Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 7 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2013 | , ,


போதை வஸ்து

போதை வஸ்து, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கும் போது அவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் இரத்தத்தில் சேர்ந்து மிகவும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட கண்களின் பார்வையைப் பாதிக்கின்றன.. எனவே அவற்றை முற்றிலும் நிறுத்திக் கொள்ளல்வேண்டும். போதை பொருட்கள் உபயோகித்தவர்கள் கண்பார்வயை இழப்பதையும், கண் சம்பந்தபட்ட நோயுடன் வாழ்ந்து வருவதையும் கண்கூடாக கண்டும், அந்த போதை வஸ்துகளுக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய்  - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது: அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:

'விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”  (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே,அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துவதை பைபிளும் தடை செய்கிறது:

பைபிளின் 20வது அத்தியாயம் Proverbs உடைய 01வது வசனமும் 5வது அத்தியாயம் Ephesians உடைய 18வது வசனமும் மது அருந்துவது சிறந்தது அல்ல என குறிப்பிடுகின்றன.

மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:

மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. 

எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்த சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

இவ்வளவு மோசமான உடல் நலகேடுகளை விளைவிக்கும் போதை பொருள்களை விற்கும் சாரயக்கடைக்கு அதிராம்பட்டினத்தில்  அனுமதி அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று கடைகளுக்கு அனுமதி. இதை தட்டி கேட்டு குட்டிவைப்பதற்கு  அதிராம்பட்டினத்தில் யாருக்கும் திரானியில்லை. எல்லா ஊர்களிலும் இந்த நிலமை இருந்தாலும் நான் ஏன் குறிப்பாக நமதூரை  குறிப்பிடுகின்றேன் என்றால் காரணம் இதுதான் எங்கள் ஊர் முஸ்லீம் ஊர், ஆலிம்கள் நிறைந்த ஊர் என்றும் நான் அந்த இயக்கத்தைச் சார்ந்தவன் இந்த இயக்கத்தைச் சார்ந்தவன் என்றும், ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமை பாராட்டுவதிலும் அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவனை அடித்தே சாகடிக்கும் காரியங்களிலும் மட்டுமே கவனத்தைச் செலுத்தும் இளைஞர்களின் வாய்ச்சவடால்களுக்கு மட்டும் குறைவிருக்காது, ஊர் மக்களுக்காக எண்ணிலடங்கா விஷயங்களை இரவு பகல் பாராது எங்கள் இயக்கங்கள் செய்கின்றது என்று பெருமை பாராட்டி மார்தட்டிக் கொள்வதிலும் 

இரத்த தானங்கள் செய்வதிலும் மற்ற உப்புச்சப்பு இல்லாத காரியங்களிலும் தமது பணத்தையும் பொன்னான நேரத்தையும் செலவழிக்கின்றனர். நான் இரத்த தானம் செய்வதை குறை சொல்லவில்லை இதை செய்வதைத் தவிற வேறு என்ன செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே இங்கே இதை குறிப்பிடுகின்றேன்

இப்படிபட்ட மார்க்கத்துக்கு புறம்பான விசயத்தை அரசாங்கமே நின்று செய்தாலும் அந்த அரசாங்கத்தை எதிர்த்து நின்று  தட்டி கேட்கவேண்டும். இதற்காக செய்யும் போராட்டம் வெறும் கண்துடைப்பு போராட்டமாக இல்லாமல் அந்த போராட்டத்தின் மூலமாக மது கடை திறந்த புன்னியவான்களெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஊரைவிட்டே ஓடவேண்டும். அப்படி இருக்க வேண்டும் போராட்டம். கமல ஹாசனின் படத்தைத் தடை செய்ய கோரி எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்த்தைப் போன்று சேர்ந்து செய்தால்தான் சாத்தியப்படும். நாம் செய்யும் போராட்டத்தின் மூலமாக எல்லாமே ஸ்தம்பிக்கவேண்டும் எதுவும் இயங்ககூடாது. அப்பொழுதுதான் எதையும் சாதிக்க முடியும். ஒற்றுமை இல்லாத கோஷங்களாலும் ஆர்பாட்டங்களாலும், ஹர்த்தால்களாலும் எதையும் சாதிக்க முடியாது. 

இது போன்ற பொது காரியங்களுக்கு மட்டுமாவது எல்லா இயக்கத்தவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு தலைமைக்கு கீழ் கட்டுபட்டு போராடுங்கள். போராட்டத்தில் உயிரோட்டமும் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் நமதூரில் இத்தனை இயக்கங்கள் இருந்து பிரையோஜனமில்லை என்றும், இருக்கும் இயக்கங்கள் யாவும் வெத்து இயக்கங்கள் என்றுதான் சொல்லவேண்டும். இயக்கங்கள் என்பது எதற்காக? சமுதாயத்திற்கு வரும் இதுபோன்ற தீங்குகளை வரவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இயக்கங்கள் தேவையா? அதற்கு நாம் கொடி பிடித்து நம்முடைய நேரத்தையும் பணத்தையும் வீனடிக்க வேண்டுமா ஒவ்வொருவரும் இதை சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

சிறுவர்களும், வாலிபர்களும், வயதில் மூத்தவர்களும் போதைகளுக்கு அடிமையாகும் போக்கை அரசாங்கமே நின்று செய்வதின் காரணம் அரசியல் வாதிகளுக்கு கணக்கில்லாமல் பெருவாரியான பணம் கொள்ளையடிக்க உதவும் தொழில்களில் இதுவும் ஒன்று., அந்த தொழிலை (சாராயக் கடையை) நமதூரிலும்  திறக்க அனுமதித்ததும் நம் சமுதாயத்தவர்களை போதைகளுக்கு அடிமையாக்கும் போக்கை நாம் கண்டும் காணாமல் இருப்பது நமது கையாலாந்த் தன்மையே. இந்த போதை வஸ்துக்களினால் எண்ணற்ற பிரட்சனைகள் உருவாகின்றன, அதில் பார்வை சம்பந்தமன பிரட்சனைகள் முக்கிய அங்கம்வகித்து இந்த போதை வஸ்த்துக்களால் “கண்கள் இரண்டும்” பெரிதும் பாதிக்கபடுவதை யாரும் உணர முடியாத கசப்பான உண்மை இருப்பதை யாரும் அறியமாட்டார்கள்..

போதைக் கலாச்சாரத்தில் மூழ்குவோரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை வைத்து செயல்படும் இயக்கம் தானாக வளரும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பதை கேள்விபட்டதில்லையா? இது என்ன சும்மா உவமைக்காகவோ அடுக்கு மொழிக்காகவோ அல்லது பழமொழியாகவோ  சொல்லப்பட்ட வார்த்தையல்ல. இதற்கு உள் அர்த்தம் நிறையவே இருக்கின்றது.  இன்று ஊரார் பிள்ளையைப் போதைக்கு அடிமையாகாமல் நீ பார்த்துக்கொண்டால் உன்பிள்ளை போதைக்கு அடிமையாகாமலே அடுத்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். 

இன்னொரு கூட்டம் யாரை பற்றியும் கவலைப்படுவதில்லை.  யார் எக்கேடு கெட்டால் நமகென்ன?  நமக்கு ஏன் ஊர் வம்பு என்று ஒவ்வொருத்தரும் ஒதுங்கி எது நடந்தாலும் எருமை மாட்டின்மீது மழைபொழிவது போன்று சமுதாயத்தின் மீது சொரனையற்று நிற்பதினால்தான் நமது சமுதாயத்தில் ஏகப்பட்ட க்ரைம்ஸ் தாராளமாக்கப்பட்டுள்ளது. சமுதாயம் கெடுவதினால் நம்து பிள்ளைகளும்தான்  கெட்டுப் போகின்றன என்பதை நன்கு சிந்திக்க தவறுகின்றனர். பிறர் நம்மை பார்த்து ஏளனமாக பேசுவதையும் ஏளனமாக சிரிப்பதையும் அனுமதிப்பீர்களா?

கை கொட்டி சிரிப்பார்கள் 
ஊரார் சிரிப்பார்கள் 

எப்பொழுது? போதைகளுக்கு அடிமயாகும் வரை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு போதைக்கு அடிமையானவன் சீரழிந்து போகும்போது கைகொட்டி சிரிப்பார்கள், ஊரார் சிரிப்பார்கள். நமதூரில் நடைபெறும் கலாச்சார சீர்கேடுகளில் இதுவும் ஒன்று இதை முற்றிலும் எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  

இன்னும் ஒன்று மனம் பிசகி அதிரைக்கு வருபவர்களையும் அதிரையிலேயே மனம் பிசகி வசித்துவரும் சகோதரர்களையும் இவர்களின் கோனப்பார்வையால் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல்  நையபுடைத்து கல்லால் அடித்து துன்புறுத்தி முழு கிருக்கனாக போகும்வரை தமது முழு பங்களிப்பையும் தாராளமாய் அள்ளித் தருகின்றார்கள், இது நமதூர் வாசிகளின் சிறப்பு அம்சங்கள். என்று  திருந்துமோ நம் சமுதாயம்

கட்டுப்பாடற்ற ஊர். காட்டுப்பாடு இழந்த சமுதாயம். இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்ப்பொழுது?

நமது சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் பற்றி சில கேள்விகள்

குடும்பத்தில் தலைவன்  இருக்கின்றாரா?           இருக்கின்றது ஆனா.........ல்
குடும்பத்தில் கட்டுபாடு இருக்கின்றதா?               இருக்கின்றது ஆனா.........ல்
தெருவில் தெரு கட்டுப்பாடு இருக்கின்றதா?     இருக்கின்றது ஆனா.........ல்
ஏதாவது சங்கத்தின் கட்டுப்பாடு?                             இருக்கின்றது ஆனா.........ல்
ஊர் கட்டுப்பாடு இருக்கின்றதா?                               இருக்கின்றது ஆனா.........ல்

இருக்கின்றது ஆனா.........ல் என்ன? கட்டுப்பட மாட்டோம் இதுதான் நமது சமுதாயத்தின் இன்றைய நிலமை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

தடி எடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்களாக போனதினால்தான் அதிராம்பட்டினம் கட்டுப்பாடு இழந்து குட்டிச் சுவராகி நிற்கின்றது. 

நமது சமுதாயத்தில் பொதுமக்களின்  கண்களுக்கு விருந்தளிக்கின்றோம் என்றும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுக்கின்றோம் என்றும் அனுமதிக்கப்படாத செயல்களான கோவில் திருவிழாக்களில் அரங்கேறும் காட்சிகளை  சில அறிவற்ற ஜீவிகள் தர்ஹாவில் கந்தூரி என்ற பெயரால் அரங்கேற்றி பாவங்களை  சம்பாதிப்பது ஒரு பக்கம் 

இன்னொரு பக்கம்   மாற்று மதத்தில் கோவில் திருவிழாவில் நடப்பது போன்று நமது சமுதாயத்திலும் இரண்டு பிரிவினர் கந்தூரி எடுப்பது நீயா? நானா? என்ற போட்டி பொறாமையால்  வருடா வருடம் அரங்கேறும் அவலங்கள்.  முறியும் உறவுகள் தொடர்ந்து பகமை,  வம்பு வளர்ப்பதற்காக உருவாகும் குடிகாரர்கள், முரடர்கள்  சொல்லி மாலாது. நமது சமுதாயம் முரடர்கள் அற்ற சமுதாயமல்லவா இப்படிபட்ட தர்கா பேர்வழிகளால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்படும் கலங்கத்தை இவர்களால் துடைத்து தரமுடியுமா? மாற்றார்கள் நம்மை பார்த்து நம்மிடம் உள்ள எல்லா விசயங்களும் முஸ்லீம்களிடம் இருக்கின்றது என்று நினக்க மாட்டார்களா? நாம் செய்யும் இந்த செயல்கள் அவர்களின் கண்ணை மறைத்துவிடுமா? 

இப்படி கட்டுப்பாடற்று சிந்திக்க தவறும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எவற்றை சாதிக்கப் போகின்றோம் எதிர்கால சந்ததியினருக்கு எவற்றை  போதிக்க போகின்றோம் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. அல்லாஹ்தான் எல்லோரையும்  அவர்கள் செய்யும் தவறுகளை உணரவைத்து ஒவ்வொருத்தரும் சுய வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் வெற்றியடைய உதவி செய்வானாக ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வரும் (8-வது) தொடரில் கண்களின் வேதனையும் சோதனையும் இடம் பெறும்
தொடரும்...
அதிரைமன்சூர்

6 Responses So Far:

Shameed said...

கண்களின் பார்வை அகண்டு கொண்டே போகின்றது தொடருட்டும் உங்கள் எழுத்துப்பணி

sabeer.abushahruk said...

இந்த வாரம் சரியான கோபப் பார்வை

Ahamed irshad said...

கண்கள் பற்றிய உங்கள் பார்வை சிறப்பாக இருக்கிறது மன்சூர் காக்கா... இதற்க்கு முந்திய கட்டுரைகளை படிக்கனும்...

ZAKIR HUSSAIN said...

கண்கள் சிவந்த பார்வை!!

Ebrahim Ansari said...

//இவ்வளவு மோசமான உடல் நலகேடுகளை விளைவிக்கும் போதை பொருள்களை விற்கும் சாரயக்கடைக்கு அதிராம்பட்டினத்தில் அனுமதி அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று கடைகளுக்கு அனுமதி. இதை தட்டி கேட்டு குட்டிவைப்பதற்கு அதிராம்பட்டினத்தில் யாருக்கும் திரானியில்லை. //

திராணியில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் . இத்தனை மார்க்க பயான்கள் நடந்தென்ன? ஜாவியாவில் புகாரி சரீப் ஓதி என்ன? மாலை நேரங்களில் இராஜாமடம் செல்லும் சாலை ஓரப் பாலங்களிலும் வயல வெளிகளிலும் நமது இளைஞர்களில் ஒரு சிலர் அமர்ந்து அருந்தி அரட்டை அடிக்கிறார்களே! நாம் வெட்கப்பட வேண்டாமா?

பெருநாள் தினங்களில் இந்தக் கடைகளில் அமோக விற்பனை என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றனவே காரணம் என்ன?

கடைகளை மூடச்சொல்லி போராட்டம் நடத்துபவர்களே முதலில் கடைக்குப் போய் தாகசாந்தி செய்த பிறகே போராட்டக் காலத்துக்கு வருகிறார்களே! வெட்கக்கேடு. பெரிய மனிதர்கள் தாங்கள் வீடுகளில் பார்ட்டி வைக்கிறார்களே! சமூக அவலத்துக்கு சிறுகச்சிறுக அங்கீகாரம் கிடைத்துக் கொண்டு இருப்பது வெட்கித்தலை குனிய வேண்டிய விஷயம்.

கண்கள் சிவந்து விட்டனவே. ! பாராட்டுக்கள் தம்பி.

KALAM SHAICK ABDUL KADER said...

”கண்ணால் காண்பது பொய்” என்பதை விடக் கண்ணைப் பற்றி இவ்வளவு விடயங்கள் அறியாமல் போன வாழ்க்கையே பொய் என்று கருதலாம்; அந்த அளவுக்குக் கூரியப் பாரவையுடன் எழுதும் இனிய நண்பன் மன்சூரின் அறிவும் கூரானது என்பதற்கு இத்தொடர் ஒரு சான்றாகும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு