புப் பாடம்;
பல டிகிரிகளிலும் சென்ட்டிமீட்டரிலும்
முக்கோணங்கள் செய்ய வேண்டியது
வீட்டுப் பாடத்தில்

புதிய
ஆங்கிலச் சொல்லொன்று
அறிமுகம் செய்வது வகுப்பில்;
அதை
வாக்கியத்தில் அமைப்பதே
வீட்டுப் பாடம்

கோடிட்ட இடங்களை
பாடத்திலிருந்து
குறிப்பெடுத்து நிரப்ப வகுப்புப் பாடம்;
அந்தப்
பாடத்தின் உட்கருத்தை
சுருக்கி வரைக என வீட்டுப் பாடம்

ஏழு வர்ணங்களே வானவில்
வகுப்பரையில் கற்பது;
அதை
வரைந்து வருவதும்
வார்த்து வருவதும்
வீட்டுப் பாடம்.
வானப் பின்னணி
பேணப்படாவிடில்
பத்துக்கு ஒன்பது
மட்டும்தான் கிட்டும்.

உல்லாசமாகச்
சுற்றுலா செல்வது
வகுப்புப் பாடமெனில்;
அதைக் கட்டுரையாக்குவது
வீட்டுப் பாடம்

நாட்குறிப்பேடு என்னும்
ஓலை வழியாக
பெற்றோருக்குச் சுமையாக
வீட்டுப் பாடத் திட்டங்கள்

அடிப்படைகளை வேண்டுமானால்
வீட்டுப் பாடமாக்குங்கள்
அதற்குமேற்கொண்டு
ஐயன்மாரே
எங்களை வதைக்காமல்
வகுப்பில் நடத்துங்கள்!

வீட்டுக்கு ஓர் ஆசான்

31 Responses So Far:

Unknown said...

வீட்டுக்கு ஓர் ஆசானின் அழகிய பாடம்

தங்கள் வீட்டு பாடத்தில்

கல்வி கற்றுக்கொடுப்பதை தங்களுக்கு இலகுவாக்கிக்கொண்டு பிள்ளைகளின் பெற்றோர்களின் தலையில் அந்த சுமையை சர்வசாதரணமாக இறக்கிவைக்கும் சில பொறுப்பற்ற ஆசான்களின் பொறுப்பற்ற தன்மை பளிச்சிடுகின்றது. தங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

கற்றுக்கொள்ளவே பள்ளி செல்கின்றது குழந்தைகள் . கற்கும் இடத்தை குழந்தைகளின் கல்விக்கு நேரம் ஒதுக்கி கற்றுக்கொடுப்பதை விட்டு விட்டு மற்ற அனைத்திலும் அதிக கவனம் செலுத்தும் போக்கு இன்றும் ஒவ்வொரு பள்ளியிலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. பள்ளிக்கூடத்தின் நோக்கமே அடி பட்டுப்போகின்றது இதுபோன்ற சில பொறுப்பற்ற ஆசான்களின் போக்கால்.

இதனால் கொஞ்சம் தாமதமாக புரிந்து கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு கட்டும் ஸ்கூல் பீஸ் அல்லாமல் tuition fees என்ற மேலதிகமான செலவுகளும் தலைச்சுமையாக ஆகின்றது. பெற்றோர்களுக்கு இரட்டிப்பு செலவுகளுக்கு இதுபோன்ற ஆசான்களும் மறைமுக காரணமாகின்றனர் என்றால் அது மிகை இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகின்றது.

Unknown said...

கடினத்தை வீட்டிலும்
சுலபத்தை பள்ளியிலும் கற்க பள்ளி எதற்கு ?

சான்றிதழ் பெறமட்டும் பள்ளிக்கு போனால் போதுமே.

இந்த நிலைமை தொடரும் வரை
வீட்டுப்பாடமும் கடினமே !
பெற்றோர் சுமையும் கடினமே!

ஆசிரியர்களுக்கான போதிக்கும் திறனில் கடின சட்டம்
அமுலுக்கு வந்தால்தான்
இதற்க்கு தீர்வு கிடைக்கும்.

அதுவரை குழந்தைகளின் படிப்பு பெற்றோருக்கு சுமையே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வகுப்பறையில் யாரோ
வரைந்த படத்தைக்காட்டி
ஓவிய பாடம்
நீயாக வரைகவென்று
வீட்டுப் பாடமெடுக்க
ஆன்லைனில் அழைப்பு வேறு !!!!

//அதுவரை குழந்தைகளின் படிப்பு பெற்றோருக்கு சுமையே.//

ஆக ! புத்தக சுமை மட்டும்தானா ?

அற்புதமான கவிதையில் அப்பட்டமாக சொல்லியிருப்பது வீட்டுகொரு ஆசானின் அசல் !

இந்த வீட்டுக்கு ஓர் ஆசான் திட்டம் எனக்கு இல்லை ! (எல்லோரும் வளைகுடாவில் அல்லவா இருக்கிறோம்) என்று யாரும் ஒதுங்கியும் விட முடியாது ! அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கனும் !

sabeer.abushahruk said...

சுலபமானவற்றை வகுப்பிலும் சிக்கலானவற்றை வீட்டிலும் கற்றுவரும் சிறார்களின் பெற்றோர் படும் அவதி, எதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தியரி வகுப்பிலாம் ப்ராக்டிகல் வீட்டிலாம். படுத்துறாய்ங்கப்பா.

KALAM SHAICK ABDUL KADER said...

தினமும் “வீட்டுப்பாடம்” (யாப்பிலக்கணக் குழுமத்தில்) எழுதிக் காட்டி வரும் எனக்குள்ளே இப்படியோரு “ கருவையே” ஆங்கு வீட்டுப்பாடத்தில் கவிதையாக்கி இருக்கலாமே, என்று இப்பொழுது யான் தவறவிட்ட இந்தக் கருவை எண்ணி வியக்கிறேன்;கவிவேந்தரே!

அன்பைப் பெருக்கி
தவற்றினைக் கழித்து
திட்டங்களை வகுத்து
தூய்மையை அதிகமாய்க் கூட்டி
வாழும் கலையை இந்த வீட்டுப்பாடத்தில் கற்கலாம்!

கற்க = வகுப்புப் பாடம்
நிற்க அதற்குத் தக = வீட்டுப்பாடம்


KALAM SHAICK ABDUL KADER said...

வாய்பாடும்
சமன்பாடும்
வகுப்பில்
பெரும்பாடு;
வீட்டுப்பாடத்தில்
அதுவே நம்
நிலைபாடு!

KALAM SHAICK ABDUL KADER said...

பற்றும் வரவும்
பற்றிப் படித்தல்
கணக்குப் பதிவியல்
பற்றுடன் வாழ்வை
வரவு வைத்தல்
வாழ்க்கைப் பதிவியல்!

KALAM SHAICK ABDUL KADER said...

கற்றுக் கொடுப்பவர்
ஆசான், வகுப்பின்
பள்ளியறையில்;
கற்றுத் தெளியும்
அனுபவம் வீட்டின்
பள்ளியறையில்!

KALAM SHAICK ABDUL KADER said...

ஒன்றோ, ஒரு கோடியோ
ஒன்றாகப் பற்றும் வரவும் நேராகாமல்
இடம், வலம் மாறினால்
கடனீந்தோர் கடனாளியாவார்;
கடனாளி, கடனீந்தோராவார்;
வகுப்ப|றைப் பாடம்!

வரவுக்கு மேலே செலவு
வாழ்கையைப்
புரட்டிப் போடும்
வீட்டுப்பாடம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வீட்டுக்கு ஒரு ஆசான் சரியா சொன்னீங்க!

இப்படித் தான் போன வருசம் பரிசுன்னு சொல்லி தகுதிக்கு அப்பாற்பட்டதையும் செஞ்சு வரச் சொன்னாங்க!
ஆனால் அதை செஞ்சது நானல்ல பெற்றோர் உற்றார் தான். டீச்சர் மார்களை புரிஞ்சுகிட முடியலெ.

சில சமயம் 2 - 3 நாள் லீவு வரும்போது ஹோம் ஒர்க் ஒன்னும் தர்ரதில்லை.
ஆனால் வெள்ளி ஒரு நாள் லீவு வரும் போது க்லாஸுக்கு வர்ர அத்தனை டீச்சரும் ஆளாளுக்கு ஹோம் ஒர்கெ அள்ளி தர்ராங்க! புரிஞ்சு திட்டமிட்டு கலந்து பேசாமெ தர்ராங்க!

இப்பவெல்லாம் அடிக்கடி வூட்டுல செய்ய சொல்லி ப்ராக்டிகல் ஒர்க் நிறைய தர்ராங்க, ஆனால் இதெல்லாம் செய்யாத முன்னோர்கள் எங்களை விட ரொம்ப அறிவா தான் இருக்காங்க! அவங்க சிறிய எங்களை மதிக்கிறாங்க ஆனால் அவங்களை மதிக்க எங்களுக்கு இப்ப தெரிய மாட்டங்குது.

இங்லீசு மோகத்தை அதிகம் ஊட்டியதால் நிறைய பேரு தமிழை கஸ்டம்'னு சொல்றாங்க!

ரொம்ப போரடிக்குது. இன்னும் காலம் கடந்தா எப்படி இருக்குமோ, ஒரே மலப்பா இருக்குது!

"கொட்டெ பாக்கு ரேட்டும்
பட்டு கோட்டெ ரூட்டும் "
என இப்படித்தான் எங்க படிப்பு போய்க் கொண்டிருக்கு!

KALAM SHAICK ABDUL KADER said...

இலக்கணத்தைச் சொல்லுவது
வகுப்பறைப் பாடம்;
இலக்கணம் அறிந்து
இல்லறத்தை வெல்லுவது
வீட்டுப்பாடம்!

KALAM SHAICK ABDUL KADER said...

அதிரை நிருபரில் இந்தப் பதிவு வகுப்புப் பாடம்;
அடியேனின் பின்னூட்டங்கள் அதற்கான வீட்டுப்பாடம்!

sabeer.abushahruk said...

கவியன்பன்,

தங்களின் வீட்டுப்பாடங்கள்
அருமமையானப் பாட்டுப்பாடங்கள்

எம் ஹெச் ஜே,
ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுத்தே போஷாக்குக் குறைந்துபோன அப்பாக்களில் நானும் ஒருவன்.

sabeer.abushahruk said...

காதரு,

உன் கருத்து செம ஆழமாவும் அக்கறையோடான அனுகுமுறையாவும் இருக்கு.

அதோடு எழுதிய ஆளை மரியாதையாக "தாங்கள், நீங்கள்" என்றெல்லாம் நீ சொல்லச்சொல்ல 'தேன் வந்து பாயுது காதினிலே'. நாயே பேயேன்லாம் கூப்பிடாம இப்பிடியே மெயெண்ட்டெய்ன் பண்ணிக்கடா. கீப் இட் அப். (ஹய்யா)

Unknown said...

//அதோடு எழுதிய ஆளை மரியாதையாக "தாங்கள், நீங்கள்" என்றெல்லாம் நீ சொல்லச்சொல்ல 'தேன் வந்து பாயுது காதினிலே'. நாயே பேயேன்லாம் கூப்பிடாம இப்பிடியே மெயெண்ட்டெய்ன் பண்ணிக்கடா. கீப் இட் அப். (ஹய்யா)//

அது நீதானா ?

இவ்வளவு நாளா தெரியாத்தனமா மரியாதை கொடுத்து பெரிய தப்பையில பண்ணிட்டு வந்திருக்கின்றேன்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அட! இப்படி வித்யா(கல்வின்னு சொல்றாங்க காவிகூட்டம்)சமான சு(கு)ட்டலா இருக்கீதே! இங்கே இந்தியாவில் கல்வியில் காவிக்கலப்படம்.அறிசுவடியாய் வகுப்பு(சாதிவெறி, மதவெறி)பாடம் கவனமாய் இருக்கனும்.

crown said...


இலகுவான
இரண்டாம் வாய்ப்பாடை
வகுப்பில் படி;
எசகுபிசகான
ஏழாம் வாய்ப்பாடோ
வீட்டுப் பாடம்
---------------------------------------
இப்படி சாகடிக்கும் கல்வி நழுவல் முறை பாடையில் படுக்க வைக்காமல் இருக்க வரும் காலத்திலாவது மாற்றம் வருமா?இந்த வாய்பாட்டுக்கான சூத்திரம் என்ன என்பதை கணக்கிட்டு ,பங்கிட்டு எல்லா மாணாக்கர்களுக்கும் கொடுக்கனும்.வீட்டு பாடம் நல்லா செய்வதனால் தான் மதிப்பெண்கள அதிகமாய் (மதி)பெண்கள் வாங்குகிறார்களோ?? கவிஞரே சொல்லுங்க என் சந்தேகம் சரியா?

crown said...

இரண்டோடு மூன்றைக் கூட்ட
வகுப்பில் போதனை:
வீட்டுப் பாடத்திலோ
ஏழையும் ஒன்பதையும்
கூட்டச் சொல்லி சோதனை
------------------------------------
இரண்டோடு மூன்றைக்கூட்ட வகுப்பில் ஏழரை(சோதனை)
வீட்டுப்பாடத்தில் ஏழை,ஒன்(உண்)பதில்=(உணவிடுவதில்)கூட்டச்சொல்லி(தானம் ஆதிகமாக்க சொல்லி)போதனைதான் வாழ்வின் உண்மை சாதனை!படிப்போடு வீட்டில் நாம் தான் நல்ல பண்பாடையும் சொல்லித்தரனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கற்க = வகுப்புப் பாடம்
நிற்க அதற்குத் தக = வீட்டுப்பாடம்//

அருமை !

மற்றுமொரு வரி...

கசடற = வகுப்புக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட இடங்களில்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வீட்டு பாடம் நல்லா செய்வதனால் தான் மதிப்பெண்கள அதிகமாய் (மதி)பெண்கள் வாங்குகிறார்களோ?? கவிஞரே சொல்லுங்க என் சந்தேகம் சரியா?//

யோவ்.... கிரவ்னாரே !

எப்பூடியா ? இதெல்லாம் !!

மடை திறந்தால்
படைகளும் சிதறும்

கிரவ்னுரை வரைந்தால்
சூளுரைகள் மின்னும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"கொட்டெ பாக்கு ரேட்டும்
பட்டு கோட்டெ ரூட்டும் "
என இப்படித்தான் எங்க படிப்பு போய்க் கொண்டிருக்கு!//

இப்படி எழுதவும் பள்ளிப் பாடங்கள் போட்ட ரூட்டுதான் !

மறுக்த்தான் முடியுமா ?

crown said...

வகுப்பறையோ
நேரிடையாகக்
கழித்தல் கற்க;
வீட்டுப் பாடத்தில்
கடன் வாங்கிக் கழி
-------------------------------------
சிலர் கற்க அஞ்சி கழிதலை என்னவென்பது? வீட்டுபாடத்தில் கடன் வாங்கி கழி இல்லாவிட்டால் கழி(மூங்கில் கம்பு)பிழி,பிழியென பிழிந்தெடுக்கும் போங்க!எல்லாம் சும்மா ஒரு தாமாசுக்கு...

crown said...

புதிய
ஆங்கிலச் சொல்லொன்று
அறிமுகம் செய்வது வகுப்பில்;
அதை
வாக்கியத்தில் அமைப்பதே("sentence=தண்டனை?? ஹாஹாஹா வீட்டுப்பாடம் ஒரு தண்டனைதானே?)
வீட்டுப் பாடம்

crown said...

ஏழு வர்ணங்களே வானவில்
வகுப்பரையில் கற்பது;
அதை
வரைந்து வருவதும்
வார்த்து வருவதும்
வீட்டுப் பாடம்.
வானப் பின்னணி
பேணப்படாவிடில்
பத்துக்கு ஒன்பது
மட்டும்தான் கிட்டும்.
-----------------------------------
அப்படி செய்துவாராவிட்டால் நம் சாயம் வெளுக்கும்( படிக்கத்தெரியாதவன்னு )ஆனாலும் வானவில்லைவிட அதிகம் வளைந்து கொடுக்கனும் வீட்டு பாடத்திற்கு!

crown said...

உல்லாச((பறவையா)மாகச்
சுற்றுலா செல்வது
வகுப்புப் பாடமெனில்;
அதைக் கட்டுரையாக்குவது
வீட்டுப் பாடம்
------------------
வீட்டுப்பாடம் சிறகுவுடைவது!

crown said...

அடிப்படைகளை வேண்டுமானால்
வீட்டுப் பாடமாக்குங்கள்
அதற்குமேற்கொண்டு
ஐயன்மாரே
எங்களை வதைக்காமல்
வகுப்பில் நடத்துங்கள்!
-----------------------------------------------

இது,இது சில ஆசி(றி)ரியர்கான பாடம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெரும் தகுதி!

sabeer.abushahruk said...

//வீட்டு பாடம் நல்லா செய்வதனால் தான் மதிப்பெண்கள அதிகமாய் (மதி)பெண்கள் வாங்குகிறார்களோ?? //

ஆமாம் கிரவுன். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

மேலும், மயங்கும் மதியில்லாததாலும் உடையும் இதயம் இல்லாததாலும் வளரும் தாடி இல்லாததாலும்;

மயக்கும் விழியிருப்பதாலும் நெகிழும் இதயம் இருப்பதாலும் ரீச்சார்ஜ் செய்யவேண்டிய அவசியம் இருப்பதாலும்கூட இருக்கலாம்.

sabeer.abushahruk said...

//ரீச்சார்ஜ் செய்யவேண்டிய அவசியம் இல்லாததாலும்கூட இருக்கலாம்.// என்று இருக்க வேண்டும்.

அதான் பசங்க அப்பன் பாக்கெட்ல ஆட்டயைப் போட்டு இவிங்களுக்கு ரீச்சார்ஜ் பண்ணிடறாங்களே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்படி செய்து வாராவிட்டால் நம் சாயம் வெளுக்கும் (படிக்கத் தெரியாதவன்னு) ஆனாலும் வானவில்லை விட அதிகம் வளைந்து கொடுக்கனும் வீட்டு பாடத்திற்கு!//

ஆமாம், அங்கே சாயம் சரிவரப் பூசவில்லை நம் சாயம் வெளுத்திடும் :)

கிரவ்னு... [ஆசான்களைப் பார்த்து வீட்டுப் பாட மாணவன் சொன்னது]

வீட்டுப் பாடத்தில்...
சரிகை வரிகள்
சரியில்லை என்றால்
ஸாரி சொன்னாலும்
முகாரி நிற்காது...

சமீபத்திய கருத்தாடல்களில் நான் கண்டதை(எழுதுபவன்)தான்...!

போட்ட எழுத்துக்களில் மயக்கமும் இருக்கும் முறைப்பும் இருக்கும்...

காட்டு...

உவ'மை'
வாய்'மை'
பெண்'மை'
தூய்'மை'
இ'மை'

கட'மை'
இயலா'மை'
கய'மை'

அப்போ நாம படிக்கும்போது 'ஹீரோ-பென்' இருந்தது... இப்போ அதைச் சொன்னால் சிரிப்பார்கள் ஹீரோ (ஒரு) பெண்ணா ? என்று !

KALAM SHAICK ABDUL KADER said...

\\கவியன்பன்,

தங்களின் வீட்டுப்பாடங்கள்
அருமமையானப் பாட்டுப்பாடங்கள்\\

பாட்டுப் பாடங்களைத் தான் “வீட்டுப்பாடங்கள்” செய்து அவைகளையே பதிவுகளாய் ஆக்கம் தரும் என்றன் நிலைபாடு உங்களின் இந்த மதிப்பீடு; நிதர்சனம் சொல்லும் விமர்சனம்! மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Yasir said...

வீட்டுப்பாடங்கள் / படங்கள் நறுக்கி ஒட்டுவது / இண்டெர் நெட்டில் சில அரபி-ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் பார்ப்பது / என்று குழந்தைகளின் நிறைய வீட்டுப்பாடங்களை துணைவியார் பகிர்ந்து தந்துவிட்டதால் வெள்ளி/சனி பிஸியாகிவிட்டதால் இன்றுதான் கருத்திட முடிந்தது..

//அடிப்படைகளை வேண்டுமானால்
வீட்டுப் பாடமாக்குங்கள்
அதற்குமேற்கொண்டு
ஐயன்மாரே
எங்களை வதைக்காமல்
வகுப்பில் நடத்துங்கள்!//

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு