Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாத்திற்கு எதிரான திரிபு வாதமும், எதிர் குரலும் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2013 | , , , , ,

சகோதரர் எச்.பீர்முஹம்மது தங்களுக்கு இறைபுறத்திலிருந்தும் மேலும் எனது சாந்தியும் சமாதானமும், நேரிய சிந்தனையும் தூய இஸ்லாமிய எண்ணங்களும் உண்டாகட்டும் என்று இறைவனிடம் பிராத்தித்தவனாக  

தாங்கள் இந்து பத்திரிகையில்  October 10, 2013 அன்று எழுதிய "பயங்கரவாதத்தின் வேர்கள்" கட்டுரை பொது புத்தியுடையவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபடுவதால், இஸ்லாத்திற்கு எதிரான திரிபு வாதமாகவே கருத முடிகின்றது என்பதால் என் எதிர் குரலை இங்கு பதிவு செய்கின்றேன் 

Catch #1 //தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாக மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு பயங்கரவாதத்தின் வேர்கள்குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதத்தை //

do Try # தமிழ்நாட்டில் எந்த கொலையும் நடக்கவில்லை ஆனால் இந்துத்துவாவை சேர்ந்தவர்கள் மட்டுமே கொலை செய்யப் படுகின்றார்கள் என்ற தோற்றத்தை பாசிச இந்துத்துவ வாதிகள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கூவுவதை அப்படியே கட்டுரையாளரும் வழிமொழிகின்றார் அதுவும் அவை அனைத்தையும் இஸ்லாமியர்களே செய்கின்றார்கள் என்று அக்மார்க் முத்திரையுடன் ஆரம்பிக்கின்றார் கட்டுரையாளர் இவை போன்ற சொல்லாடல்கள் ஓர் குறிப்பிட்ட சமுகத்தின்மீது திட்டமிட்டு அரச மற்றும் ஊடக பயங்கரவாதிகளால்  திணிக்கப்படும் பழிச்சுமையை தன் பொதுபுத்தியிலிருந்து விலகிநின்று பாசிச சிந்தனைக்கு உரமூட்டுகின்றார் பீர்.நவீன காலத்து ஊடக நம்பிக்கையாளர் (Media Believer) எச்.பீர்முஹம்மது போன்றோர் அதன் நம்பிக்கைக்கு பாத்திரமாக நச்சுக் கருத்துக்களை பாமர வாசகர்கள் மேல் அள்ளி வீசிகின்றனர்.  இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தியாவில் யாரோ ஒருவன் கொலைசெய்து  கையும் களவுமாக பிடிப்பட்டாலும் காவல்துறையும் ஊடகமும், நீ அந்த கொலையை செய்யலப்பா  இது முஸ்லிம்(தீவிர வாதிகள்) செய்தது என்று மாற்றியமைக்கப்படும் காட்சிகளை அறிவு ஜீவிகள், பொதுநலவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களும் வாயிருந்தும் ஊமையாக. கையிருந்தும் முடவனாக மாற்றப் படுவார்கள் இது போன்ற பல பழிச்சுமைகள்  சுமக்க அதை துணிவுடன் எதிர் கொள்ளும் பக்குவம் முஸ்லிம்களுக்கு என்றும் புதிதல்ல அரச மற்றும் ஊடக பயங்கர வாதிகள் ஓர் குறிப்பிட்ட சமுகத்தின் மீது பழி சுமத்தும் ஈனச் செயல்களுக்கு மாற்றமாக உண்மையான எதார்த்தமான நடப்புகளை கீழே இணைத்துள்ள லிங்கில் பார்த்துக் கொள்ளலாம் 



Catch #2 //‘உலகில் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையிலான போராட்டம்’ என்கிறார் அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.//

do Try # மத்திய கிழக்கு நாடுகளை ஒரே ஏவுகணையில் ஆயிரக் கணக்காண குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் போன்ற ஏதும் அறியா அப்பாவிகளை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் (மேற்கத்திய) முதலாளியத்துவ சர்வாதிகாரத்தின் போக்கை கட்டுரையளர் எத்தகைய பயங்கர வாதத்தோடு ஒப்பீட்டுக் கொள்ளப் போகின்றார். உலக பயங்கரவாத செயல்களின் மொத்த குத்தகையை அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் அதன் நேச நாடுகளின் கொடுரச் செயல்கள் வண்டுதுளைத்த பழச்சோலைகள் போல் மொத்த அரபுலகமும் உருக்குலைந்த பிரதேசமாக மாறி இருப்பதை எந்த பயங்கரவாத எதிர்ப்பாளரும் கண்டுக் கொள்வதில்லையே ஏன்? அநியாயக் காரர்களின் பீரங்கிக்கும், கொத்துக் கொத்தாக கொள்ளும் கிலேட்சர் பாமுக்கும் எதிராக கல்லெறிபவர்கள் தீவிர வாதிகளா? மேற் குறிப்பிட்ட அநாகரிக செயல்களுக்கு அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி பார்வை எப்படியோ?  

Catch #3 //அவர்களே பின்னர் தலிபான்களாக உருமாறி,// 

do Try # ஒரு நாட்டுக்கு எதிரான அந்நிய சக்திகளை எதிர்க்க ஆரம்பிக்கப்பட்ட தலிபான் என்ற மாணவர் படை, அவை பிற்காலத்தில் மேற்கத்திய ஆக்கிரமிப்பு அரசுகளால் தீவிரவாதிகள் என்று சித்தரித்து முத்திரை குத்தப்படுகின்றது. பொதுபுத்தி உள்ளவர்களுக்கு புரியும் அமெரிக்காவும் அல்கெய்தவும் வெவ்வேறல்ல என்று. மேற்கத்திய கூட்டுப் படைகள் கால் வைத்த இடமெல்லாம் அம்மக்களிடம் பிரிவினைவாத சிந்தனையை உரமிட்டு, வேறூண்ட வைத்து சொந்த மக்களையே கருவறுக்கும் செயல் இந்தியா, பாக்கிஸ்தான், மேலும் அரபுலகங்கிலும் புற்றுநோயைப் போல் பரவ செய்த பெருமை பிரிட்டிஸ் அமெரிக்க  கூட்டுப் படைகளின் தந்திரமே என்பதை உங்கள் விஸ்வரூப சினிமா தலத்திற்கு ஏன் இன்னும் புரியவில்லை    

Catch #4 //சவூதி அரேபியாவில் உருவான தீவிர இஸ்லாமியக் கோட்பாடான வஹ்ஹாபியம்  இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடித் தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம்  //  

do Try # அன்றைய கேடு கெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ்  முஸ்லிம் நாடுகள் இருந்த போது   இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள், இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள், அக்கிரமங்கள் கட்டவிழ்த்தபட்டன மேலும் இஸ்லாத்தின் முதல் படிநிலையான  ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான இணைவைப்புகள், நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு இறைவனுக்கு இணைவத்தலும் மேலும் சூபியிசம் பெயரில் கணக்கிலடங்காத இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரான வழிபாடுகள் இஸ்லாமிய வேடமேற்ற சில யூத, கிருத்துவ சிந்தனை வேடதரிகளால் அறங்கேறின.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக்கு நிகராக ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் இறைவனுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.

இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது.

கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் சவூதி அரசாங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் முஹம்மத் (S/o அப்துல் வஹ்ஹாப்) என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் இறைவனுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். இறைவனுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார். 

ஓரிறை கொள்கைக்கு எதிரான தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும், இஸ்லாத்தின்  பெயரால் நடைப் பெற்ற மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள், அக்கிரமங்களை  ஒழித்து கட்டியதாலும் மேலும் ஓர் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று முஹம்மத் (பின் அப்துல் வஹ்ஹாப்) போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப் படுகின்றனர். ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப். இவரது பெயர் முஹம்மத் ஆகும். முஹம்மதீ என்று பெயர் சூட்டினால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி தனிமைப்படுத்த முயன்றனர். ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல.வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள். நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. மூட நம்பிக்கைகளை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீர்ர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். பெருமிதப்படும் வரலாறு சமைத்தவர். அவர் சந்தித்து போன்ற அடக்குமுறைகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது. இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் இப்னு சவூதையும் இப்னு அப்துல் வஹ்ஹாபயும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது. அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்து தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதை மறந்து விட முடியாது. நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹ்ஹம்த் பின் அப்துல் வஹ்ஹாப். ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்ததால் அதை சுட்டிக்காட்டி ஏகத்துவவாதிகள் நிராகரித்துள்ளார்கள். 

Catch #5 //ஜிஹாத் மற்றும் காபிர் என்ற இரு புனிதச் சொல்லாடல்கள் இதன் அரங்குக்குள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. //

do Try # இஸ்லாத்தின் ஓரிறை கொள்கைக்கு மாற்றமான "இறைமறுப்பாளர்" என்ற தமிழ் பதத்திற்கான காபிர் என்ற அரபிச் சொல்லும், உரிமைக்காக, சமூக அநீதிக்கு எதிராக அல்லது நியாயத்திர்க்காக போராடு என்ற (ஜிஹாத்) என்ற அராபிய சொல்லும் இன்று மேற்கத்திய மற்றும் பாசிச சித்தாந்தவாதிகளால் சொரியூட்டப்பட்டு, அதை பயங்கரவாத சொல்லாக மாற்றி இஸ்லாமிய கொள்கைக்கும் அதனை தூயவடிவில் பின்பற்ற நினைக்கும் மக்களின்மேல் இட்டுக்கட்டி சுமத்தி இஸ்லாத்தின் மீதுள்ள தன் அரிப்பை இந்த பாசிச விஷமிகள் இதன் மூலம் தனது கணக்கை சரி செய்து கொள்கின்றனர்.  உரிமைக்காக, சமூக  அநீதிக்கு எதிராக அல்லது நியாயத்திர்க்காக போராடு (ஜிஹாத்)  என்ற சொல்லை 1400 வருடத் திற்கு முன்பு அருளப்பட்ட குரானுக்கு போகுமுன் கடந்த நூற்றாண்டின் நடைபெற்ற காந்தியடிகள், நேதாஜி, சேகுவரே  போன்றோர்களின் சமூக  அநீதிக்கு எதிராக கலம்கண்ட போராட்ட குணங்களை முஹம்மது நபியவர்களின் போராட்ட குணத்தோடு பொது புத்தி கண்ணோட்டத்தோடு உரசி சரிபார்த்துக் கொள்ளவும்.  சமூக அநீதிக்கு எதிராக களத்தில் இறங்கி போராட எண்ணமில்லாமல் அல்லது அக்கறையில்லாமல் மரணிக்கும்  ஒவ்வொரு மனிதனும் கோழைகளாகத்தான் இவ்வுலகை விட்டு பிரிகின்றான் என்பது பல அறிஞர்களின் நோக்கு. 

Catch #6 //இந்நிலையில், தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது//

do Try # இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு பிறகு வந்த இரண்டாம் தலைமுறை லீக்குகள் இரண்டு மூன்று சட்டமன்ற பாராளுமன்ற இருக்கைகளை அலங்கரிப் பதற்காக ஒட்டுமொத்த இசுலாமியர்களின் வாழ்வாதார அடிப்படை பிரச்சனைகளான கல்வி வேலைவாய்ப்புகளில் கவணம் செலுத்தாமல், அதற்காக அரசு ஆள்பவர்களிடம் போரடி வாங்க திராணியில்லாமல் சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு மாற்றமாக  இறந்த தலைவர்கள் பெயரில் மணி மண்டபம், தபால் தலை, முஹரம் விடுமுறை, தர்ஹாகளுக்கு சந்தானம் பூசுதல் போன்ற சமூகத்திற்கு பயனற்ற திட்டங்களை அரசுகள் ஓட்டுக்காக பாமர இஸ்லாமியர்களை அடகு வைத்து ஏமற்றியததால் வெறுப் படைந்த அறிவார்ந்த இளைங்கர்களின் கூட்டு முயற்சியே தமுமுக மற்றும் அதனை பின் வந்த இயக்கங்கள்  

Catch #7 //தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. //

do Try # கோயபல்ஸ் கட்டுரையாளர் பீர் இங்கு அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து விட்டு தமிழ் நாட்டில் அண்ணன் தம்பிகளாக வாழும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் தமிழர்கள் யார்? என்ற ஓர் அச்ச உணர்வை, பதற்றத்தை ஏற்படுத்த உச்சமாக ஆதாரமற்ற விஷ கருத்துக்களை  திணிக்க முயற்சி செய்கிறார். அவரின் பிம்பம் இந்துத்வா பாசிச சக்திகளின் பின்புலமாக இருக்குமோ என சாதாரண வாசகனையும் அச்சப்பட வைக்கிறது. 

அய்யா பீர் அவர்களே, நீங்கள் தீவிரவாத முத்திரை குத்த நினைக்கும் இயக்கங்கள் பொது சமூகத்திற்கு தினந்தோறும் செய்யும் மனிதாபிமான சேவைகளை திட்டமிட்டு கச்சிதமாக புறக்கணித்தற்கு காரணம் என்னவோ? உதாரணத்திற்கு சில, ஆயிரக் கணக்கானவர்களை உயிர் பலி வாங்கிய சுனாமி அனர்த்தத்திற்கு உடனடியாக அந்த பேரிடர் இடர் நீங்கும் வரை அனைத்து உதவிகளையும் செய்தவர்கள், தினந்தோறும் இரத்த தான முகாம்கள், பட்டி தொட்டியெங்கும் ஆம்புலன்ஸ் வாகன அர்பணிப்புகள் போன்றவைகளில் சில மட்டுமே இங்கு குறிப்பிடுகின்றேன்,  மனிதாபிமான சேவைகளை கச்சிதமாக புறக்கணித்தது மட்டுமல்லாமல் அம்மக்களின் மீது தீவிரவாத பட்டம் சூட்டி, வெந்த புண்ணில் மேல் தீ மூட்டி மகிழ காரணம் என்னவோ?   நிச்சயமாக உங்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் விருதுகள் வீடு தேடி வரும் நிம்மதியா வட இந்திய உருது பேசும் முஸ்லிம்கள், உருது ஹிந்தி பேச தெரியா தமிழ் பேசும் முஸ்லீமை பார்த்து கேட்கும் "ஆப் முஸ்லிம் க்யா உர்து நஹி மாலும்" அப்பாவித் தனத்தை உங்களின் வரிகளில் உணர முடிகின்றது.

Catch #8 //பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது,  தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் //. 

do Try # ஆண்களுக்கே உரித்தான கம்பிரமான முக கேசங்களான தாடியை எடுப்பது என்பது தனிமனித உரிமையோ மற்ற பாலினதிர்ற்கு மாற்றாக முக கேசங்களான தாடியை வளர்த்து வசீகரிப்பதும் தனி மனித சுதந்திரமே இதையும் தீவிரவாதத்தோடு முடிச்சு போட்டு உங்களின் சொரி நோயுக்கு களிம்பு தடவ நினைக்காதீர். தாடிவைத்த திருவள்ளுவனும், பெரியாரும் மற்றும் உலகின் பல்வேறு காலங்களில் தோன்றிய அனைத்து அறிஞகர்களும் தீவிர வாத சிந்தனை உள்ளவர்கள் என்று நீங்கள் எண்ணினால் தாடிவைத்த அறிவார்ந்த முஸ்லிம் சமூகமும் அதே வரிசையில் இடம் பிடிக்க பெருமைபடுவான்.

Catch #9 //தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம்//. 

do Try # உண்மையான முஸ்லிம்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள் தங்களை சாதி, மொழி,  இன போன்ற குறுகிய பிராந்திய அடையாளங்களுக்குள் ஒளிந்துக் கொள்ளாமல் உலக சமூகத்தின் மைய நிரோட்டத்தில் ஒழுங்குற கலக்கும் கொள்கைக்கு சொந்தகாரர்கள். இதற்கு உதாரணமாக இப்புனித ஹஜ்ஜு மாதத்தில் மக்கா நகரில் இலட்ச கணக்காண பல் இன சமூகமக்கள், கருப்பு வெள்ளை ஏழை பணக்காரன் வேறுபாடு பார்க்காமல் ஒன்று கூடி ஓரிறையை சகோதரத்துவத்தோடு இறையஞ்சுவார்கள் . 

The End # இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே பீர்முஹம்மது உங்களின் பொது புத்தியுள்ள நேர்மையான மனிதாபிமான எதிர்காலம் ஆரம்பிக்கும்.

தங்களின் சகோதரனாக !

மு அ ஹாலித்
சிட்டினியிலிருந்து

17 Responses So Far:

Adirai pasanga😎 said...

திரிபுவாதத்திற்கான எதிர் குரல் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.
பீர் முஹம்மது என்ற பெயர் தாங்கி முஸ்லிமின் இந்த பதிவு குறித்து அனைத்து முஸ்லிம்களும் கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்.

நமக்குள்ளே ஒற்றுமையில்லையெனில் நமக்கேதான் கேடு.

sabeer.abushahruk said...

பீர் பாயின் அரை வேக்காட்டு கட்டுரை உள்நோக்கமுடையதாக, உலக தேவைகளுக்காக யாருக்கோ ஒத்தூதுவதாகத் தெரிகிறதே தவிர ஒரு அறிவாளியின் ஆய்வாகத் தெரியவில்லை.

சகோ ஹாலித் அவர்களின் விளக்கங்களே அந்தாளுக்கு சரியான பதிலடி.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். எச்(சி)பீரின் உச்சக்கட்ட உலறல். சகோ.ஹாலிதின் அறிவுபூர்வமான ஆதரத்துடன் தக்க பதில் அடி அருமை. அல்ஹம்துலில்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ. ஹாலிதின் பிடி அந்த ஆளுக்கு வைத்த நல்ல வெடி(பீர்)
முஸ்லிம் பெயருடன் பொதுவில் எழுத முதலில் இஸ்லாமிய அறிவும் அதன் வரலாற்று அறிவும் முழுக்க வேண்டும். அது இல்லாமல் எழுத நினைப்பது காவிகளிடம் விருது வாங்க மட்டுமே. இந்த மாதிரி ஆட்கள் காவிகளை விட விசமானவர்கள். இந்த மாதிரி ஆட்களின் முறண்பாடுகளை பதிந்து விமர்சனம் பெறுமுன் ஹிந்து பத்திரிக்கை பரிசீலித்திருக்க வேண்டும்.

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

பீர்...யார்?.....ஒட்டுமொத்த இந்திய முஸ்லீம்களுக்கும் அத்தாரிட்டியா?

உளர்வதை விட்டு உணர்ந்து ஒரு கட்டுரை பீர் மறுபடியும் எழுத வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை ஹாலித்கள் வந்தாலும் இதுபோல் ஆட்களை திருத்த முடியாது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கட்டுரையாளரின் பெயர் முதலில் பீர் என்று வருவதால் போதையில் உளறினால் (அரவேக்காடு) அறிவாளி என்று நினைத்து விட்டார் போலும்.அவருக்கு இஸ்லாம் என்னும் தெளிவான மருந்தைக் கொண்டு போதையை தெளிவுப் படுத்த வேண்டும்.

சகோ: ஹாலிது இது போன்ற நோயாளிகளை கண்டு பிடித்து அதிரை நிருபரில் இழுத்துக் கட்டுங்க.

Ebrahim Ansari said...

கடுமையான ஆட்சேபத்தை தெரிவிக்கபடவேண்டிய கட்டுரைக்கு மிகவும் கடுமையாகவும் பொருத்தமாகவும் அபூ ஹாலித் அவர்கள் பதில் அளித்து இருக்கிறார்கள்.

நான் நினைக்கிறேன் அந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். இப்படி எல்லாம் எழுதினால்தான் இந்துப் பத்திரிகையில் தனது கட்டுரை வெளிவருமென்று அவர் நினைத்து இருக்கலாம்.

இது போன்ற காரணங்களால்தான் இந்து பத்திரிகையில் எனது கட்டுரைகளை வெளியிட அனுப்பும்படி தம்பி கவியன்பன் சொன்ன கருத்தை நானும் தம்பி சபீர் அவர்களும் மறுக்க வேண்டியதாயிற்று.

நமது கழுத்தில் கத்திவைத்தாலும் நம்மால் தாங்க முடியும் ஆனால் இவர்கள் நமது கருத்தில் கத்திவைப்பார்கள்.

அதிரை நிருபரின் நெறியாளர் அவர்கள் , சகோதரர் ஹாலித் அவர்களை இப்படிப் பிற ஊடகங்களில் வரும் நம்மைப் பற்றிய துவேஷமான கட்டுரைகளுக்கு பதில் கட்டுரை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.

Adirai khalid said...

சரியாக சொன்னீர்கள் சகோ.அஹ்மத் தாஹா எங்கெங்கெல்லாம் விஷ கருத்துக்கள் நாட்டப்படுகின்றதோ அங்கெல்லாம் உண்மை என்ற உளிகொண்டு வேரறுப்பது ஒவ்வோர் மானிடர்களுக்கும் கடமை.

ஒற்றுமை என்பது எட்டா கனி ஆனாலும் தற்காலத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காண பழகிக்கொள்வது சாலச்சிறந்தது என் கருத்து

Adirai khalid said...

சகோ.சபீர் சாருக்
பின்னூட்ட வாதியாய் இருந்த என்னை உணர்வூட்ட வைத்தது உங்களை போன்றோரின் ஆக்கங்கள் உங்களை போன்றவர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி தந்த அல்லாஹ் விற்கும் அதிரை நிருபர் குழுமத்திற்கும் என்றென்றும் கடமை பட்டிருக்கின்றேன்.
தங்களுக்கு நேரமிருப்பின் பொது சந்தையில் உங்களின் சிந்தனையை அகல வேறுண்ட வேண்டமென ஓர் பாமர வாசகனாக கேட்டுக் கொள்கின்றேன்.

Adirai khalid said...

சகோ.கிரௌன் தஸ்தகிர்

அஸ்ஸலாமுஅலைக்கும்.// எச்(சி)பீரின் உச்சக்கட்ட உலறல். சகோ.ஹாலிதின் அறிவுபூர்வமான ஆதரத்துடன் தக்க பதில் அடி அருமை. அல்ஹம்துலில்லாஹ்.//

உனது சிந்தனை எழுத்துக்களின் சரவெடி எல்லோரையும் கிளுகிளிப்பின் ஆற்றுவது மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டும் இனி உனது வான வேடிக்கைகளை பொது வெளியிலும் பற்றவைக்க வேண்டும் தவறினால் நம் உண்மையான எண்ணங்கள் புஸ்வானமாகிவிடும்.

Adirai khalid said...

ஜஹபர் சாதிக்

ஜனரஞ்சக பத்திரிக்கைகளுக்கு மனுதர்மம் மட்டுமே தெரியும், பொது தர்மம் என்னவிலை என்று கேட்பார்கள்.

உன் நேரிய சிந்தனையை இஸ்லாமிய அறிவை பொது வெளியில் விதை நாட்ட வேண்டும் ஏனெனில் ஒவ்வொரு ஆக்கங்ககளையும் நுனிப்புல் மேயாமல், அதை ஆழ்ந்து வாசித்து தக்கவாறு கருத்திடுவதை உன் பின்னுட்டத்தின் மூலம் அவதானிக்க முடிகின்றது. உன் நேரிய சிந்தனையை இஸ்லாமிய அறிவை பொது வெளியில் விதை நாட்ட வேண்டும்

Adirai khalid said...

சகோ ஜாகிர்,

எழுதியவர் ஒரு கபுர் முட்டி, இஸ்லாத்தில் வெறுக்கப் பட்ட சூபி யிசத்தை பரப்புபுவர். இவரிடமிருந்து எப்படி தூய இஸ்லாமிய சித்தாந்தத்தை எதிர்பார்க்க முடியும்.

நீங்கள் அனைவரையும் வசீகரிக்கும் அன்றாட நடைமுறை எழுத்துக்கு சொந்தக்காரர் எதிர்காலத்தை பற்றி எந்த கவலையும் வெட்டியாய் ஊர் சுற்றும் இளைய சமுதாயத்தை பற்றி "புள்ள தாட்சி போல் ஊர் சுற்றும் இன்றைய இளைங்கர்கள்" போன்ற வரிகள் இன்றும் மனதில் நிழலாடிக் கொண்டுதான் உள்ளது.
மலேசிய கோடலிகள் பற்றி எழுத காணமே? நேரமிருப்பின் உங்கள் எழுத்துக்களை பரந்த மலேசியாவிலும் தமிழுலகிலும் படர வாழ்த்துக்கள்.

Adirai khalid said...

சகோ லெ மு செ அபுபக்கர்

உன் சமூக அக்கறை எழுத்தில் மட்டுமல்லாமல் கலத்திலும் பணியாற்றியதை அறிந்தவன். நாம் அனைவரும் சேர்ந்தே பொது வெளியில் களை எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

Adirai khalid said...

சகோ இபுராஹிம் அன்சாரி காக்க,

தங்களுடைய எழுச்சி மிக்க எழுத்தாயுதம் என் போன்ற கார்பன் வாசகனையும் பட்டை தீட்டிக் மிளிர வைக்கின்றது. தாங்கள் மனு நீதிக்கு எதிராக வீசிய கருத்தாயுதம் சூத்திரனையும் சூல் கொள்ள வைத்துருக்கும்.

//நமது கழுத்தில் கத்திவைத்தாலும் நம்மால் தாங்க முடியும் ஆனால் இவர்கள் நமது கருத்தில் கத்திவைப்பார்கள்//

உண்மை. ஆனால் ஒதுங்கிநின்றாலும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தன் விஷ கருத்துக்களால் புற்றுநோய்போல் பொது புத்தியில் புரையோடி நம்மையும் அந்த நோயில் பங்குபெற வைத்து வெற்றி பெற்றுவிடுவார்கள். இப்பொழுதே விழித்துக் கொள்ளாவிடில் நம்மை கொன்று விடுவார்கள்.

ஒவ்வொரு குழுமத்திற்கும், ஆக்கத்திற்கும் நெறிமுறை தேவை மறுக்கவில்லை ஆனால் அதே நெறிமுறைகளால் கழுத்தை நெறிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஏனெனில்

நீங்கள் வரைந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் சகோ. அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோள் போன்றே

//“தி இந்து” தமிழ் நாளிதழில் “சிந்தனைக் களம்- சிறப்புக் கட்டுரைகள்” என்னும் பகுதிக்கு இக்கட்டுரையை உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதிகமாகச் சகோதரச் சமய மக்கள்- அறிவுடையோர்ப் படிக்கும் தளமாகக் காண்கிறேன். என்னால் ஆங்குக் கட்டுரை எழுதியிட வேண்டும் என்ற பேரவாவுடன் இருந்தாலும், ஏனோ, எனக்குக் கவிதையைத் தாண்டி, கட்டுரை வடிவத்தில் எழுத மனம் இல்லை; அதனால் நல்ல கட்டுரைகட்குப் பின்னூட்டங்கள் மட்டுமே ஆங்கு இடுகின்றேன். தங்களின் கட்டுரை உறுதியாக மிகப் பெரும் வரவேற்பையும் , மாற்றத்தையும் பெறும் என்பதும் என் கணிப்பாகும்//

என் வேண்டுகோள் மற்றும் அவா.

நம் பின் தங்கிய சமுதாயத்தின் அறிவீனத்தையும் இயலாமையையும் பயன்படுத்தி பாசிச சக்திகள் உண்மைக்கு புறம்பான பொய்யையும் புரட்டையும் எழுதி சாதாரண பாமர மக்கள் முதல் அறிவுஜீவிகள் என அறியப்படும் பொதுநலவாதிகள்வரை நம்பும் அளவிற்கு ஒரு கருத்து திணிப்பை அல்லது கருத்துருவாக்கத்தை திட்டமிட்டு செவ்வனே செய்து வருவதை அறிவீர்கள் ஆதலால் நம் இளைய சமுதாயத்தை அடுத்த கட்டத்தை நோக்கி இழுத்து செல்லும் பொறுப்பும் அவசியமும் உங்களை போன்ற think tank மூத்த சிந்தனையாளர்களுக்கு உண்டு என்பதை நம்பிக்கையுடன் வழி கட்டளுக்காக காத்திருக்கின்றோம்

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட சிந்தனையில் நம்மை, நம் சமுதாயத்தை பலி வாங்கும் ஊடகங்களுக்கு எதிராக இன்ஷாஅல்லாஹ் கருத்துப்போர் தொடுபோம் இச்சிந்தனை யுத்தத்தில் பங்கு பெற நானறிந்த நெறியாளர்கள் நெய்னா தம்பி, தாஜுத்தீன் மேலும் சபீர்.சாருக் MSM சொந்தங்கள் , LMS சொந்தங்கள், சகோ.அப்துல் கலாம் சகோ.ஜாகிர் ஹுசைன், சகோ. சாகுல் ஹமித், அஹமத் அமீன், கிரௌன் சகோதர்கள், MMS சொந்தங்கள், என்னால் குறிப்பிடாமல் விடுபட்ட என் இனிய சமுதாய சொந்தங்கள் அணைவரையும் ஒருங்கினைப்போம். திட்டமிடுவோம் அதில் இறைவன் உதவியால் வெற்றி காண்போம்

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே!
எனது மகிழ்ச்சியை பகிர விரும்புகிறேன். அண்மைக் காலத்தில் அதிரை நிருபருக்கு எழுத்துலகில் வித்தைகள காட்டும் சில வித்தகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

தம்பிகள் அபூ ஆசிப், மன்சூர் இவர்களைத் தொடர்ந்து ஹாலித் .

இவர்களைக் கண்டுபிடித்து கொண்டு வந்து சேர்த்து பதிவுகளை வெளியிடும் தம்பி நெறியாளர் அவர்களுக்கும் இந்த அதிரை நிருபர் துறை முகத்துக்கு வந்துள்ள புதிய சரக்குகள் நிறைந்த கப்பல்களுக்கும் வாழ்த்துக்களும் வரவேற்பும்.

இவர்களின் வரவும் பதிவுகளும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Anonymous said...

இந்த கட்டுரையே 'தி இந்து ' நாளிதழுக்கு அனுப்புங்கள். நிச்சயம் பிரசுரிப்பார்கள்.

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு