Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

1984ல் - பேயோடு ஒரு ஹாய் ! - குறுந்தொடர் - 1/4 43

அதிரைநிருபர் பதிப்பகம் | October 20, 2013 | , , , , ,

1984களில் வெளிவரும் வார இதழ்களில் ஒன்றான கல்கண்டு இதுதான் நான் முதன் முதலில் படித்த வார இதழ். அப்போது திங்கள் தோறும் வரும் என்று நினைவில் இருக்கிறது, மறு திங்கள் கிழமை வரும் வரை அந்த இதழையே திரும்பத் திரும்ப  படித்துக் கொண்டிருப்பேன்  விளம்பரம் உள்பட அப்படி படிக்கும் போது ஆவிகள் தொடர்பும் அடையும் நன்மைகளும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகம் விற்பனைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்ததும் அந்த வயதில் அதில் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது.


'15 பைசா'விற்கு போஸ்ட் கார்டு வாங்கி விளம்பரத்தில் கண்ட அந்த புஸ்தகத்தை வி.பி.பி.யில் அனுப்புமாறு எழுதி போஸ்ட் செய்து விட்டேன். இதற்கிடையில் பேய்கள் (ஆவி) இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதம் நண்பர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. 

தொடர்ந்த விவாதம் என்  பெயரைக் கொண்ட ஒரு பெரியவரிடம் தீர்ப்புக்காக சென்றது. அவரும் “பேய்கள் இருக்குதுப்பா  நான் வேணும்னா உங்களுக்கு காட்டுறேன்” என்றார்.  

பேயை பார்க்கும் ஆர்வத்தில் “சரி எப்போ காக்கா பேயை காட்டுவீர்கள்” என்றதும். 

“இன்று இரவு சரியா பத்து மணிக்கு எல்லாரும்  புளிய மரத்தடிக்கு வந்துருங்கோ” என்றார்.

பேயை பார்க்கும் ஆர்வத்தில் சரியாக பத்து மணிக்கெல்லாம் நண்பர்கள் அனைவரும் புளிய மரத்தடியில் ஆஜர்.

பேயை காட்ட அந்த  காக்காவும்   அங்கு வந்து சேர்ந்தார். “சீக்கிரம் பேயை காட்டுங்கள்” என்று அவசர படுத்தவும். 

பேயைக் காட்ட வந்த காக்கா சொன்னார் “பேயை பார்க்க வருபவர்கள் தைரியமான ஆளா இருக்கணும் பேயை பார்த்ததும் பயந்து இரத்தம் கக்கினால் நான் பொறுப்பு கிடையாது” என்ற கன்டிஷனோடு  (100 ருபாய் பத்திரத்தில் கையெழுத்து மட்டும் வாங்கலே) “அப்படி இருந்தா வாங்க” என்றார்.

அதுவும் பேயை பார்க்க ரயில்வே கேட்டை தாண்டி கஸ்டம்ஸ் பில்டிங் அருகே தான் பேய் இருக்குது என்று ஒரு பொடியைத் தூவி வைத்திருந்தார். இதை கேட்ட என்னோடு வந்த நண்பர்கள் பலரும் பயந்தவர்களாக “அவ்வளவு தூரம் போயிட்டு வர நேரம் ஆகும் உம்மா பேசும் நான் வரலே” என்று ஒவ்வொருவராக கழன்று கொண்டார்கள் (அப்போது எங்களில் யாருக்கும் கல்யாணம் ஆகலே அதுனாலதான் உம்மா பேசும் என்றவர்களாக கழட்டிக் கொண்டார்கள்).

பேய் பார்க்க போகும் தைரியமான  குருப்பில் ‘தமிழ் தெரிந்த அடியேனும்’ ஒருவன் என்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை AN வாசகர்களுக்கு அடியேனின் ‘தைரியம்’  பற்றி நல்லா தெரியும்! 10 பேரா இருந்த குருப் 4 பேரா மாறிப்போய் பேய் பார்க்க கிளம்பினோம். 


இரவு மணி  10.30 ஆகிவிட்டது ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதும் அனைவரையும்  ஒரு வகை பயம் கவ்விக் கொண்டது. பயத்துடன் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நடந்து போய் கொண்டிருக்கும்போது சட்டென்று ஒருவர் “கொஞ்சம் எல்லோரும் நில்லுங்கப்பா” என்றார்.

ஆகா ‘பேயை’ இவர் பாத்துட்டாரோ என்று அனைவரும் பயத்துடன் நின்றதும் அவர் தொடர்ந்தார் “எனக்கு ஒன்னுக்கு வருது” என்றதும். 

“சரி இருந்துட்டு வா நாங்கள் போய் கொண்டு இருக்கின்றோம்” என்றதும்.

“அதெல்லாம் முடியாது எல்லோரும் ஒன்னுக்கு இருங்கள் நான் மட்டும் ஒன்னுக்கு இருக்க பயமா இருக்கு” என்று பரிதாபமாக கெஞ்சியதும்.

“சரி” என்று அவருக்காக நாங்களும் ஒன்னுக்கு இருந்தோம்.

ரயில்வே கேட்டை தாண்டியதும் எங்களுக்குள் பயத்தால் நெருக்கம் அதிகமாகியது தொடர்ந்த நடையில் வலது புறம் கடைசிலும் இடதுபுறம் கடைசிலும் நடந்து வருபவர்கள் பயத்தில் முண்டியடித்துக் கொண்டு நடுவில் புகுந்துவிட ஒரு பெரிய போட்டியே நடந்தது. 

அந்த கும்மிருட்டில் ரயில்வே கேட்டிற்கும் கஸ்டம்ஸ் பில்டிங் கிற்கும் நடுவே சென்றதும் தீடீர் என்று “யாரும் அசையாதீர்கள் அப்படியே உட்காருங்கள்” என்றார் சொன்ன மறுகணம் எங்களுக்குள் பயத்தால் நடு ரோட்டில் அப்படியே உட்கார்ந்து விட்டோம். யாரு நடுவில் பாதுகாப்பாக  உட்காருவது என்பதில் ஒரு சிறு தள்ளு முள்ளு ஏற்பட்டு பிறகு சமாதானம் ஆனது.

கடல் காற்று தொன்றலாய் எங்களை வருடிச் சென்றது. பேயை காட்ட வந்தவரிடம் “எப்போ பேய் வரும்” என்றதும்.

“கொஞ்சம் சும்மா இருங்கடா” என்று சப்தமில்லாமல் சத்தம் போட்டார். என் பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னான் இல்லை இல்லை புலம்பினான் “நேரமாக ஆக மரியாதை கொறஞ்சி போவுது” என்று புலம்பியது என்  காதுக்கு மட்டுமே கேட்டது. இது அவரோட டைம்ன்னு நினைத்து கொண்டு முழங்காலை கட்டிப் பிடித்து கொண்டு அனைவரும் கப்சிப் என்று நடு ரோட்டில் உட்கார்ந்து இருந்தோம்.

மணி 11.30 ஆனது தொன்றலாய் வீசிக் கொண்டிருந்த காற்று சற்று ஓய்ந்தது அதோடு சேர்ந்து தென்னை மற தோகையின் சலசலப்பும் ஓய்ந்தது. அங்கு நாங்கள் விடும் மூச்சு காற்று சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று ஒரு சம்பவம் நடந்தது தென்னை மரத் தோகையிலிருந்து சடசடவென சத்தம்  வந்தது, காற்று திசை மாறி வீச ஆரம்பித்தது பேயை காட்ட வந்தவர் சொன்னார் “எல்லாம் தைரியமா இருங்கள் பேய் வரும் நேரம் ஆச்சு” என்று அவர் சொன்ன கணமே மூச்சு காற்று சத்தத்தோடு இதய துடிப்பு சத்தமும் வெளியே கேட்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில் மூக்கில் சொக்க வைக்கும் வாசம் நுகர ஆரம்பித்தது. பேயை காட்ட வந்தவரோ “இன்னைக்கு வந்து இருக்கின்ற பேய் பெண் பேய் அதான் வாசமா இருக்கு” என்றார்.

பேயை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் எங்களின் கண்கள் அந்த இருட்டிலும் நாலா பக்கமும் அலை பாய்ந்தது காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வாடையும் அதிகரித்தது.

ஹாய்யாக தொடரும்...
Sஹமீது

43 Responses So Far:

abufahadhnaan said...

என்ன காக்கா நானும் ஆர்வத்துடன் காலையிலே பேயை பார்க்கலாம் என்று இருந்தேன் இப்படி (மந்த்ருச்சி விட்டு) தொடரும் என எனது பேய் கனவை கலைத்து விட்டிர்கள்

M.B.A.அஹமது said...

என்னிடமும் இரண்டு பேய் கதை உள்ளது வெளியூர் சென்றுவிட்டு எம் எஸ் மணியம் பஸ்ஸில் இரவு 1.30 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து அதிரைக்கு வந்து சேர்மன் வாடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி நான் மட்டும்தனியாக நடந்து மனதில் பயம் அப்பி கொண்டு மயான அமைதி என்பார்களே அப்படி ஒரு அமைதி திடிரென்று நாய் குறைக்கும் சத்தம் கொஞ்சம் தாண்டியவுடன் கூர்காவின் விசில் சத்தம் அப்படியே சுபகனல்லாஹ் கலிமாவை ஓதிக்கொண்டே நூர்தீன் காக்கா (இச்சைக்கா ) கடை அருகில் வந்த போது முன்போருவர் செக்கடி குளம் முனையில் உள்ள மரத்தில் தூகில்லிட்டு மரணம் அடைந்தது நினைவு வர சிறு பிராயத்தில் அவர் அங்கு பேயாக அலைவதாக நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வர வேஹமாக நடந்து உவைசாக்க வீட்டுக்கும் வக்கீல் முனாப் (மகாராஜா வீடு ) வீட்டுக்கும் இடைப்பட்ட தூரம் பாபிலோன் தொங்கு தோட்டம் போன்று நீண்டு கொண்டே இருக்கிறது வேகாமாக நடை போட்டு சேகனக்கா வீடு தாண்டி தமிழ் காதர் சார் வீடு தாண்டி பானை சட்டி காரக வீட்டுக்கும் வலையாகார வீட்டுக்கும் இடையில் உள்ள சந்தில் புகுந்து சோனி அபுல்ஹசன் வீடு தாண்டியதும் பந்துமா வீட்டு முனையில் பேய் நிப்பதாக ஏன் சாட்சி சொன்ன ஞாபகம் வந்து தொலைக்க பந்துமவீடு நெரிங்கியதும் பின்னாடி ஒருவர் வந்து கட்டி பிடித்து அப்படியே நெருக்குவது போன்ற பிரமை அப்படியே பின்னகால் பிறடி தெறிக்க ஓட்டம் என்பார்களே அப்படி ஒரு ஓட்டம் உம்மா என்று அலறிய சத்தம் 7 வீடு தள்ளி உள்ள எங்கள் வீட்டுக்கே கேட்டிருக்கும் 7 வீடு தள்ளி உள்ள எங்கள் வீட்டை அடைந்ததும் காலிங் பெல்லில் வைத்த கை எடுக்காமல் அடித்ததில் வீட்டில் உள்ள அனைவருமே எழுந்து வந்து கதவை திறந்துவிட்டார்கள் என் பெரியாப்பா நிலைமையை புரிந்துக்கொண்டு ஓதி பார்த்தார்கள் சற்று மனசு ரிலசாகி ஆசுவசா படுத்திகொண்டு அன்று நான் பட்ட கஷ்டம் என் ஒருவனுக்கு தான் தெரியும் எங்கள் சாட்சாவுக்கு ஏற்பட்ட மற்றொரு அனுபவம் நாளை

M.B.A.அஹமது said...

இதுவும் 1984 - ல் நடந்தது தான் ஒவ்வொருவர் வீட்டையும் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வருவர் வீட்டயும் எப்போது கடப்போம் அடுத்த பாயிண்ட் எப்போது வரும் என்று ஒரு திகிலான அனுபவம் தான்

sabeer.abushahruk said...

ஹமீது,
இயல்பான எழுத்து நடை உண்மையிலேயே அடுத்தது என்ன என்று எதிர்பார்ர்பைக் கூட்டுகிறது. சிறுவயதில் பேய் பயத்தில் எல்லோருக்கும் நடுவில் போய் இருந்துகொள்ள முயல்வதை நகைச்சுவையோடு அருமையாக விவரித்திருக்கிறீர்கள். பி.டி. சாமி என்று ஒரு எழுத்தாளர் இப்படித்தான் பயமுறுத்துவார்.

நீங்கள் குறிப்பிடும் அந்த பெரியவரை நான் சட்டென்று யூகித்து விட்டேன். என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பார்ப்பதற்கு அவரே ஒரு பேய் மாதிரிதானே இருப்பார்; அதனால்தானோ என்னவோ பரிச்சயப்பட்டுப்போன வேறு பேய்களைக் காட்டக் கூட்டிப்போயிருக்கிறார்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...


//ஒவ்வொருவர் வீட்டையும் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வருவர் வீட்டயும் எப்போது கடப்போம்//

ரூட் மேப் அப்படியே அத்துப்படி !

வீட்டு விலாசத்தோடு சொன்ன விதம் ரொம்ப பிடிச்சு இருக்கு !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Thrilling with expectation article of bro. Shahul. Once upon a time, recently died my beloved mother has told me that she had seen a figure moment of smoke at noon time (Vuchchivuruma neyram) when she was cooking in the kitchen. This kind of incident whether we couldn't believe or ignore it. Almighty Allah knows everything.

sabeer.abushahruk said...

உங்கள பேய் காட்ட இட்டுண்டு போனவரோட உம்மம்மா கத கீழே

திண்ணையில் கண்ணம்மா பாட்டி!


நள்ளிரவில்
நனைந்திருந்த நிலையத்தில்
நின்றது பேரூந்து
முன்னிரவின் மழை
மிச்சமிருந்தது

மசாலாப் பால் கடையின்
மக்கிப்போன கூரையில்
மஞ்சள் தூக்கலாக யிருந்த
மசாலாப் பாலில்
மடிந்த ஈசல்
பாலை
மேலும்
அசைவமாக்கியிருந்தது

எடை குறைந்த
பயணப் பொதியோடு
ஈரத்தில் நடந்து
என்
வீடிருந்த சந்தின்
முச்சந்தியை அடையவும்
காணும் தூரத்தில்
என் வீட்டுக்கு எதிர் வீட்டில்
மேடையிட்டத் திண்ணையில்
கண்ணம்மா பாட்டி
உட்கார்ந்திருந்தது


கண்ணம்மா பாட்டி
கதை சொல்லாது
காதைக் கிள்ளாது
பாதையில் செல்வோரை
வதைக்கவும் செய்யாது

சுருங்கிய தோலுக்குள்
ஒடுங்கிய உடலும்
சுருக்குப் பைக்குள்
சுண்ணாம்பும் புகையிலையும்
இடது கையில்
குச்சி யொன்றும்
எப்போதும் வைத்திருக்கும்

பல்லாங்குழியோ பரமபதமோ
பாட்டியோடு விளையாடினால்
தோற்றாலும்கூட
இழந்தை வடையோ
இஞ்சி மரபாவோ தரும்
முடிந்து வைத்த காசவிழ்த்து
முறுக்கு திண்ணச் சொல்லும்

கண்ணம்மா பாட்டி
இல்லாத திண்ணையை
நான் கண்டதே யில்லை
எனினும்
இத்தனை இரவிலுமா
இப்படித் தனித்திருக்கும்?!

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

பின் படலின் கொக்கி நீக்கி
கொல்லைப்புற வழியில்
சென்று உறங்கிப் போனேன்.

மூன்று மாதங்கள் கழித்து
வந்திருந்த என்னை
மறுநாள் காலை
எழுப்பிய உம்மா
வழக்கம்போல
இறந்து போனவர்கள்
இருந்த வீடுகளுக்கு அழைத்துப் போயிற்று

இரண்டாவது வீடாக
எதிர் வீட்டுக்குச் செல்ல
இறந்தது யாரென கேட்க
உம்மா சொன்னது
கடந்த சனி யன்று
கண்ணம்மா பாட்டி யென்று!


sabeer.abushahruk said...

கஸ்டம்ஸ் ஏரியாவ்ல பேய் பார்க்காத நம்மூர்க்காரய்ங்க ஏது?

கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

காலப்போக்கில்
களிமண் திரண்டு
கரையை நிறைத்ததால்
கடல் வணிகம் குன்றிப்போக
காலாவதியாகிப்போன
கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும்

காரைக்குடி சென்னை
கம்பன் எக்ஸ்பிரஸ்
கைவிடப்பட்டதால்
காற்று வாங்கும் ரயிலடிக்கும்
இடையே

பல ஆண்டுகளாக
பசுமை மாறாமல்
பரந்து நிற்கின்ற
பாதாம் மரத்தடியில்
பள்ளிப் பருவத்தில்
பரீட்ச்சைக்குப் படிக்கச்
செல்வதுண்டு

குட்டிக்ககுரா பவுடரும்
கொலுசுச் சப்தமுமாக
உலவும்
மோகினிப் பிசாசுக்குப்
பயந்து
கட்டிடத்துள்
செல்வதில்லை எனினும்

இயற்கையின்
ஓர் உபாதைக்கு
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள்
ஒதுங்குகயில்
ஆர்வம் எட்டிப்பார்க்க

தூசு படிந்த தரையில்
சற்றே சுத்தமான மூலையில்
சப்பையான காலிக் குப்பியும்
காளிமார்க் சோடா போத்தலும்
நீர்த்துப்போன பீடித்துண்டுகளும்

கசங்கிய காகிதப் பொட்டலத்துள்
நசுங்கிய காய்ந்த தாமரை இலையும்

உதிரியாய்
பல பூவிதழ்களும்
சணலில் தொடுத்த காம்புகளும்
தரையில்
பிடரியளவு
ஒட்டிய எண்ணெய்ப் பிசுக்கும்
ஒரு சரிகை இழையும்
சில ஜிகுனா துகள்களும்
கண்டு

மோகினிப் பிசாசுவின்
பழக்க வழக்கங்கள் குறித்து
தெளிவில்லாமலிருந்தது

சமீபத்தில் ஊர்சென்றிருந்தபோது
கஸ்டம்ஸ் கட்டிடம்
இடிக்கப்பட்டுவிட்டதால்
அதே
பழக்க வழக்கங்களுடைய
மோகினிப் பிசாசு
இருப்பதற்கான அடையாலங்களை
உப்பளக் கொட்டகையின்
பம்ப் செட்டுக்கருகில்
காண முடிந்தது.

Anonymous said...

தம்பி M.B.A.அஹமத்! நடுத்தெரு நாலாவது சந்துலே ரைமா ராத்தா ஊடு
எங்குனேகுள்ளே இருக்கு?. கொஞ்சம் காமிக்க முடியுமா? ஒரு சாமான் குடுக்கணும்!

S. முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//நீங்கள் குறிப்பிடும் அந்த பெரியவரை நான் சட்டென்று யூகித்து விட்டேன். என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பார்ப்பதற்கு அவரே ஒரு பேய் மாதிரிதானே இருப்பார்; //

ஆமா நீங்கள் முன்பு எப்போதும் போய் முகத்தில்தான் முளிப்பீர்களமே! அந்த முன்னால் எதிர் வீட்டுக்காரர் சொன்னார்

அந்த பேய் முகம் உங்கள் முன்னால் எதிர் வீடாமே ?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//சமீபத்தில் ஊர்சென்றிருந்தபோது
கஸ்டம்ஸ் கட்டிடம்
இடிக்கப்பட்டுவிட்டதால்
அதே
பழக்க வழக்கங்களுடைய
மோகினிப் பிசாசு
இருப்பதற்கான அடையாலங்களை
உப்பளக் கொட்டகையின்
பம்ப் செட்டுக்கருகில்
காண முடிந்தது.//

அப்போ பேய் பிசாசுகள் எடம் மாறி வேலையைகாட்டிக்கிட்டுத்தான் இருக்குது

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//இயற்கையின்
ஓர் உபாதைக்கு
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள்
ஒதுங்குகயில்
ஆர்வம் எட்டிப்பார்க்க//

இயற்கை உபாதை கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி வந்திருந்தா லைவ் தான் போங்க!!

Ebrahim Ansari said...

நானாக இருந்தால் ,

"BAY OF BENGAL கரையில் ஒரு பேயுடன் பேட்டி"

என்று இந்த பதிவுக்குத் தலைப்பு வைத்து இருப்பேன்.

======
// “இன்னைக்கு வந்து இருக்கின்ற பேய் பெண் பேய் அதான் வாசமா இருக்கு” என்றார்.//

இதனால்தான் "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு " என்று பாடினார்களோ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹாய்யான இனிய தொடர்.

அதைக் காண ஆவலில், ஆனால் காணமுடியாது என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

M.B.A.அஹமது said...

காக்கா ரைமா ராத்தா வீட்டூக்கு ஈசி வழி உங்க விட்டிலிருந்தே சொல்றேன் சி எம் பி லைன் இருந்து ஒரு ஸ்ட்ரைட் நேரா நடங்க மஜபா வீடு தாண்டி கட்டில்கால் மர்ஹும் ஜகரியாஹ் காகா வீட்டுக்கும் அஹது காக்க வீடூக்கும் நடுவில் வந்து எதிரில் குவாலிடி அன்வராக்க வீடு வந்து முட்டும் ஒரு லெப்ட் கட் பண்ணுங்க சிங்கப்பூர் யூசுப் வீடு தாண்டினால் செகடி பள்ளி பில்டிங்கில் எனது மதிப்பிற்கும் கண்ணியதிர்க்குமுரிய அப்துல் காதர் ஆலிம்சா அவர்களின் மருமகனார் வைத்துள்ள பழ கடை வரும் அதிலிருந்து நேரா போய் குண்டு அன்வராக்க வீடு தாண்டி வில்சன் பரூக் காக்க வீட்டுக்கு அருகில் ஒரு ரைட் கட் பண்ணி ஒரே ஸ்ட்ரைட் தக்வா பள்ளி யை நோக்கி நடங்கள் மர்ஹும் அபுல்ஹசன் காக்க வீடு ஈ பி எஸ் மலழையர் பள்ளி தாண்டி போங்கள் . இப்போது தக்வா பள்ளியில் இருந்து வருவோம் .நடுத்தெரு 1 வது சந்து மையந்தாகரை சந்து, நடுத்தெரு 2 வது சந்து மறைக்கவீடு சந்து , நடுத்தெரு 3 வது சந்து நம்ம மூத்த பத்திரிகையாளர் அஹமது கக்கா வீடு அருகில் சின்னமட்சி வீடு சந்து , இப்போது உங்கள் விலாசத்தின் ரைமா ராதா வீடு சந்து ...என் மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய லத்தீப் ஆலிம்சா வீடு அருகில்...... 4 வது சந்து தற்போது ரைமா ராதாவும் இல்லை ரைமா ராதா வீடும் இல்லை நீங்கள் எதாவது கொடுபதாக இருந்தால் கடைதெருவில் அருசி கடை மம்ப்துல்லா காக்காவிடம் கொடுத்துவிடுங்கள் அவர்களின் மாமி தான் ரைமா ராத்தா .மானுதம் கரைக்டா போய் சேரனும்ல


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லோரும் பேயோடு ஹாய்யா இருக்கும்போது.... நான் மட்டும் ரூட்டு போட்டு கூட்டிகிட்டு போனவங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன்...

அருமை ! கூகில் மேப்பை முழுங்கிட்டியலோ !?

KALAM SHAICK ABDUL KADER said...

\\எல்லோரும் பேயோடு ஹாய்யா இருக்கும்போது.... நான் மட்டும் ரூட்டு போட்டு கூட்டிகிட்டு போனவங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன்...\\

நானும் தான் ரூட் பின்னால் கண் போன போக்கில் மனம் போனதால், பேயைக் காணவில்லை!

அதிரைப்பட்டினத்தின் அனைத்துத் தெருக்களும் அத்துப்படி; பக்ருதீன் அலி அஹ்மத் காக்காவிடம் ரூட் மேப்பைக் கத்துக்கடி என்று பாடலாம் போல் இருக்கின்றது.

KALAM SHAICK ABDUL KADER said...

சுட்டும் விழிச்சுடர் ஷா.ஹமீத் அவர்கள் ஒரு சிறந்த நாவலாசிரியராக விளங்குகின்றார். சரியான இடத்தில் “தொடரும்,,,” திரைபோட்டு விட்டு நம்மை எல்லாம் ஒருவாரம் பேய்க் கனவு காண வைத்து விட்டார்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

Google found error

முன்னாள் ஜனாதிபதி பெயருடைய கூகுலர் கவனிக்கவும்.

//காக்கா ரைமா ராத்தா வீட்டூக்கு ஈசி வழி உங்க விட்டிலிருந்தே சொல்றேன் ..................................................பழ கடை வரும் அதிலிருந்து நேரா போய் குண்டு அன்வராக்க வீடு தாண்டி வில்சன் பாரூக் காக்கா வீட்டுக்கு அருகில் ஒரு ரைட் கட் பண்ணி// 'னால் நிஜாம் ஸ்டோருக்கும் மெம்பர் அபூபக்கராக்கா வீட்டுக்கும் எதிரில் இருப்பது தான் நடுத்தெரு கீழ்புறத்தின் முதல் சந்து,
அடுத்து சந்தில் இருப்பது சில கொல்லை வாசல் மட்டுமே,
மூனாவது சந்தானது உயரமான ஆளாகிய அகமது ஜுபைராக்கா வீட்டுக்கும், மர்ஹூம் அலிய் ஆலிம்சா அவர்கள் வீட்டுக்கும் இடைப்பட்டது.
அடுத்து வருவதே நாலாவது சந்து (நெறியாளர் மற்றும் கனிணி அறிஞர் மர்ஹூம் உமர்தம்பி அவர்கள் சந்துக்கு நேரெதிர் சந்து) இதில் இருக்கிறது ரைமார்த்தா வீடு. சாமான் சரியான முகவரியில் சேர்ந்து விடும்.
இதற்கு அடுத்து இருப்பதே மர்ஹூம் அபுல்சாக்கா EPL ஸ்கூல் அமைந்த 5 வது சந்து
என இப்படியே தக்வா பள்ளி சந்தானது நடுத்தெரு கடைசி சந்தாகும்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

நானாக இருந்தால் ,

"BAY OF BENGAL கரையில் ஒரு பேயுடன் பேட்டி"

என்று இந்த பதிவுக்குத் தலைப்பு வைத்து இருப்பேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் மூன்றுதலைப்புகள் தேர்வு செய்துஇருப்பேன். ஒன்று ''பேய் ஆஃப் பெண்கள்,
இரண்டு:பேய் ஆஃப் பெங்கால்,மூன்று:பேய் பார்த்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்.

நன்றி:இ.அ.காக்கா.

M.B.A.அஹமது said...

சகோதரர் ஜாபர் சாதிக் அஸ்ஸலாமு அழைக்கும் பாரூக் காக்க 4 வது சந்து என்று குருப்பிட்டதால் நான் ஜம்ப் பண்ணி அங்கிருந்து 4 வது சந்தை கனகிட்டேன் ஆக்சுவலி அது 9 வது சந்து . போஸ்ட் ஆபிஸ் முகவரி படி நடுத்தெரு முதல் சந்து புளங்கரிசி மஜீத் கக்கா மர்ஹும் உபைதுலாக்கா வீடு சந்து அடுத்து சேத்துப்பட்டு ஜபுருல்லா காகா வீட்டுக்கு அடுத்து அலீம் காக்க மகன் பாரூக் காக்க வீடு சந்து , நடுத்தெரு 3 வது சந்து மு க சென வீடு .27 வாடி எனது மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய எங்கள் அப்பாவின் கூட்டாளி என்னை அன்போடு சம்சுதீன் காக்க பேரன் என்று அழைக்க கூடிய அலி அலிம்சா அவர்களின் சகோதரி வீடு சந்து . நாலாவது சந்து வாவனா வீடு..... பட்டு மரியது வீடு சந்து . 5 வது சந்து மெத்தை வீட்டு சந்து ஈ பி எஸ் ஸ்கூல் சந்து 6வது சந்து நூகு லெப்பை வீட்டு சந்து 7 வது சந்து சின்ன மட்சி வீடு சந்து 8 வது சந்து அஹமது காக்க வீடு சந்து 9 வது கதையின் கதாநாயகி ரைமா ராதா வீடு சந்து ரைமா ராதா மகன் இப்ராகிம் காகா ஹை ஸ்கூல் மம் பாஸின் காக்கா ரெண்டு பேரும் தற்போது இல்லாததால் அவர்களின் நெருங்கிய உறவினரான அருசி கடை முகம்மது அப்துல்லா காகவிடம் கொடுக்க சொன்னேன் சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களே ரைமா ராதா வீடு இப்போது இல்லை இது சரியா தவறா சொல்லுங்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்கு முஸ்ஸலாம் ஜனாதிபதியாக்கா,

நாலாவது சந்தின் கதாநாயகி மேட்டர் தீர விசாரித்து பதிகிறேன்.

Shameed said...

MBA அஹமது பாய் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் இப்படி நடு சாமத்துலே சந்து பொந்தெல்லாம் புகுந்து புறப்படுரியல

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
//நானாக இருந்தால் ,

"BAY OF BENGAL கரையில் ஒரு பேயுடன் பேட்டி"

என்று இந்த பதிவுக்குத் தலைப்பு வைத்து இருப்பேன். //



மாமா கொஞ்சம் பொறுங்கள் பேய் பேட்டியும் இருக்கு ஆனால் "BAY OF BENGAL"லில் அல்ல வெட்டி குள கரை ஓரத்தில்

Shameed said...

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…
//சுட்டும் விழிச்சுடர் ஷா.ஹமீத் அவர்கள் ஒரு சிறந்த நாவலாசிரியராக விளங்குகின்றார். சரியான இடத்தில் “தொடரும்,,,” திரைபோட்டு விட்டு நம்மை எல்லாம் ஒருவாரம் பேய்க் கனவு காண வைத்து விட்டார்.//



ஊரில் பேய் மழை
உங்கள் கனவிலும் பேய் யட்டும் மழை

Shameed said...

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…
//சுட்டும் விழிச்சுடர் ஷா.ஹமீத் அவர்கள் ஒரு சிறந்த நாவலாசிரியராக விளங்குகின்றார். சரியான இடத்தில் “தொடரும்,,,” திரைபோட்டு விட்டு நம்மை எல்லாம் ஒருவாரம் பேய்க் கனவு காண வைத்து விட்டார்.//



இந்த கதையின் கருவே ஒரு திரைதான் முடிவில் அந்த திரை பற்றி பார்ப்போம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜனாதிபதியாக்கா!

Google found error again

தீர விசாரித்து அறிந்த படி நீங்கள் சொன்ன புளுங்கரிசி வகையறா சந்தானது செக்கடி தெருவை சார்ந்தது.
நான் சொன்ன மேலும் மெம்பர் காதராக்காவின் சந்தே முதல் சந்து.
அதே போல் நான் சொன்ன ரைமார்த்தா சந்தும் அதே 4 வது சந்து.அவர்கள் வீடு இப்ப மனையாகவே இருக்கு.
ஆனால் பாரூக் காக்கா அவர்கள் சொன்ன அன்னார் இன்னாரா என்பதில் மட்டும் குழப்பம்.

M.B.A.அஹமது said...

சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களே ரைமா ராத்தா வீடு தற்போது மனையாகவே உள்ளது சரி . நீங்கள் சொன்ன காதாராக்கா வீடு சந்து முதல் சந்தே ஏற்கனவே இருந்த ரெண்டாவது சந்து இப்ப கானாபோய் விட்டது அதனால் புழுங்கரிசி வீட்டு சந்தை முதல் சந்தாக கணக்கிட்டு ரெண்டாவது சந்தாக காதாராகா வீட்டு சந்து கணக்கிடப்பட்டு வருகிறது

Shameed said...

சந்தை இந்த பிரி பிரிக்கிரியலே இருவரும் ஊரில் முன்சந்து கறியும் பின்சந்து கறியும் சாப்பிட்டு இருப்பியளோ

sabeer.abushahruk said...

சந்துக்கு ஒரு பேய்னு பார்த்தாலும் பேய்க் கணக்கு எங்கேயோ போகுதே.

எம் ஹெச் ஜேக்கும் எம் பி ஏவுக்கும் சந்தடி சாக்கில் இந்த விவரங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து பின்னாலிருந்து இயக்குவது பேயில்லை என்று நம்புவோம்.

ஹமீது, பே (சும்மா பயங்காட்டிப் பார்த்தேன்)

Anonymous said...

தம்பி M.B.A அஹமது! நீங்க கொடுத்த ரூட்டு மேப்பை படிச்சு பாத்தேன் தலே கெலக்கே ஈந்து மேக்கே சுத்துனுச்சு!

அடுத்து தம்பி M.ஜஹபர் சாதிக் [முசெமு] சொன்ன மேப்பை பாத்தேன். தலே வடக்கேயும் தெக்கையும் தெக்கேயும் வடக்கேயும் ஆட்டோ மேட்டிக்கா ஸுத்தோ சுத்துன்னு சுத்தி கடசியா கி......லே....உளுந்துட்டேன்.

உலந்தது தான் தெரியும். 'முளிச்சு பாத்தா! ஒரே அலுவையும் கூக்குரலுமா இருந்துச்சு. அதை கேட்ட அடுத்த ஊட்டு ஜனம் எதுத்த ஊட்டு ஜனம் பின்வீட்டு ஜனம் அதுக்கும் பின் வீட்டு ஜனம் அதுக்கும் பின் வீட்டு ஜனம் அதுக்கும் பின் வீட்டு ஜனம் அதுக்கும் பின் வீட்டுஜனம் அதுக்கும் பின் வீட்டு ஜனம் இப்புடி போயி போயி மேலத் தெரு கீழத்தெரு அப்புடியே திரும்பி நெய்யக்காரத் தெரு அப்புடியே திரும்பி போயி சிறிய நெய்யகாரத் தெரு அப்புடியே கிழக்கே திரும்பி சானாவயல் சானாவயல் நடவு முடிச்சு செடியன் கொளத்துலே கைகால் கழுவி முகம் தொடைச்சு நேரா இப்பு வளயாமேபோயி M.S.M.நகரை ஓரே தாண்டாக தாண்டாக தாண்டி அப்படியே கிழக்கே திரும்பி ஹாஜாநகர் போயி அதை முடிச்சிட்டு திரும்ப வடக்கே திரும்பி புதுதெரு மேல்புரம் கீழ்புறம் முடிச்சிட்டு திரும்பி கடல்கரை முடிச்சு கஷ்டம்ஸ்ஆபிஸுபக்கத்துலே இருக்கிற தோட்டக்காரனுனுக்கும் செய்தி போயி அவனும் அவனோட பொஞ்சாதியும் என்னமோ ஏதோனு ஊட்டுக்கு வந்துட்டாங்க!.

இதுக்கு எடையிலே சேது ரோட்டுக்கு சேதி போயிஜனமெல்லாம் தெரண்டு வந்துடுச்சு.

கடல்கரை தெரு ஜனம் பூரா தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க,சொந்தங்க பந்தங்க தாய பிள்ளையாக இருந்தவங்க தெரியாதவங்க அறியாதவங்க அடுத்த ஊடு அண்டுன ஊடு எதுத்த ஊடுஅதுக்கும் அடுத்த ஊடு எல்லாத் தெருவுமே ஒன்னா திரண்டு வந்துடுச்சு!.

''அடே நான் பெத்த வாப்பா! என்னே உட்டுட்டு போயிட்டியாடா! 'எங்'க ன்னுமுளியே!''ன்னு வாயிலேயும் வயித்திலேயும் அடிச்சுகிட்டு குய்யோ முய்யோன்னு கத்திகின்னு வந்துருச்சு பாருங்கோ ஆணும் பெண்ணுமா ஒரு கூட்டம்!

கடல்கரை தெரு தாஜுதீன் ஆலிம்சா போட்டது போட்டபடி போட்டுட்டு ஓடி வந்துட்டாரு!.

அவரு வந்து கணக்குபோட்டு பாத்துட்டு ''இது செய்த்தான் கோளாறு! கடக்கரை கஸ்டம்ஸ் ஆபிஸு பேய் மாதிரி தெரியுது!'' ன்டு சொன்னாரு! தட்டை எழுதி தாரேன் குடுங்கோ! எளுமிச்சம் பழம் இருக்கான்னு'' கேட்டாரு. நடுத்தெரு நாலாவது சந்து ரைமா ராத்தாவுக்கு அமானிதமா கொடுக்க நான் கைலே வைச்சுருந்த எழுமிச்சம் பழத்தை வாங்கி என் தலையே மூனு தடவை சுத்திபுட்டு அதை கத்தியாலே அறுத்து பத்தாரு பாருங்கோ சுபுஹானல்லா அதுலே ருந்து ஊத்துனுச்சு பாருங்கோ செக்கே செவேருண்டு ரத்தம்! ரத்தமுண்டாரத்தம் உங்கூட்டு ரத்தம்யங் கூட்டு ரத்தமா?

பாத்த ஜனமெல்லாம் அப்புடியே மலச்சு போயி மூக்குலே வெறலே வச்சது வச்சபடி ஆடாமே அசையாமே மலைபோலே நின்னுடுச்சு!

இப்புடியுமா இருக்கும்? பெரிய ஹொதறத்தா இருக்குதுமா.ன்னு'' ஒருதருக்குக்கு ஒருத்தர் பேசிகிட்டாங்க!

அதே பாத்துட்டு தாஜுதீன் ஒஸ்தாது சொன்னாரு ''இதுலே செய்த்தான்கோளாறும் இருக்கு மூளையும் கொலம்பி போயி இருக்கு''ன்னாரு. !''யாரும் என் மாப்புலேக்கி செய்வினை கிய்வினை செய்ஞ்சு இருக்காங்கலோ!''ன்னு என் மனைவி கேட்டுச்சு. கணக்கு போட்டு பாத்துட்டு சொன்னாரு''அதெல்லாம் ஒன்னுமில்லே. யாருக்கோ என்னமோ கொடுக்காப் போன இடதுலே
வழி தெரியாமே வழி கேட்டதுலே ரெண்டு பேரு ரெண்டு மாதிரி சொல்லி மூளையே கொலப்பிட்டா போலே இருக்கு.. இதுக்கு ஏர்வாடி போனாத்தான் தீரும்''என்றார்''.

''தூக்கு ஏர்வாடிக்கு'' ஒரே.சத்தம்!

இப்போ நான் ஏர்வாடியிலே இருக்கேன் ஏர்வாடிக்கு வழி தெரியுமா.? தெரியாட்டி தம்பிகள்M.B.A.அஹமத் அல்லது M'ஜஹபர்சாதிக் [மு.செ.மு] இருவரிடமும் வழிகேட்டு வந்தால் நிச்சியமாக ஏர்வாடி வரலாம்?.

பாக்க வந்தா கையிலே ரெண்டுக்கும் குறையாமே எலுமிச்சம் பலத்தோடவாங்க! [தலைலே] தேச்சு உட்டுட்டு போங்க!.

S.முஹம்மது பாரூக்அதிராம்பட்டினம்,[Campஏர்வாடி.]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ஜனாதிபதியாக்கா!//

நான் ஒன்னும் பழைய பேப்பர் படிக்கலைன்னு சொல்லும் அளவுக்கு இந்த மாதிரி கூப்பிட டெல்லிக்கு யாராச்சும் போனா எப்படி இருக்கும் !?

கனவு கானச் சொன்ன காக்காவும்....! நம்மூரு பக்கமே வர மாட்டேங்கிறாங்களே... எத்தனையோ முறை முயற்சித்தும்... இன்னும் நடக்க வில்லை... !

KALAM SHAICK ABDUL KADER said...

மூத்த காக்கா SMF அவர்களின் பின்னூட்டம் வரிக்கு வரி படிக்க படிக்க , என் வயிறு குலுங்கச் சிரித்து விட்டேன். பேய் ஓட்டிய பின்னூட்டத்தில் சிரித்ததனால் என் மன அழுத்த நோய் ஓட்டி விட்டீர்கள் காக்கா, நன்றி.

Shameed said...

இந்த பேய்க்கே பயந்து கொண்டு பின்னுடம் இடாத K L காரர் கம்ப்யூட்டர் காரர் மற்றும் வாழ்வு காரரும் அடுத்த அத்தியாயத்தில் வரும் மோகினி கதைக்கு என்ன செய்ய போறார்களோ என்ற கவலை என்னை ஆட்டிப்படைக்குது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பேயி, பிசாசெல்லாம் கெடையாதுப்பா? எந்தக்காலத்துல இரிக்கிரியல்வ்வோ? என்று பட்டப்பகலில் வீராப்பு பேசும் யாராச்சும் நட்டநடு ராத்திரியில ஹாய்யா மைய்யத்தாங்கரை மேல கட்டுல் போட்டு ஒரு ராத்திரிக்கி படுத்துக்கெடந்துட்டு வர முடியுமா? அவருக்கு "ஊரின் வீர மகன்" பட்டம் வழங்கி பரிசுகள் கொடுத்து கவுரவிக்கலாமே........... அவ்வளவு கூட வேண்டாம் தைரியசாலியான ஒரு ஆள் இரவில் பள்ளிவாசலுக்குள் வாசல் கதவின் குறுக்கே மட்டும் படுத்து உறங்க முடியுமா? முயற்சிக்க நினைத்தால் அவர் டிஸ்ஸூ பேப்பர் போல் கசக்கி எறியப்படுவார். அல்லாஹ் ஒருவனே தேவன் என்பது போல் ஜின், பேய், பிசாசு, ஆவி, மோகினி, ஆவுசம், எக்ஸட்ரா.....எல்லாம் ஒரே குலமா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கொஞ்சம் புதையலுக்கே பலமான பூதங்கள் காவல் காக்கும் என்று சொல்லும் பொழுது டன் கணக்கில் தங்க நகைகள் புதையல் இருக்கும் அந்தக்கோட்டையில் பூதங்களின் படைபட்டாளமே செக்யூரிட்டிக்கு நிற்குமோ? மனிதர்களின் கட்டுக்கதைகளையும், மூடநம்பிக்கைகளையும் பார்த்து படைத்த அல்லாஹ் எப்படித்தான் கேலிச்சிரிப்பு சிரிப்பானோ? அல்லாஹ் அஹ்ழம்......

M.B.A.அஹமது said...

அஸ்ஸலாமு அழைக்கும் மூத்த காக்க தாங்கள் நலமுடன் ஏர்வாடியில் இருப்பது அறிந்து மிக்க சந்தோசம் .சுற்றின் எண்ணிக்கையை கவனித்தேன் என் ரூட்டை கிழக்கிலிருந்து மேற்கு ஒரு சுற்று தான் சகோதரர் எம்.ஹெச் .ஜே வின் ரூட்டில் வடக்கு தெற்கு ,திரும்ப வடக்கு தெற்கு திரும்ப சுற்றோ சுற்றுண்டு சுற்றி விட்டீர்கள் நான் 25% தான் காரணம் எனவே தங்கள் நலமுடன் வாழ என்றென்றும் என் துவா உங்களக்கு உண்டு .சகோதரர் கவியன்பர் கலாம் அவர்களே நீங்கள் மட்டும் அல்ல நான் திரும்ப திரும்ப படித்து சிரித்து கொண்டுள்ளேன்.காக்கா மயக்கமடைந்து ஊரே கூடியதெல்லாம் கூட எனக்கு கவலை இல்லாமல் சிரித்திருக்கிறேன் பாருங்கள்....... .மூத்த காக்கா தாஜுதீன் ஹஜ்ரத் வேற பாவம் எங்களால் அவர்களும் உங்கள் சுப்ஜெக்டில் வந்துவிட்டார்கள் .ஆனால் எனக்கு உண்மை தெரிந்துவிட்டது கஸ்டமஸ் ஆபிஸ் பக்கத்தில் உங்க தோப்பு உள்ளது அங்கு உள்ள பேய் தான் உங்கள் மகனார் பேய் கதையில் கஸ்டம்ஸ் ஆபிஸ் பேய் பற்றி எழுதியதால் அது கோபப்பட்டு தங்கள் மேல் தாவி இருக்கும் .மற்றபடி ரைமா ராத்தா ரொம்ப நல்ல மனுசி அவர்களுக்கு கொடுக்க வைத்துருந்த எலுமிச்சை பழத்தில் எதுவும் வந்திருக்க சான்ஸ் இல்லை தாஜுதீன் ஹஜ்ரத் சொல்வது போல் இது எங்க ரெண்டு பேரால் வந்த குழப்பம் தான் .அப்புறம் ஏர்வாடிக்கு ரூட்டலாம் இப்போதைக்கு தேவையே இல்லை நம்மூரிலிருந்து ஒன்லி 2 ஹவர்ஸ் தான் முன்னாடி தான் 5 மணி நேரத்துக்கு மேல் ஆகும் அப்புறம் ஏர்வாடியில் எதுவும் வேண்டும் என்றால் சொல்லுங்கள் முத்தவல்லி அமிர்ஹம்சா தவறி போய்விட்டார் அவரது மருமகன் தான் இப்ப இருக்கிறார் ஸ்டார் பேப்பர்ஸ் குழுமத்தின் சொந்தங்கள் உள்ளது நிறைய நணபர்கள் உள்ளனர் எலுமிச்சை பழத்தை தவிர வேற எது வேண்டும் என்றாலும் சொல்லுங்கள் ...... மஹனாரின் அடுத்த பேய் தொடருக்கு முன்னாள் திடமாக ஊர் வந்து சேருங்கள்

M.B.A.அஹமது said...

நெறியாளருக்கு கனவு காண சொன்னவரை நமதூறுக்கு கா மு மேல்நிலை பள்ளிக்கோ .கல்லூரிக்கோ அழைத்து வர வேண்டும் என எனது நீண்ட நாள் கனவாக உள்ளது .ஒரு முறை அவரது உதவியாளர் பொன்ராஜ் அவர்களிடமும் இது விசயமாக பேசினேன் நான் ஊர் வரும்போது அவசியம் அதிரைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்வதாக சொல்லி உள்ளார் .இன்சா அல்லாஹ் ஒரு நாளைக்கு அபுல் குலாம் காக்காவை அதிரம்பட்டினதுக்கு தள்ளிகிட்டு வந்துருவோம் .

M.B.A.அஹமது said...

மூத்த காக்கா தங்கள் புத்தகங்கள் பிறக்கிறது தொடர் நிறைவு பெறுகிறது என்று போன வாரம் தொடரை நீங்கள் முடித்த வருத்தத்தில் இருந்த எங்களுக்கு இந்த நீண்ட வயிறு குலுங்க சிரிக்க வைத்த பின்னூட்டாம் மிக பெரிய ஆறுதலே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

.//இன்சா அல்லாஹ் ஒரு நாளைக்கு அபுல் குலாம் காக்காவை அதிரம்பட்டினதுக்கு தள்ளிகிட்டு வந்துருவோம்//

அந்த ஜனாதிபதியாக்காவை இந்த நம்ம ஜனாதிபதியாக்கா நிச்சயம் ஒரு நாள் தள்ளிக்கொண்டு வருவாக என இன்று நான் கனவு காண்கிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புள்ள ஜனாதிபதியாக்கா!

நான் காட்டியது நேர் வழி!
முதலிருந்து நாலாவது சந்துக்கு.
ஆனால் நீங்க சொன்னது முதலிருந்து கடைசிக்கு போயி அப்பரம் வந்த வழியா மீண்டும் நாலாவது சந்துக்கு போக சொன்னீஹ!

மரியாதைகுரிய Camp ஏர்வாடி காக்கா,
நீங்கள் முகாமிட்டுள்ள இடத்துக்கு ரூட்டு சொல்வெதென்றால் எழுத முடியும் ஆனால் படிக்க இடிக்கும். அதனாலே வானாம். முதல் கட்டமாக ரெடிமேடாக உள்ள லெமன் சாறு பாட்டில் ஒரு டஜன் நம்ம காலேஜ் வழியாக சென்ற ரூட் 304 பஸ் கண்டக்டரிடம் கொடுத்துள்ளேன். அவர் இன்று உங்க முகாமுக்கு வந்து தருவாராம். லெமனுக்குள் ரெத்தமா இருக்குமா என்ற ஐயமே இல்லை. காரணம் ரெடிமேட் லெமன்.
சீக்கினம் இல்லம் திரும்பி நலமாய் காண வேண்டும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு